Wednesday, November 30, 2022

RHINO HORN IS NOT VIAGRA BUT PROTEIN


RHINO HORN IS NOTHING BUT KERATIN A PROTEIN

காண்டாமிருகக் கொம்புகளா

வயாக்ராவா ?

 

காண்டாமிருகக் கொம்புகள் வயாக்ராவை ஒரங்கட்டிவிடும் என்பது உண்மையா ? அப்படி அந்தக் கொம்புகளில் என்னதான் இருக்கிறது ? விலை, ஒற்றைக் கொம்புக்கு அதிகமா ? இரட்டை கொம்புக்கு அதிகமா ? உலகில் எத்தனை வகை காண்டாமிருகங்கள் இருக்கின்றன ? இந்தியக் கா,மி. க்கு இருக்கும் கொம்பு ஒன்றா? இரண்டா ? இப்படி இருபது சுவையான செய்திகளை உங்களுக்காகத் தந்திருக்கிறேன். 

1. உலக அளவில் ஐந்து வகையான காண்டாமிருகங்கள் உள்ளன. இதில் ஆப்பிரிக்காவில் இருப்பவை இரண்டு. ஆசியாவில் இருப்பவை மூன்று.

2. ஆசியாவில் மூன்று வகைக் காண்டாமிருகங்கள் இருக்கின்றன ஒன்று இந்தியாவின் ஒற்றை கொம்பு காண்டாமிருகம். இரண்டாவது சுமத்ரா காண்டாமிருகம். மூன்றாவது ஜாவா காண்டாமிருகம். 

3. ஆப்பிரிக்க காண்டாமிருகங்களில் இரண்டு வகை உண்டு என்று பார்ப்போம். கருப்பு காண்டாமிருகம். இன்னொன்று வெள்ளை. 

4. கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவுக்கு உரியது கருப்பு இனம். இவை இரட்டைக் கொம்பு உடையது. அதிகபட்சமாக இதன் உடல் எடை 1300 கிலோ வரை இருக்கும்.

5. ஆப்பிரிக்க வெள்ளை காண்டாமிருகம், இவற்றை அருகி வரும் இனம் என அறிவித்துள்ளார்கள். இதன் உடல் எடை 2000 முதல் 2,430 கிலோவரை இருக்கும். 

6. சுமத்ரா காண்டாமிருகம் ஆசியாவின் இரண்டில் ஒன்று. இதுதான் மிகவும் சிறிய காண்டாமிருகம். சிவப்பு காவி நிறம் கொண்ட ரோமத்தால் அதன் உடல் முழுக்க மூடியிருக்கும். இதன் அறிவியல் பெயர் டைசெராஸ் பைகார்னிஸ் (DICEROS BICORNIS). 

7. ஜாவன் காண்டாமிருகம். சிறிய ஒற்றைக் கொம்பு உடையது. இதன் அறிவியல் பெயர் ரினோசெராஸ் சோனாடெய்கஸ் (RHINOCEROS SONADAICUS) இதன் எடை 2.3 டன் இருக்கும்.

8. இந்திய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இதன் அறிவியல் பெயர் ரெனோசெரஸ் யூனிகார்ன்ஸ் (RHINOCEROS UNICORNS)என்பது. இந்திய துணை கண்டத்திற்குரியது.

9. இதன் வயது 35 முதல் 45 ஆண்டுகள் ஆண் காண்டாமிருகங்களின் எடை 2200 கிலோ இருக்கும். 

10. எல்லோரும் சொல்லுவது போல காண்டாமிருகத்தின் கொம்புகளில் அப்படி என்னதான் மகத்துவம் இருக்கிறது ? அப்படி என்ன அபூர்வமான     நோய்களைக் குணப்படுத்துகிறது ?

11.காண்டாமிருகத்தின் கொம்புகள் நம்ம விரல் நகம் மாதிரி.ம்ம தலைமுடி மாதிரி. புரதத்துல செஞ்சது. ஒருவகை புரொட்டீன். அதன் பெயர் கெரட்டின்(KERATIN).  

12. இந்த கொம்புத்துகள் புற்றுநோயை குணப்படுத்தும். கீல்வாதத்தை  குணப்படுத்தும். எல்லா  நோய்களையும் குணப்படுத்தும் இது என்று  பரவலாக நம்புகிறார்கள்.

13. ஆனால் அப்படிப்பட்ட மருத்துவ குணங்கள் இதில் ஏதும் இல்லை என்கிறார்கள் தலையில் அரித்து சத்தியம் செய்கிறார்கள் அறிவியல் வல்லுநர்களும் மருத்துவர்களும்.

14. சமீப காலமாக கா.மி. கொம்புகளில், நெக்லஸ், பிரசிலேட்ஸ்,  மணிமாலைகள்,  மோதிரங்கள் கூட செய்து விற்பனை செய்கிறார்கள். அதற்கு ஆனைவிலை குதிரைவிலைசொல்லுகிறார்கள். என்ன விலை சொன்னாலும் சொன்ன விலையை கொடுத்து வாங்க மக்கள் தயார் !

