Wednesday, October 12, 2022

WORLD'S NUMBER ONE MILK CATTLE HOLSTEIN FRESIEN - ஹோல்சியன் ஃபிரீசியன் பால்மாடு


 ஹோல்சியன் ஃபிரீசியன் பால்மாடு

(100 வார்த்தைச் செய்திகள்)

1. மாட்டினங்களில் ஒரு நாளில் 30 லிட்டர் வரை பால் தருவது ஹோல்சியன் ஃபிரீசியன் தான்.

2. 150 நாடுகளில் பரவியிருக்கும் மாட்டினம்.

3.ஹோல்ஸ்டின் மற்றும் ஃப்ரீசியன் மாட்டினம். இரண்டையும் சேர்த்த கலப்பினம்தான் இது.

4. 3.7 சதம் கொழுப்புச் சத்தும் 3.1 சதம் புரதச் சத்தும் உடையது.

5. ஏ1 மற்றும் ஏ2 இரண்டு வகை புரதமும் உள்ளது. .ஏ2 புரதம் ஆரோக்கியம் மிகுந்தது

6. பிறந்த கன்று 40 முதல் 50 கிலோ எடை இருக்கும், வளர்ந்த பசு 340 கிலோ எடை இருக்கும்.

7. முதல் கன்று 21 முதல் 24 மதங்களில் ஈனும்.சினைக்காலம் 9.5 மாதங்கள்.

8. ஹோல்சியன் ஃபிரீசியன் பால்மாட்டின் அறிவியல் பெயர் பாஸ் டாரஸ் டாரஸ்(BOS TARUS TARUS).

9.  ஹோல்சியன் ஃபிரீசியன் வெளி நாட்டு மாட்டினம்.

10. இது இறைச்சி மாடும் கூட.

#catlle #milkbreed #bostarustarus #numberonemilkcattle #holsteinfresien #breedofmilkandmeat #highmilkproduction #dairycattle #dairybreed #holsteinofamerica #freisienofnortheurope #exoticmilkbreed #gestationperiod #highestmilkproduction #lowcostfarmingsystem

EXTRAORDINARY MILK BREED JERSEY - NEWS 10 IN ONE 100 WORDS

 


ஜெர்சி பால்மாடு

(100 வார்த்தைகளில் பதினோரு செய்திகள்)

1. உடல் எடை போல 10 மடங்கு பால் தரும் ஜெர்சி பால் மாடு  

2. அதிக விலை பெறும் 5 சத கொழுப்புச் சத்துப் பால்,

3. 3.8 சதம் புரதச் சத்து,

4. பிற மாட்டுப் பாலைவிட 15 முதல் 18 சதம் கூடுதல் கால்சியச் சத்து

5. 10 முதல் 12 சதம் கூடுதல் பாஸ்பரஸ் சத்து,

6. கூடுதல் பி12 வைட்டமின் சத்து

7.இளம் வயதில் 26 மாதங்களில் முதல் கன்று

8. வெப்பம் தாங்கும் குளிர்ப் பிரதேச மாடு.

9. 10.அதிக பால் தர 37 ஆண்டு வாழும்  ஜெர்சி பால்மாடு,

10. பால்மடிச் சிதைவு (COLLAPSED UDDER) மடிவீக்க நோயால் (MASTITIS) அதிகம் பாதிக்காத ஜெர்சி மாடு.  

உலகம் முழுவதும் உலா வரும் இங்கிலீஷ் கால்வாயின் (ENGLISH CANAL) பிரிட்டீஷ் தீவு மாடு ஜெர்சி.

#cattle, #jerseymilkcow,  #resistanttocollapsedudder #resistanttomastitis, #highestfat, #more protein, #morecalcium, #morephosporus, #moreb12vitamin, #easymaintenance, #jerseybritishisland, #englishcanalisland, #britishislandbreed, #easymaintenance, #hybridcow, #jerseyacrossbred, #withstandtropicalclimate, #india'snumberonemilkproducer, #bestmilkbreedoftheworld 

Monday, October 10, 2022

BEST INDIAN MILK CATTLE SINDHI - இந்திய நாட்டுமாடு சிவப்பு சிந்தி


இந்திய நாட்டுமாடு

சிவப்பு சிந்தி

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமிஞான சூரியன் வணக்கம் !

இந்தியாவின் நாட்டு மாடுகளில் மிகவும் முக்கியமான கறவை மாடு சிவப்பு சிந்தி இனம்.

