பெண் குழந்தைகளுக்கு உதவும் திட்டம்
SUGANYA SAMRITHI YOJANA
செல்வமகள் சேமிப்பு திட்டம்
அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !
மத்திய அரசும் மாநில அரசும் போட்டி போட்டபடி பெண் குழந்தைகளை போற்றி வளர்க்க பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்கள்.
இதில் முக்கியமாக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், நமது தும்பேரி சிக்கனாங்குப்பம் நீர்வடிப் பகுதி கிராமங்களில், இதனை பூமி நிறுவனமும் நமது யூனியன் பேங்க் ஆப் இந்தியாவும் இணைந்து அறிமுகம் செய்வதில் பெருமைப்படுகிறோம்.
நபார்டு வங்கியின் நீர்வடிப்பகுதி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய துணைக் கண்டத்திலேயே மிகவும் சிறப்புடையதாக விளங்குகின்றன தும்பேரி மற்றும் சிக்கனாங்குப்பம் கிராமங்கள். அந்த வகையில் பூமி நிறுவனம் இந்தத் திட்டத்தையும் நன்கு பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறது.
இந்தப் பதிவில் செல்வமகள் திட்டம் பற்றிய முக்கியச் செய்திகளை உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.
1. செல்வமகள் சேமிப்பு திட்டம் என்பது பெண் குழந்தைகளுக்கான ஒரு சேமிப்பு திட்டம். இது ஒரு மத்திய அரசின் திட்டம். இதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் சுகன்யா சம்ரிதி யோஜனா.
2. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, இந்தத் திட்டத்தில் மாதா மாதம் ஒரு சிறு தொகையை சேமிப்பாக செலுத்தி வரலாம்.
3. செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து ஒரு சிறிய தொகையை செலுத்தி வந்தால் அந்தத் தொகையை அவர்களின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கு அது கை கொடுக்கும்.
4. செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேமிக்கும் தொகைக்கு அரசு 7.5 % வட்டித் தொகை வழங்குகிறது.
5. இந்தத் திட்டம் எதிர்காலத்தில் பெண் குழந்தைகளின் சேமிப்பாக உதவும்.
6. அவர்களின் எதிர்காலத்தில் அது ஒரு முதலீடாகவும் பயன்படும்.
7. இந்தத் திட்டத்தில் சேரும் பெண் குழந்தைகளின் வயது 10 க்கு குறைவாக இருக்க வேண்டும்.
8. ஒரே ஒரு பெண் குழந்தை உள்ள பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்க முடியும்.
9. நீங்கள் மாதம் 2500 ரூபாய் செலுத்தி இந்த திட்டத்தில் சேமித்து வந்தால் சேமிப்பு முடிவடையும்போது அதாவது 15 ஆண்டுகளுக்குப் பிறகு 12 லட்ச ரூபாய் வரை பணமாகக் கிடைக்கும்.
10. உங்கள் ஊர் அஞ்சலகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் செலுத்தி இந்த திட்டத்தில் சேரலாம்.
11.இதற்கு S S A I என்ற விண்ணப்ப மனுவைப் பூர்த்தி செய்து தர வேண்டும்.
12. குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் முகவரிச் சான்று, ரேஷன் அட்டை, ஓட்டுனர் லைசென்ஸ், ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றின் நகலை விண்ணப்பத்துடன் தரலாம்.
13. இந்த செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து மாதம் 2500 ரூபாய் செலுத்தி 15 ஆண்டுகளில் 12 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை பணமாகப் பெறலாம்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம் அல்லது
சுகன்யா சம்ரிதி யோஜனா முதலீடு மற்றும் சேமிப்பு திட்டம் குறித்த உங்கள்
சந்தேகங்களை பூமி நிறுவனத்தில்,
கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு
கொண்டு விளக்கம் பெறலாம்.
தொலைபேசி எண்கள்: 9047690108, 6369484711, 8526195370.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம், வணக்கம்.
KEY WORDS: INDIA, GOVERNMENT OF INDIA, GIRL CHILDREN BETTERMENT, EDUCATION, MARRIAGE, SUGANYA SAMRITHI YOJANA, SAVING SCHEME, செல்வமகள் சேமிப்பு திட்டம், 15 YEARS SAVINGS SCHEME, ELIGIBILTY, TAX BENEFITS, INTEREST RATES
No comments:
Post a Comment