ஆறும் ஊரும்
உழக்குத் தண்ணீரும்
ஒடாத ஆறா பாலாறு ?
பகுதி 2
அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம்
ஒரு காலத்தில் கேட்டதெல்லாம் தந்தது பாலாறு. அதனால் இதனை அன்று தேனாறு என்று பாடினார்கள். மேற்கிலிருந்து கிழக்காக ஓடியதால் இதனை மேலாறு என்று எழுதினார்கள். இன்று உழக்குத் தண்ணீரும் ஓடாத ஆறாக மாறியதால் இதனை கோளாறு என்கிறார்கள்.
முதல் பாலாறு பதிவில் 11 சுவையான செய்திகளைப் பார்த்தோம், இன்று பாலாறு பற்றிய 12 பயன்தரும் செய்திகளைப் பார்க்கலாம்.
12. தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரில் எத்தனை சதவிகிதம் சுத்திகரிக்கப்பட்ட அல்லது சுத்தப்படுத்தப்பட்ட நீர் என்பது தெரியவில்லை.
13. சுத்திகரிக்கப்படாத தோல் தொழிற்சாலை கழிவு நீரில், சயனைடு, பாதரசம், குரோமியம், போன்ற கனரக உலோக ரசாயனங்கள், கலந்து இருக்க வாய்ப்பு உண்டு என்று சொல்லுகிறார்கள்.
14.அதேசமயம் இந்தியாவின் மொத்த தோல் ஏற்றுமதியில் பிரிக்கப்படாத வேலூர் மாவட்டத்தின் பங்கு மட்டும் 37 சதவீதம் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இது குறைவான அளவில் அல்ல.
15. நீர்நிலைகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் எந்த தொழிற்சாலையும் சுற்றுச்சூழலுக்கு கேடு தரக்கூடிய தொழிற்சாலைகளை அமைக்க கூடாது என்று தமிழகத்தின் அரசாணை ஒன்று 1989ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.
16. ஆக மத்திய மாநில அரசுகளின் சட்டங்கள் எதுவும் ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை அனுமதிக்காதது தான். ஆனால் இதனை சரியாக செய்ய முடியும் என்று அரசசும் நாமும் நம்ப வேண்டும்.
17.அதனால் தொழிற்சாலைகள் இழுத்து மூட வேண்டும் என்று நான் சொல்லவில்லை.ஒரு நாட்டிற்கு தொழிற்சாலைகள் எவ்வளவு முக்கியம் என்பதை பொறுப்புள்ள எவரும் மறுக்க முடியாது.
18.லண்டனில் தேம்ஸ் நதியை சுத்தப்படுத்தும் முறைகளை நாம் நகலெடுத்து செயல்படுத்தலாம்.
19.ஒரே நாளில் இதனை செயல்படுத்த முடியாது, செய்து முடிக்க முடியாது, இப்போது இருந்து நாம் சீராக முயற்சி செய்தால் ஒரு நீண்டகால திட்டத்தின் மூலம், அத்தனை ஆறுகளையும் சுத்தப்படுத்த முடியும், சுகாதாரமாக மாற்றமுடியும்.
20.ஒரு நீண்ட கால திட்டத்தின் மூலம் இதனை செயல்படுத்த முடியும். லண்டனில் தேம்ஸ் நதியை சுத்தப்படுத்த 25 முதல் 30 ஆண்டுகள் பிடித்தது.
21.லண்டன் தேம்ஸ் நதிகூட ஒரு காலத்தில் சென்னை கூவம் நதியை விட மிகவும் மோசமாக இருந்தது.
22.முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. தொழிலகங்களுக்கு கால அவகாசம் தர வேண்டும். அதற்கான உதவிகளை அரசு தாராளமாக உதவ வேண்டும்.
23.சுற்றுச்சூழல் திட்டங்கள் மற்றும் சட்டங்களை அனைத்தையும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். முரட்டுத்தனமான கட்டுப்பாடுகள் தொழிற்சாலைகளை முடக்கிப் போட்டு விடக்கூடாது.
இதுவரை ஆறுகள் பற்றி நான் எழுதிய முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை படிக்காதவர்கள் அன்பு அன்புகூர்ந்து என்னுடைய வலைத்தளத்தில் படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இதுதான் என்னுடைய வலைத்தளத்தின் இணைப்பு
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் வணக்கம் !
Key Words: Rivers & civilization,
irrigation, agriculture, drought, famine Tamilnadu, Karnataka, Andhra Pradesh Rivers, palaru river, Chikballapur, nandhi hills, bethamangalam,
vellore, leather industries, pollution, bay of Bengal, Vayalur, Tamilnadu Rivers, chingleput,, tributaries, check dams, bhumii, gnanasuriabahavan
No comments:
Post a Comment