 இதனை சிவப்பு சிந்தி என்று சொல்லுகிறார்கள் அதாவது அதன் நிறத்தை வைத்துதான் இதனை அடையாளப்படுத்துகிறார்கள் சிவப்பு சிந்தி என்று.

சிவப்பு சிந்தி என்னும் என்று சொல்லும்போது இது பாகிஸ்தானைச் சேர்ந்த மாடு என்று சொல்லுகிறார்கள் இது உண்மையிலேயே பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தது அல்லது இந்திய மாட்டார் என்று பார்க்கலாம் அதேபோல எந்த சிந்தி இனத்தின் மூலமாக எவ்வளவு பால் நமக்கு ஒரு நாளில் கிடைக்கும் என்றும் பார்க்கலாம் இப்படி சிந்தி மாடு பற்றிய 10 முக்கியமான சுவையான செய்திகளை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

செய்தி1: இந்த சிவப்பு சிந்தி பால் மாட்டினம் இதற்கு சொந்த ஊர் சிந்து மாநிலம் அதாவது இன்றைய பாகிஸ்தானை சேர்ந்தது அதாவது அதனை பலுசிஸ்தான் என்றும் சொல்லுகிறார்கள் அது இந்தியாவின் மாற்றமாக 1047 வரை இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

செய்தி 2.சிவப்பு சிந்தி இனம் இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான் மட்டுமின்றி பக்கத்து நாடுகளான பங்களாதேஷ் ஸ்ரீலங்கா ஆஸ்திரேலியா பிலிப்பைன்ஸ் பிரேசில் ஆகிய நாடுகளிலும் இது பிரபலமான பால்மாடு  

செய்தி 3 அதிகப்படியான வெப்பத்தை தாங்குதல் அந்த வெப்பத்தை தாங்கி பிரச்சனை இவையெல்லாம் சிந்து மாடுகளின் அடிப்படையான நல்ல குணங்கள். இல்லாமல் கருத்தரிப்பது டிக்கெட்டும் உண்ணிகளின் தாக்குதலை தாங்குவது அல்லது எதிர்ப்பது நோய்களை தாங்குவது 

செய்தி 4 :சிவப்பு சிந்தி மாட்டு இனத்தின் சிறப்பான பண்புகளை கருதி அமெரிக்கா ஆஸ்திரேலியா நாடுகளில் இதனை கலப்பின மாடுகளை உருவாக்க பயன்படுத்துகிறார்கள் உலகம் முழுவதும் உள்ளன  

செய்தி 5 ரெட் கராச்சி, மாலிர் என்ற பெயர்களும் சிவப்பு சிவப்பு சிந்திக்கும் வழங்கும் இதர பெயர்கள் 

செய்தி 6 உடல் எடையைப் பொறுத்தவரை சிவப்பு சிந்தி என் காலை மாடுகளுக்கும் பசுக்களுக்கும் இடையே சுமார் 200 கிலோ வித்தியாசம் உள்ளது சிந்தி காளைகள் கிட்டத்தட்ட ஒரு 500 கிலோ வரையிலும் சிந்திப்பவர்கள் 300 கிலோ வரையும் எடை உடையதாக இருக்கும்.

செய்தி 7:  சிவப்பு சிந்தி காளைகள் பசுக்களை விட உயரமாக இருக்கும் காளைகள் 132 சென்டி மீட்டரும் பஸ் 215 சென்டி மீட்டர் வரை உயரமும் உடையதாக இருக்கும் 

செய்தி 8:  சிவப்பு சிந்தி அச்சுஅசலாக அழகான செங்கல் நிறம் சிவப்பாக இருக்கும் பசுக்கள் காளைகள் அடர்த்தியான சிவப்பு நிறத்தில் இருக்கும் சில நாடுகளில் அந்த சிவப்பு நிறத்துடன் மஞ்சள் நிறமும் கலந்து இருக்கும். 

செய்தி 9:ஹோல்ஸ்டீன் பிரிசியன் பிரான்சிஸ் மற்றும் தனுஷ் ஆகிய வெளி நாட்டு மாடுகளுடன் கலப்பினம் செய்து உள்ளார்கள் பல வெளிநாட்டினர் அந்த நாடுகளின் பால் மாடுகளின் தரத்தை மேம்படுத்த சிவப்பு சிந்தி மாற்றி இவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
 
செய்தி 10. இருபதாம் நூற்றாண்டில் சிவப்பு சிந்தி இன மாடுகளை இறக்குமதி செய்து இன்றுவரை பால் உற்பத்திக்கு பயன்படுத்தி வருகிறது தென் அமெரிக்க நாடான பிரேசில்.

