Monday, September 12, 2022

TEN FACTS ON KOSASTHALAIYAR RIVER

 


சென்னை மாநகரின் 

கொற்றலையார் ஆறு

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !

இதற்கு முன்னால் அஸ்சாம் மற்றும் மேகாலயாவின் மாநிலங்களுக்குச் சொந்தமான   கோப்பிலி ஆறு பற்றிப் பார்த்தோம். இன்று நாம் சென்னையின் கொற்றலையார் ஆறு பற்றிப் பார்க்கலாம்.

அதற்கு முன்னால் நேற்றைய கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம். மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தோடு வேறு என்னவகை சுரங்கங்கள் ஆறுகளை மாசுபடுத்துகின்றன. மேகாலயாவில் நிலக்கரி சுரங்கங்களோடு ஏகப்பட்ட சுண்ணாம்பு சுரங்கங்களும் இங்குள்ள ஆறுகளின் தண்ணீரை மாசுபடுத்துகின்றன.

சென்னை மாநிலத்தில் ஓடும் மூன்று ஆறுகளில் ஒன்று இந்த கொற்றலை ஆறு, இதனை கொசத்தலை ஆறு, குயத்தலை ஆறு, கொசஸ்தலை ஆறு, குறல்தலை ஆறு, குறத்தி ஆறு என்றும் சொல்லுகிறார்கள். ஆனால் இன்றையப் பெயர் கொற்றலை அல்லது கொசஸ்தலை ஆறு.

1.நூற்று 38 கிலோமீட்டர் தூரம் ஓடும் கொற்றலை ஆறு ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் தொடங்கி  காவெரிப்பக்கம் வழியாக பூண்டி நீர்த்தேக்கம் அடைந்து சென்னை எண்ணூர் அருகே வங்க்க் கடலில் சங்கமாகிறது.

2. நகரிஆறு எனும் கொற்றலையார் ஆற்றின் முக்கியத் துணையாறு  ஆந்திரப்பிரதேசத்தில் சித்தூரில் உற்பத்தி ஆகி பூண்டி நீர்த்தேக்கத்தில் கொற்றலையாற்ற்ய்டன் சேர்கிறது.

3. பழைய வேலூர், சித்தூர், மற்றும் வடாற்காடு மாவட்டங்களில் கொற்றலையாற்றின் நீர்பிடிப்புப் பகுதி பரவியுள்ளது.

4. இதன் கிளை நதிதான் கேசவரம் அணைக்கட்டில் கூவனம் நதியாக சென்னை நகரில் நுழைகிறது எமங்கிறார்கள்.

5. கொற்றலை ஆற்றின் முக்கிய ஆறு திருவள்ளூர் மாவட்டத்தைக் கடந்து சென்னைப்பெரு நகரில் 16 கிலோமீட்டர் பயணம் செய்து  எண்ணூர் முகத்துவாரத்தில் வங்க்க்கடலில் சங்கம்மாகிறது.

6. இந்த ஆற்றின் குறுக்கே ஒன்பதுத் தடுப்பணைகள் உள்ளன, அவற்றுள் தாமரப்பாக்கம் மற்றும் வள்ளூர் கிராமங்களில் இருக்கும் தடுப்பணைகள் முக்கியமானவை, இவற்றின் பாசனம் விவசாயத்டிற்கு பயன்படுகிறது.

7.திருவள்ளூர் மாவட்டத்தில், ஜமீன் கொரட்டூர் பகுதியில் 1876 ம் ஆண்டு கட்டியிருக்கும் கொரட்டூர் அணைக்கட்டு சரித்திரப் பிரசித்தி பெற்றது என்கிறார்கள், இதுதான் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்தைக் கட்டுப்படுத்துவது என்று சொல்லுகிறார்கள். மாசுப்படாத நீரோட்டம் உள்ள கூவம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணை இது என்றும் சொல்லுகிறார்கள்.

8.கொற்றலையார் ஆறு ஒரு காலத்தில் பாலாற்றின் துணை நதியாக இருந்துஇருக்கும் என்றும் சொல்லுகிறார்கள். இதுபற்றி நமது பழந்தமிழ் இலக்கியம் கலிங்கத்துப்பரணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

9.அந்தப் பாடலில் பாலாறு, குசத்தலையாறு, முகரியாறு, பழவாறு, கொல்லியாறு, பெண்ணையாறு, வயலாறு, மண்ணாறு, பெயலாறு, பேராறு, கோதாவரி, மேலாறு, பம்பாஆறு, கோதமையாறு, பதினான்கு ஆறுகளை பட்டியலிடுகிறார் கலிங்கத்துப்பரணி ஆசிரியர் ஜெயம்கொன்டார்.

10. கீழே உள்ளது அந்த கலிங்கத்துப்பரணி பாடல்.

பாலாறு குசைத்தலை பொன் முகரி

பழவாறு படர்ந்தெழு கொல்லிஎனும்

நாலாறு மகன்று ஒரு பெண்ணை எனும்

நதியாறு கடந்து நடந்துடனே 

வயலாறு புகுந்து மணி புனல்வாய்

மண்ணாறு வளங்கெழுகு குன்றியெனும்

பெயலாறு பரந்து நிறைந்துவரும் பேராறும்

இழந்தது பிற்படவே

கோதாவரி நதிமேலாறொடு குளிர்பம்பா

நதியோடு சந்தப்பேர்

ஓதாவருநதி ஒரு கோதமையுடன் ஒலிநீர்

மலிதுறை பிறகாக..

(கலிங்கத்துப்பரணிபாடல் 56 – 58)

(கருணாகரத் தொண்டைமான், காஞ்சியை விட்டு போர்முரசு கொட்டி கலிங்கம் செல்லும்போது அவன் பாலாறு, குசத்தலை, பொன்முகரி, பழவாறு, பெண்ணை என பல ஆறுகளை கடந்து சென்றான் என்கிறது இந்த கலிங்கத்துப்பரணி பாடல்.) 

இன்றைய கேள்வி: நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் டைரக்டர் பாலச்சந்தர் படபிடிப்புக்காக கொசஸ்தலை ஆற்றில் என்னை குதிக்கச் சொன்னார். அப்போது இந்த ஆற்றில் தண்ணீர் தெளிவாக ஓடியது. இப்போது சேறும் சகதியுமாக மாறிவிட்டது. பிரபலமான ஒரு நடிகர் சொன்ன கருத்து இது. யார் அந்த உலகமகா நடிகர் என்று சொல்லுங்கள் பார்ப்போம். 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் ! வணக்கம் !

இந்த எனது பதிவுகள் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

12 செப் 22

 

 

  

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...