சிவப்பு மீசை சின்னான் /
புல்புல் குருவிகள்
(BULBUL)
அன்பு உன்பிறப்புகளுக்கு வணக்கம் !
தெக்குப்பட்டு கிராமத்தில், எனது வீட்டு முகப்பில் அழகுக்காக இரண்டு அத்திச் செடிகளை பெரிய தொட்டியில் வைத்து இருக்கிறேன் ஒரு நாள் அதில் ஒரு சிறிய குருவி கூட்டைப் பார்த்தேன்.
அந்த கூட்டைக் கட்டியது, சிவப்புமீசைச் சின்னான் (சி.மீ.சி) . அல்லது புல்புல் குருவி. அல்லது வண்ணாத்திக் குருவி. அல்லது கொண்டலாத்தி குருவி. அல்லது கொண்டடைக் குருவி.
சில நாட்களில் அந்த சி.மீ.சி முட்டை இட்டது. குஞ்சு பொரித்தது. அந்தக் குருவி வீட்டில் இல்லாத சமயம் அந்த குட்டி குருவிகளை எட்டிப்பார்ப்பேன். அந்தக் கூடு எட்டிப்பார்க்கும் உயரத்திலேயே தாழ்வாக இருந்தது.
அதன்பிறகு நான் வெளியில் செல்லும் போதெல்லாம் எட்டிப் பார்ப்பேன். அந்த கூடு எட்டிப்பார்க்கும் உயரத்திலேயே இருந்தது.
சில சமயம் நான் அந்தச் செடியை கடந்து செல்லும்போது, அது பறந்து பறந்து வந்து என் தலையில் கொத்தும். அது எனக்கு வேடிக்கையாக இருக்கும். அதன் பிறகு நான் வெளியில் செல்லும் போதெல்லாம் அந்த புல்புல் குருவி இருக்கிறதா என்று பார்ப்பேன்.
அதன் பிறகு நான் அடிக்கடி அதனைக் கவனிக்க ஆரம்பித்தேன். அது பற்றிய செய்திகளை தெரிந்துகொள்ள எனக்கு உற்சாகமாக இருந்தது. அதை பற்றி நான் தெரிந்து கொண்ட செய்திகளை உங்களிடம் இப்போது நான் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
செம்மீசைச் சின்னான் என்பதும் புல்புல் என்பதும் ஒன்றா ? நைட்டிங்கேல் என்பதும் ஒன்றா? குயில் என்பதும் நைட்டிங்கேல் என்பதும் ஒன்றா ? எல்லா கேள்விகளுக்கும் இந்தப் பதிவில் உங்களுக்கு பதில் கிடைக்கும். படியுங்கள். இவை பற்றிய 20 சுவையான செய்திகளைத் திரட்டித் தந்துள்ளேன்.
1. செம்மீசைச் சின்னான் பறவைக்கு கண்களுக்குப் பக்கத்தில் இருபுறமும் சிவப்பு மீசை இருக்கும். இதன் அறிவயல் பெயர் பிக்னோனேடஸ் கேஃபர் (PYCNONATUS JOCOSUS).
2. செங்குதச் சின்னான் பறவைக்கு வாலுக்கு அடிப்பகுதியில் சிவப்பாய் இருக்கும். இதன் அறிவயல் பெயர் பிக்னோனேடஸ் கேஃபர் (PYCNONATUS CAFER).
3.இந்தக் குருவிகள் உயரம் இல்லாத மரங்களில் புதர்களில் கூடுகட்டும்.
4. சில சமயம் நமது வீடுகளின் சுவர் பொந்துகளில் கூட கூடு கட்டும்.
5. வீடுகளில் சின்னான் குருவி கூடு கட்டினால் அது அதிர்ஷ்டம் என்கிறார்கள்.
6. சில சமயம் இவை பழைய கூடுகளை பழுதுபார்த்து மீண்டும் குடியிருக்கும்.
7. சின்னான் கூடுகள் ஒரு பக்கம் திறந்த தேநீர் கோப்பை வடிவத்தில் இருக்கும்.
8. செடிகளின் வேர்கள், குச்சிகள், சிம்புகள், பட்டைகள், இலைச்சருகுகள், போன்றவற்றால் இவை கூடுகளைக் கட்டுகின்றன.
8.மென்மையான பஞ்சு போன்ற வேர்களையும் கிளைகளையும் சருகுகளையும் அடுக்கி கூடுகளில் உட்புறத்தை மெத்தை போல ஆக்கும்.
9. சின்னான் பறவை களின் வயது 11 ஆண்டுகள் வரை வாழும் இவை பாடும் பறவை வகை (SONG BIRDS) சார்ந்தவை. இவை மரங்களின் கிளைகளில் மறைவாக உட்கார்ந்து உள்ளம் உருகப் பாடுமாம்.
10.சின்னான் பறவைகளின் கால்களில் முன்பக்கம் மூன்று விரல்களும் பின்புற ஒன்றும் இருக்குமாம், இது கிளைகளில் அமர உதவுமாம். இப்படிபட்ட பறவைகளை அமரும் பறவை வகை (PERCHING BIRDS/ PASSERINE BIRDS) என்கிறார்கள்.
11. பெரும்பாலான பறவைக் குஞ்சுகள் 12 முதல் 21 நாட்கள் கூடுகளில் இருக்கும். சில வகை முட்டையிலிருந்து வெளிவந்த 24 மணி நேரத்திலேயே கூட்டைவிட்டு பறந்துவிடும் இதன் குஞ்சுகள். அப்போது அதன் தாய்க் குருவிகள் இரை தேடித் தரும்.
12.பெர்சிய / ஈரான் நாட்டுக் கவிதைகளில் அதிகம் பாடப்படும் பறவை இந்த புல்புல்.
ஈரான் நாட்டின் புல்புல்லின் பெயர் வெண்காது புல்பபுல். இதன் காதுப்பகுதி வெளைவெளேர் என இருக்கும், இதன் அறிவியல் பெயர் பிக்னோனேட்டஸ் லியூகோடிஸ் (PYCNONATUS LECOTIS).
13. பறவைகள் இரவில் அதிகம் பாடும் பகலிலும் பாலும் ஆனால் குறைவாக பாடும்.
சிலர் இதனை நைட்டிங்கேல் என்றும் சொல்லுகிறார்கள். சிலர் நைட்டிங்கேல் வேறு, புல்புல் வேறு, குயில் வேறு என்று சொல்கிறார்கள். எது சரி என்ற் தெரிந்தால் சொல்லுங்கள்,
Key Words: வண்ணாத்தி குருவி, கொண்டைக் குருவி, சிவப்பு மீசை சின்னான், சின்னான் குருவி, PYCNONATUS JOCOSUS, PYCNONATUS CAFER, PYCNONATUS LECOTIS, Birds, Indian Birds, Birds of Africa, Birds of Asia, Persian Birds, Iran Birds, Bulbul, Res whiskered Bulbul, Red-vented Bulbul, Nightingale, Song Birds, Passerine Birds.
No comments:
Post a Comment