இதுவரை நாம் சிவப்பு சிந்தி இனத்தை பற்றிய 10 முக்கியமான செய்திகளை பார்த்தோம் இந்த மாடுகளை செப்பு என மாடுகள் என்றும் பிராமணர்கள் என்றும் சொல்லுகிறார்கள் அது ஏன் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி வணக்கம்.

நான் இதுவரை எழுதியுள்ள எனது இதர கட்டுரைகளை வாசிக்க நீங்கள் என்னுடைய வலைத்தளத்தில் பிரவேசிக்கலாம். என்னுடைய வலைத்தளத்தில் என் அப்பனை இங்கு தந்துள்ளேன்.

#Cattle 
#cattlebrees 
#redsindhi
#heattolerant
#a2milk
#sindhprovince
#pakistanbreed
#indianbreed
#redkarachi
#malir
#lasbelacattle
#zebucattle
#highgeneticpotential
#tickresistant
#diseaseresistant
#dairyknowledge
#bestmilkcow
#cowmilkbenefits
#highdemandingcowbreed
#lessismore
#a2caseinbetagene
#healthymilk
#goodforbloodpressure
#balochistan

Tuesday, October 4, 2022

RED WHISKERED BULBUL BIRD - சிவப்பு மீசை சின்னான் / புல்புல் குருவிகள்

சிவப்பு மீசை சின்னான் / 
புல்புல் குருவிகள்
(BULBUL)

அன்பு உன்பிறப்புகளுக்கு வணக்கம் ! 

தெக்குப்பட்டு கிராமத்தில், எனது வீட்டு முகப்பில் அழகுக்காக இரண்டு அத்திச் செடிகளை பெரிய தொட்டியில் வைத்து இருக்கிறேன் ஒரு நாள் அதில் ஒரு சிறிய குருவி கூட்டைப் பார்த்தேன்.

அந்த கூட்டைக் கட்டியது, சிவப்புமீசைச் சின்னான் (சி.மீ.சி) . அல்லது  புல்புல் குருவி.  அல்லது வண்ணாத்திக் குருவி. அல்லது கொண்டலாத்தி குருவி. அல்லது கொண்டடைக் குருவி. 

சில நாட்களில் அந்த  சி.மீ.சி முட்டை இட்டது. குஞ்சு பொரித்தது. அந்தக்  குருவி வீட்டில் இல்லாத சமயம் அந்த குட்டி குருவிகளை  எட்டிப்பார்ப்பேன். அந்தக் கூடு எட்டிப்பார்க்கும் உயரத்திலேயே தாழ்வாக இருந்தது.

அதன்பிறகு நான் வெளியில் செல்லும் போதெல்லாம் எட்டிப் பார்ப்பேன். அந்த கூடு எட்டிப்பார்க்கும் உயரத்திலேயே இருந்தது. 

சில சமயம் நான் அந்தச் செடியை கடந்து செல்லும்போது, அது பறந்து பறந்து வந்து என் தலையில் கொத்தும். அது எனக்கு வேடிக்கையாக இருக்கும். அதன் பிறகு நான் வெளியில் செல்லும் போதெல்லாம் அந்த புல்புல் குருவி இருக்கிறதா என்று பார்ப்பேன். 

அதன் பிறகு நான் அடிக்கடி அதனைக் கவனிக்க ஆரம்பித்தேன். அது பற்றிய செய்திகளை தெரிந்துகொள்ள எனக்கு உற்சாகமாக இருந்தது.  அதை பற்றி நான் தெரிந்து கொண்ட செய்திகளை உங்களிடம் இப்போது நான் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

செம்மீசைச் சின்னான் என்பதும் புல்புல் என்பதும் ஒன்றா ? நைட்டிங்கேல் என்பதும் ஒன்றா?  குயில் என்பதும் நைட்டிங்கேல் என்பதும் ஒன்றா ?  எல்லா கேள்விகளுக்கும் இந்தப் பதிவில் உங்களுக்கு பதில் கிடைக்கும். படியுங்கள். இவை பற்றிய 20 சுவையான செய்திகளைத் திரட்டித் தந்துள்ளேன்.

1. செம்மீசைச் சின்னான் பறவைக்கு கண்களுக்குப் பக்கத்தில் இருபுறமும் சிவப்பு மீசை இருக்கும். இதன் அறிவயல் பெயர்  பிக்னோனேடஸ் கேஃபர் (PYCNONATUS JOCOSUS).

