Tuesday, September 20, 2022

VIRGIN QUEEN ELIZABETH I IN WESTMINSTER ABBEY - பேரரசி முதலாம் எலிசபெத்

 



வெஸ்ட்மின்ஸ்டர் அப்பே’வில்

பேரரசி முதலாம் எலிசபெத்

இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அப்பே’வில் 3000 பேரை அடக்கம் செய்திருக்கிறார்கள். அதில் பிரபலமான 10 பிரமுகர்களை பற்றிப் பார்க்கலாம். இன்று நாம் பார்க்கப்போவது மகாராணி அல்லது பேரரசி முதலாம் எலிசபெத்.  

பேரரசி முதலாம் எலிசபெத் , 1603 ம் ஆண்டு மார்ச் 24 ம் தேதி, தனது 69 வது வயதில் மரணம் அடைந்தார். ஆனால் அவர் எப்போதும் 30 வயதைத் தாண்டாத பெண்மணியாகவே தெரிவார் என்று எழுதுகிறார்கள்..

மகாராணி எலிசபெத் தனது 69 வயது வரை திருமணம் செய்துகொள்ள வில்லை. கடைசிவரை கன்னியாகவே காலம் கழித்தார்.

“நான் திருமணம் செய்து கொள்ளப் பொவதில்லை.. காரணம் நான் ஏற்கனவே இங்கிலாந்தின் ராஜாங்கப் பணியை ரகசியமாய்த் திருமணம் செய்து கொண்டேன்” என்று சொன்னார். அப்படியே இறக்கும் வரை கன்னி ராணியாகவே இருந்து இறந்தார். அதனால் ‘விர்ஜின் குயின்” என்ற அடை மொழியுடன் அழைக்கப்பட்டார்.

இளம்சிவப்பு நிறத்தில் சுருள்சுருளான  தலை முடி, வெளுப்பான தோல் மற்றும் முகம், பளிச்சென்ற கண்கள், ரத்தச் சிவப்பு உதடுகள், நல்ல உயரம், எடுப்பான தோற்றம்,

ஒப்பனை செய்துகொண்டு தன்னை ஒரு ஓவியம் போல அலங்கரித்துக் கொள்ளுவதில் அடங்காத ஆர்வம் உள்ளவராக இருந்தார். அது போல உடையிலும் புதுப்புது உத்திகளை உருவாக்கி அணிவதில் ஆர்வம் காட்டினார்.

அவருடைய பழைய புகைப்படங்களைப் பாருங்கள், உங்களுக்கு பாபி டால் பொம்மை மாதிரித் தெரிவார். ஒருவேளை பொம்மை கம்பெனி இவரைப் பார்த்து பாபி டால் பொம்மை செய்திருக்கலாம்.

 

மகாராணி எலிசபெத் தன்னை அழகுபடுத்துவதற்கு என்னென்ன செய்தார் ? எப்படி செய்தார் ? முடிக்கு என்ன செய்தார் ? முகத்துக்கு பூசும் பொடிக்கு என்ன செய்தார் ? கண்களுக்கு என்ன தீட்டினார் ? காதுகளில்  என்ன பூட்டினார் ? உதட்டுக்கு என்ன பூசினார் ? உடம்புக்கு என்ன பூசினார் ?  இப்படி என்ன என்ன என்று  ஆய்வு செய்தால் எப்படியும் ஐநூறு பக்கங்களுக்கு அம்சமாக ஒரு புத்தகம் எழுதலாம் என்று தோன்றுகிறது.

அவர் மரணம் அடைந்த பிறகு அவர் உடல் எப்படி வெஸ்ட்மின்ஸ்டர் அப்பே’க்கு வந்த்து என்று பார்க்கலாம்.

அவர் உடலை அவருடைய தாத்தாவின் கல்லறைக்குப் பக்கத்தில் முதலில் அடக்கம் செய்தார்கள்.

அதன் பிறகு அவருடைய சகோதரி மேரி அவர்களின் கல்லறைப் பெட்டகத்திற்குக் கீழே உள்ள பெட்டகத்தில் அடக்கம் செய்தார்கள். ஒரு பெட்டியின் மேல் பக்கம் கீழ்பக்கம்.

ஒரு பெட்டகத்தை இருவரும் பகிர்ந்து கொண்டார்கள் என்று சொல்லாம்.அந்தப் பெட்டகத்தின் மேல் அவருடைய சிலை ஒன்றையும் வைத்துள்ளார்கள்.

அவர் அழகைப் போற்றிப் பாதுகாத்தவர் என்பதால் அழகான அவர் சிலையை அவர் கல்லறைப் பெட்டகத்தின் மீது காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அந்த சிலையின் புகைப் படத்தைத்தான் இதில் பதிவு செய்துள்ளேன்.

மீண்டும் அடுத்தப் பதிவில் பார்க்கலாம், வணக்கம் !

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...