15. மது வகைகளில் இந்த கொம்புப் பொடியைக் கொஞ்சமாய் போட்டு ஹெல்த் ட்ரிங்க்  என்று விற்கிறார்கள். இது ஆண்மைக் குறைபாட்டினை அடுத்த வினாடியே தீர்க்கும் என்கிறார்கள்.

16. அது மட்டும் அல்ல, கொம்புப் பொடிபோட்ட குளிர்பானத்தை கோடீஸ்வரர்கள் குடிக்கக் கொடுக்கிறார்கள். சாதாரண மக்கள் அதற்கு சமீபத்தில் கூட போக முடியாதாம்,  காரணம் அது அவ்வளவு காஸ்ட்லி 

17. “சீன மருத்துவத்தில் எப்போதும் கா.மி. கொம்புகளை செக்ஸ் சமாசாரத்திற்கு பயன்படுத்தியதில்லை என்கிறார் த ரிடர்ன் ஆஃப் த யூனிகார்ன்ஸ் என்ற நூலின் ஆசிரியர்,  ரிக் டைனர்ஸ்டின்”. இவர்

25 ஆண்டுகள் விஞ்ஞானியாக பணியாற்றியவர்

18. “வியட்னாம் ட்ரெடிஷனல் மெடிசன் என்ற நூலை எழுதி மைக்கேல் தாம்சன் தனது நூலில் ரினோக் கொம்புகளை ஆண்மை பெருக்கத்திற்கு வியட்நாமின் பாரம்பரிய மருத்துவம் எப்போதும் பயன்படுத்தியது இல்லை என்று தெளிவாக எழுதி உள்ளார்.

19. பொய்யான விளம்பரங்கள் செய்து எப்படி சம்பாதிக்கிறார்கள் என்று பாருங்கள். ஒரு கிலோ ஆப்பிரிக்க காண்டாமிருக் கொம்புப் பொடியின்  விலை 20000 யூ.எஸ். டாலர்.

20. ஆசியாவின் கா.மி. கொம்புப் பொடியின் ஒரு கிலோவின் விலை நான்கு லட்சம் யுஎஸ் டாலர்,  என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு டாலர் என்பது இந்திய ரூபாயில் இன்றைய மதிப்பு ரூ.81.52 (19.11.22) 

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். 

இந்த கா.மி. கொம்பு பற்றிய தவறான செய்திகளை எப்படி எல்லொருக்கும் புரியவைப்பது எப்படி ? இதற்கு ஏதாவது வழி உங்களுக்குத் தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள். 

மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம், நன்றி, வணக்கம் ! 

பயன் தரும் செய்திகளைப் பகிர்வோம் ? பலபலன் பெறுவோம் !

#RHINICEROSHORNSTRAFFICKING

#APHRODISIACSEXUALSTIMULANT

#RHINOHORNAPHRODISIACMARKET

#POACHINGFORRHINOHORN

#RHINOHORNDEMANDINCHINA&VIETNAM

#RHINOHORNINTERNATIONALTRADE

#GLOBALRHINOPOPULATION

#ERECTILEDYSFUNCTIONDRUGS

#POACHRHINOS

#VAYAGRAA

Tuesday, November 29, 2022

RHINOCEROS HORNS BEST SEX STIMULANT ?

 

காண்டாமிருகக்

கொம்புகள் கடத்தல்


மயிலே மயிலே 

இறகு போடு 

சட்டங்கள்

1. 2021 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஒற்றைக்கொம்பு இந்திய காண்டாமிருகங்கள் மொத்தம் 3 ஆயிரத்து எழுநூறு இருப்பதாக தெரிகிறது

2. காண்டாமிருகங்களுக்கு இயற்கையான எதிரிகள் குறைவு. ஆனால் இவற்றின் இளம் குட்டிகளை அரிதாக புலிகள் கொன்று விடுகின்றன. 

3. இவற்றின் உணவுப் பொருட்கள் என்பவை, இலைகள், புதர்கள் மரக்கிளைகள், பூக்கள், காய்கள், கனிகள் நீர்த்தாவரங்கள் இவைதான். 

4. காண்டாமிருகங்களின் கர்ப்ப காலம் 15.7 மாதங்கள். இரண்டாவது குட்டி ஈனுவதற்கும் 34 முதல் 51 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றன.

5.நம்முடைய வயதில் ஏறத்தாழ பாதிதான் இந்திய காண்டாமிருகங்களின் வயது, அதிகபட்சமாக 40 ஆண்டுகள்.

6. இந்தியாவில் தற்போது உள்ள மொத்த காண்டாமிருகங்களின் சுமார் 70% ஒரிஸ்சவில் காசிரங்கா தேசிய பூங்காவில்தான் உள்ளன.