 
2. செங்குதச் சின்னான் பறவைக்கு வாலுக்கு அடிப்பகுதியில் சிவப்பாய் இருக்கும். இதன் அறிவயல் பெயர்  பிக்னோனேடஸ் கேஃபர் (PYCNONATUS CAFER).

3.இந்தக் குருவிகள் உயரம் இல்லாத மரங்களில் புதர்களில் கூடுகட்டும்.

4. சில சமயம் நமது வீடுகளின் சுவர் பொந்துகளில் கூட கூடு  கட்டும். 

5. வீடுகளில் சின்னான் குருவி கூடு கட்டினால் அது அதிர்ஷ்டம் என்கிறார்கள்.

6. சில சமயம் இவை  பழைய கூடுகளை பழுதுபார்த்து மீண்டும் குடியிருக்கும்.

7. சின்னான் கூடுகள் ஒரு பக்கம் திறந்த தேநீர் கோப்பை வடிவத்தில்  இருக்கும். 

8. செடிகளின் வேர்கள், குச்சிகள், சிம்புகள், பட்டைகள், இலைச்சருகுகள்,  போன்றவற்றால் இவை கூடுகளைக் கட்டுகின்றன.

8.மென்மையான பஞ்சு போன்ற வேர்களையும் கிளைகளையும் சருகுகளையும் அடுக்கி கூடுகளில் உட்புறத்தை  மெத்தை போல ஆக்கும்.

9. சின்னான் பறவை களின் வயது 11 ஆண்டுகள் வரை வாழும் இவை பாடும் பறவை வகை (SONG BIRDS) சார்ந்தவை. இவை மரங்களின் கிளைகளில் மறைவாக உட்கார்ந்து  உள்ளம் உருகப் பாடுமாம்.

10.சின்னான் பறவைகளின் கால்களில் முன்பக்கம் மூன்று விரல்களும் பின்புற ஒன்றும் இருக்குமாம், இது கிளைகளில்  அமர உதவுமாம். இப்படிபட்ட பறவைகளை அமரும் பறவை வகை (PERCHING BIRDS/ PASSERINE BIRDS) என்கிறார்கள்.

11. பெரும்பாலான பறவைக் குஞ்சுகள் 12 முதல் 21 நாட்கள் கூடுகளில் இருக்கும். சில வகை முட்டையிலிருந்து வெளிவந்த 24 மணி நேரத்திலேயே கூட்டைவிட்டு பறந்துவிடும் இதன் குஞ்சுகள்.  அப்போது  அதன் தாய்க் குருவிகள் இரை தேடித் தரும்.

12.பெர்சிய / ஈரான் நாட்டுக் கவிதைகளில் அதிகம் பாடப்படும் பறவை  இந்த புல்புல். 
 ஈரான் நாட்டின்  புல்புல்லின்  பெயர் வெண்காது புல்பபுல். இதன் காதுப்பகுதி வெளைவெளேர் என இருக்கும், இதன் அறிவியல் பெயர் பிக்னோனேட்டஸ் லியூகோடிஸ் (PYCNONATUS LECOTIS).

13. பறவைகள் இரவில் அதிகம் பாடும் பகலிலும் பாலும் ஆனால் குறைவாக பாடும்.

சிலர் இதனை நைட்டிங்கேல் என்றும் சொல்லுகிறார்கள். சிலர்  நைட்டிங்கேல் வேறு, புல்புல் வேறு, குயில் வேறு என்று சொல்கிறார்கள்.  எது சரி என்ற் தெரிந்தால் சொல்லுங்கள்,

Key Words: வண்ணாத்தி குருவி, கொண்டைக் குருவி, சிவப்பு மீசை சின்னான், சின்னான் குருவி, PYCNONATUS JOCOSUS, PYCNONATUS CAFER, PYCNONATUS LECOTIS, Birds, Indian Birds, Birds of Africa, Birds of Asia, Persian Birds, Iran Birds, Bulbul, Res whiskered Bulbul, Red-vented Bulbul, Nightingale, Song Birds, Passerine Birds. 
 

Monday, October 3, 2022

RIVER PALARU USEFUL INFORMATIONS - part 2 - உழக்குத் தண்ணீரும் ஒடாத ஆறா பாலாறு ?

 



ஆறும் ஊரும்

உழக்குத் தண்ணீரும்

ஒடாத ஆறா பாலாறு ?

