Sunday, October 2, 2022

PALARU A RIVER OF TAMILNADU ANDHRA AND KARNATAKA - கோளாறு சொல்லத்தானா பாலாறு - பாகம்-1

 

"காவிரி தென் பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி"
 - பாட்டுக்கொரு புலவன் பாரதியார்.


ஆறும் ஊரும் 

கோளாறு சொல்லத்தானா

பாலாறு

பாகம்-1

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம். 

 நமது ஆறும் ஊரும் தொடரில் முப்பத்தி நான்காவது ஆறாக பாலாறு பற்றி பார்க்கலாம். பாலாறு தொடர்பான பயனுள்ள, சுவைமிக்க, இதுவரை அறிந்திராத 25 செய்திகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

பாலாறு பற்றி  நமக்கு தெரிந்தது எல்லாம் அதற்காக அடுத்த மாநிலங்களோடு நாம் போட்ட சண்டை, போராட்டம், தர்ணா, கோர்ட்டு, வழக்கு விசாரணை, ஒப்பந்தம், இவை எல்லாம்தான் உடனே நமக்கு ஞாபகம் வரும்.

அதை எல்லாம் கொஞ்சம் அப்படியே கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு பாலாறுபற்றி இதுவரை நமக்குத் தெரியாத பல செய்திகளை நாம் தெரிந்து கொள்ளுவோம்.

அப்போதுதான் அதனை பாதுகாக்க என்ன செய்யலாம் ? அதனை பராமரிக்க என்ன செய்யலாம் ? மேம்படுத்த என்ன செய்யலாம் ? ஆக பாலாறுபற்றிய 11 செய்திகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1.”காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி என்று பாடும் பாரதியின் பாடலில் மூன்றாவதாக வரும் ஆறு  பாலாறு.

2. தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா என்று மூன்று மாநிலங்களில் ஓடும் ஒரு தென்னிந்திய ஆறு இது.

3.கர்நாடக மாநிலத்தின் நந்தி மலைப்பகுதியில் சிக்பல்லாபூர் மாவட்டத்தில் பிறக்கிறது பாலாறு.

 4. சென்னையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வயலூரில் வங்கக் கடலில் இது சங்கமமாகிறது.  

5. பாலாறு கர்நாடக மாநிலத்தில் பிறந்தாலும் அதிக தூரம் ஓடுவது தமிழ்நாட்டில்தான். இந்த ஆறு கர்நாடக மாநிலத்தில் 93 கிலோ மீட்டரும் ஆந்திராவில் 33 கிலோ மீட்டரும் தமிழ்நாட்டில் 222 கிலோ மீட்டரும் ஓடுகிறது. 

6.நந்தி மலையில் இருந்து பேத்த மங்கலம் என்னும் ஊர் வரை பாலாறு அடி ஊற்றாக ஓடி வருகிறது. அங்கிருந்துதான் அது சீரான ஆறாக உருவெடுத்து ஓடத் தொடங்குகிறது. 

 7. பேத்தமங்கலம், குப்பம் புல்லூர்ராமநாயக்கன் பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், ஆகியவை பாலாற்றங்கரையில் அமைந்துள்ள முக்கியமான கிராமங்கள் மற்றும் நகரங்கள்.

8. பாலாற்றின் துணை ஆறுகள் என்று பார்த்தால் மொத்தம் ஒன்பது.ஆனாலும் அதில் முக்கியமான துணையாறுகள் என்று பார்த்தால் அவை  பொன்னை, கவுண்டின்யா, மலட்டார், செய்யாறு, அகரம் ஆறு, கமண்டலாறு,  நாகநதியாறு, கிளியாறு, வேகவதியாறு தான். 

9. கிருஷ்ணா நதியின் நீர் வரும்வரை பாலாறு தான் சென்னையின்  தாகத்தை தீர்த்து வந்தது. அதுவரை பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் மூலமாக சென்னை பெருநகரக் குடிநீர் விநியோகம் செய்தது பாலாறு.    

10.தஞ்சாவூருக்கு அடுத்த தமிழ்நாட்டின் நெற்களஞ்சிம் பழைய வடார்க்காடு மாவட்டம். இதற்கு காரணம் பாலாறு. பாலாற்றுத் தண்ணீர், 32,746 எக்டரில் விவசாயம் செய்ய நீர் தருகிறது பாலாறு.

11.வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த பழைய வேலூர் மாவட்டத்தில் 1226 தொழில் தொழிற்சாலைகள் இருப்பதாக சில புள்ளி விவரங்கள் சொல்கின்றது. 

ஆறும் ஊரும் தலைப்பில் இதுவரை 34 கட்டுரைகளை எனது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளேன் அவற்றையும் படியுங்கள். எனது வலைத்தளத்தின் இணைப்பு www.gnanasuriabahavan.com

அன்பு உடன் பிறப்புகளே ! மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம், வணக்கம்.

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...