7. பருவநிலை மாற்றம்,  வாழிட  சீரழிப்பு,  மனித நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக இந்திய காண்டாமிருகங்களை நாம் அதிகம் இழந்து விட்டோம்.

8. 19 மற்றும் 20 ம் நூற்றாண்டுகளில் காண்டாமிருகங்கள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டன. குறிப்பாக வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலத்தில் இந்த வேட்டை அதிகமாக இருந்தது. 

9.பாரம்பரிய சீன மருத்துவத்தில் இதன் கொம்புகள் ஆண்மைக் குறைபாட்டு சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக இன்றுவரை காண்டாமிருகக் கொம்புகளுக்கான வேட்டை தொடர்கிறது என்கிறார்கள்.

10. 1910 ஆம் ஆண்டில் காண்டாமிருக வேட்டை என்பது இந்தியாவில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. 1957ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் அதன் வாழ்விடத்திற்கு பாதுகாப்பு அளித்தது.

11. அதிக எண்ணிக்கையில் காண்டாமிருகங்கள் இந்தியாவிற்குள் தான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அசாமில்தான் காசிரங்கா தேசிய பூங்காவில் 90 சதம் இருப்பதாய்த் தெரிகிறது.

12. ஆப்பிரிக்காவில் சிங்கங்களும் ஆசியாவில் புலிகளும் காண்டாமிருகங்களில் இளம் குட்டிகளை கொன்று உணவாகக் கொள்ளுகின்றன..

13. இவை தவிர சிறுத்தைகள், கழுதைப்புலிகள், காட்டு நாய்கள் மற்றும்  நைல்நதி முதலிகளும் கூட காண்டாமிருக குட்டிகளை வேட்டையாடி விருப்பமுடன் சுவைக்கின்றன.

14. என்னதான் தடுப்புச் சட்டங்கள் இருந்தாலும் குறிப்பாக வியட்நாம் மற்றும் சீனாவில் உள்ள சட்டவிரோதமான குழுக்கள் இந்த காண்டமிருகக் (கா.மி.)கொம்புகள் விற்பனையில் தங்கு தடை இன்றி உலகம் முழுக்க ஈடுபட்டு வருகின்றன.

15. திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற நிலைதான் கா.மி. கொம்பு விற்பனையில் நிலவுகிறது. 

16. உலகம் முழுக்க கடந்த 10 ஆண்டுகளில் 7.5 டன் கா.மி. கொம்புகள் கடத்தலில் பிடிபட்டுள்ளன. 

17. கோவிட் 19 காலகட்டத்தில் கொஞ்சம் குறைவாக இருப்பினும், இந்த கருப்பு வியாபாரம் இதுவரை கனஜோராய் நடந்துதான் வருகிறது. 

18. சைனா, வியட்நாம், மலேசியா, சவுத் ஆப்பிரிக்கா, மொசாம்பிக் ஹாங்காங் ஆகிய 6 நாடுகளில் சட்டவிரோதமான இந்த கா.மி. கொம்புகள் வியாபாரம் விமரிசையாய் நடந்து வருகிறது. 

19. இந்த கா.மி. கொம்புகள் வியாபாரத்தில் வியட்நாம் மூளையாக செயல்படுகிறது. அங்கு சேகரமாகும் கொம்புகளை சீனாவில் இருக்கும் மொத்த வியாபாரிகள் தயக்கமில்லாமல் தாராளமாய் வாங்கி செல்கிறார்கள்.

20. விமானம், கப்பல், கார், லாரி, என்று எவ்வித வாகன வித்தியாசமும் என்று இந்த கா.மி. கொம்புகள் வியாபாரம் தடையில்லா சேவையாக நடந்து கொண்டிருக்கிறது,

21. தற்போது புழக்கத்தில் இருக்கும் மயிலே மயிலே இறகு போடு சட்டங்கள் இருக்கும் வரை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள். 

கா.மி. கொம்புகள் இப்படி கருப்பு வியாபாரமாய் நடப்பதை எப்படித் தடுக்கலாம் ? இதற்கான வழிகள் ஏதாவது புதிதாக உங்களுக்கு புலப்பட்டால் சொல்லுங்களேன்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்

பயனுள்ள செய்திகளைப் பகிர்வோம் !

பலன்பல பெறுவோம் !

#RHINICEROSHORNSTRAFFICKING

#APHRODISIACSEXUALSTIMULANT

#RHINOHORNAPHRODISIACMARKET

#POACHINGFORRHINOHORN

#RHINOHORNDEMANDINCHINA&VIETNAM

#RHINOHORNINTERNATIONALTRADE

#GLOBALRHINOPOPULATION

#ERECTILEDYSFUNCTIONDRUGS

#POACHRHINOS

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...