பகுதி 2


அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் 

ஒரு காலத்தில் கேட்டதெல்லாம் தந்தது பாலாறு. அதனால் இதனை அன்று தேனாறு என்று பாடினார்கள். மேற்கிலிருந்து கிழக்காக ஓடியதால் இதனை மேலாறு என்று எழுதினார்கள். இன்று உழக்குத் தண்ணீரும் ஓடாத ஆறாக மாறியதால் இதனை கோளாறு என்கிறார்கள். 

முதல் பாலாறு பதிவில் 11 சுவையான செய்திகளைப் பார்த்தோம், இன்று பாலாறு பற்றிய 12 பயன்தரும் செய்திகளைப் பார்க்கலாம்.

12. தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரில் எத்தனை சதவிகிதம் சுத்திகரிக்கப்பட்ட அல்லது சுத்தப்படுத்தப்பட்ட நீர் என்பது தெரியவில்லை.

13. சுத்திகரிக்கப்படாத தோல் தொழிற்சாலை கழிவு நீரில், சயனைடு, பாதரசம், குரோமியம், போன்ற கனரக உலோக ரசாயனங்கள், கலந்து இருக்க வாய்ப்பு உண்டு என்று சொல்லுகிறார்கள். 

14.அதேசமயம் இந்தியாவின் மொத்த தோல் ஏற்றுமதியில் பிரிக்கப்படாத வேலூர் மாவட்டத்தின் பங்கு மட்டும் 37 சதவீதம் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இது குறைவான அளவில் அல்ல.

15. நீர்நிலைகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் எந்த தொழிற்சாலையும் சுற்றுச்சூழலுக்கு கேடு தரக்கூடிய தொழிற்சாலைகளை அமைக்க கூடாது என்று தமிழகத்தின் அரசாணை ஒன்று 1989ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.

16. ஆக மத்திய மாநில அரசுகளின் சட்டங்கள் எதுவும் ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை அனுமதிக்காதது தான். ஆனால் இதனை சரியாக செய்ய முடியும் என்று அரசசும் நாமும் நம்ப வேண்டும். 

17.அதனால் தொழிற்சாலைகள் இழுத்து மூட வேண்டும் என்று நான் சொல்லவில்லை.ஒரு நாட்டிற்கு தொழிற்சாலைகள் எவ்வளவு முக்கியம் என்பதை பொறுப்புள்ள எவரும் மறுக்க முடியாது.

18.லண்டனில் தேம்ஸ் நதியை சுத்தப்படுத்தும் முறைகளை நாம் நகலெடுத்து செயல்படுத்தலாம். 

19.ஒரே நாளில் இதனை செயல்படுத்த முடியாது, செய்து முடிக்க முடியாது, இப்போது இருந்து நாம் சீராக முயற்சி செய்தால் ஒரு நீண்டகால திட்டத்தின் மூலம், அத்தனை ஆறுகளையும் சுத்தப்படுத்த முடியும், சுகாதாரமாக மாற்றமுடியும்.

20.ஒரு நீண்ட கால திட்டத்தின் மூலம் இதனை செயல்படுத்த முடியும். லண்டனில் தேம்ஸ் நதியை சுத்தப்படுத்த 25 முதல் 30 ஆண்டுகள் பிடித்தது.

21.லண்டன் தேம்ஸ் நதிகூட ஒரு காலத்தில் சென்னை கூவம் நதியை விட மிகவும் மோசமாக இருந்தது.

22.முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. தொழிலகங்களுக்கு கால அவகாசம் தர வேண்டும். அதற்கான உதவிகளை அரசு தாராளமாக உதவ வேண்டும். 

23.சுற்றுச்சூழல் திட்டங்கள் மற்றும் சட்டங்களை அனைத்தையும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். முரட்டுத்தனமான கட்டுப்பாடுகள் தொழிற்சாலைகளை முடக்கிப் போட்டு விடக்கூடாது.

இதுவரை ஆறுகள் பற்றி நான் எழுதிய முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை படிக்காதவர்கள் அன்பு அன்புகூர்ந்து என்னுடைய வலைத்தளத்தில் படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இதுதான் என்னுடைய வலைத்தளத்தின் இணைப்பு  

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் வணக்கம் !

Sunday, October 2, 2022

PALARU A RIVER OF TAMILNADU ANDHRA AND KARNATAKA - கோளாறு சொல்லத்தானா பாலாறு - பாகம்-1

 

"காவிரி தென் பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி"
 - பாட்டுக்கொரு புலவன் பாரதியார்.


ஆறும் ஊரும் 

கோளாறு சொல்லத்தானா

பாலாறு

பாகம்-1

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம். 

 நமது ஆறும் ஊரும் தொடரில் முப்பத்தி நான்காவது ஆறாக பாலாறு பற்றி பார்க்கலாம். பாலாறு தொடர்பான பயனுள்ள, சுவைமிக்க, இதுவரை அறிந்திராத 25 செய்திகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

பாலாறு பற்றி  நமக்கு தெரிந்தது எல்லாம் அதற்காக அடுத்த மாநிலங்களோடு நாம் போட்ட சண்டை, போராட்டம், தர்ணா, கோர்ட்டு, வழக்கு விசாரணை, ஒப்பந்தம், இவை எல்லாம்தான் உடனே நமக்கு ஞாபகம் வரும்.

அதை எல்லாம் கொஞ்சம் அப்படியே கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு பாலாறுபற்றி இதுவரை நமக்குத் தெரியாத பல செய்திகளை நாம் தெரிந்து கொள்ளுவோம்.

அப்போதுதான் அதனை பாதுகாக்க என்ன செய்யலாம் ? அதனை பராமரிக்க என்ன செய்யலாம் ? மேம்படுத்த என்ன செய்யலாம் ? ஆக பாலாறுபற்றிய 11 செய்திகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1.”காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி என்று பாடும் பாரதியின் பாடலில் மூன்றாவதாக வரும் ஆறு  பாலாறு.

2. தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா என்று மூன்று மாநிலங்களில் ஓடும் ஒரு தென்னிந்திய ஆறு இது.

3.கர்நாடக மாநிலத்தின் நந்தி மலைப்பகுதியில் சிக்பல்லாபூர் மாவட்டத்தில் பிறக்கிறது பாலாறு.

 4. சென்னையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வயலூரில் வங்கக் கடலில் இது சங்கமமாகிறது.  

5. பாலாறு கர்நாடக மாநிலத்தில் பிறந்தாலும் அதிக தூரம் ஓடுவது தமிழ்நாட்டில்தான். இந்த ஆறு கர்நாடக மாநிலத்தில் 93 கிலோ மீட்டரும் ஆந்திராவில் 33 கிலோ மீட்டரும் தமிழ்நாட்டில் 222 கிலோ மீட்டரும் ஓடுகிறது. 

6.நந்தி மலையில் இருந்து பேத்த மங்கலம் என்னும் ஊர் வரை பாலாறு அடி ஊற்றாக ஓடி வருகிறது. அங்கிருந்துதான் அது சீரான ஆறாக உருவெடுத்து ஓடத் தொடங்குகிறது. 

 7. பேத்தமங்கலம், குப்பம் புல்லூர்ராமநாயக்கன் பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், ஆகியவை பாலாற்றங்கரையில் அமைந்துள்ள முக்கியமான கிராமங்கள் மற்றும் நகரங்கள்.

8. பாலாற்றின் துணை ஆறுகள் என்று பார்த்தால் மொத்தம் ஒன்பது.ஆனாலும் அதில் முக்கியமான துணையாறுகள் என்று பார்த்தால் அவை  பொன்னை, கவுண்டின்யா, மலட்டார், செய்யாறு, அகரம் ஆறு, கமண்டலாறு,  நாகநதியாறு, கிளியாறு, வேகவதியாறு தான். 

9. கிருஷ்ணா நதியின் நீர் வரும்வரை பாலாறு தான் சென்னையின்  தாகத்தை தீர்த்து வந்தது. அதுவரை பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் மூலமாக சென்னை பெருநகரக் குடிநீர் விநியோகம் செய்தது பாலாறு.    

10.தஞ்சாவூருக்கு அடுத்த தமிழ்நாட்டின் நெற்களஞ்சிம் பழைய வடார்க்காடு மாவட்டம். இதற்கு காரணம் பாலாறு. பாலாற்றுத் தண்ணீர், 32,746 எக்டரில் விவசாயம் செய்ய நீர் தருகிறது பாலாறு.

11.வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த பழைய வேலூர் மாவட்டத்தில் 1226 தொழில் தொழிற்சாலைகள் இருப்பதாக சில புள்ளி விவரங்கள் சொல்கின்றது. 

ஆறும் ஊரும் தலைப்பில் இதுவரை 34 கட்டுரைகளை எனது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளேன் அவற்றையும் படியுங்கள். எனது வலைத்தளத்தின் இணைப்பு www.gnanasuriabahavan.com

அன்பு உடன் பிறப்புகளே ! மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம், வணக்கம்.

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...