Friday, September 16, 2022

SECRET SEXUAL LIFE OF SNAKES - KING COBRAS (PART 2)



SECRET SEXUAL LIFE OF SNAKES - KING COBRAS

அடைகாக்கும் ராஜநாகங்கள்பாகம் 2

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !

கோழிகள் மாதிரி முட்டயிட்டு, அதன் மீது உட்கார்ந்து அடைகாத்து குஞ்சு பொறிக்கும் பண்புகளைக் கொண்டவை ராஜநாகங்கள் என்றால் யாராலும் நம்ப முடியாது. அது மட்டுமல்ல அவை பாம்புகளை மட்டுமே சாப்பிடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? மேலே படியுங்கள்.

01. உலகில் உள்ள பாம்பு இனங்களில் கூடுகட்டி முட்டை இடும் பாம்பு இனம் ராஜநாகம் மட்டுமே. இவை இலை தழை மற்றும் சிறுசிறு சிம்புகள் கொண்டு மறைவான இடங்களில் கூடுகளைக் கட்டும்.

02. கூட்டில் முட்டையிட்டு அதன் மீது இலைச்சருகுகளை பரப்பி வெளியில் தெரியாமல் மூடி வைக்கும். பின்னர் கோழிகள் முட்டைகள் மீது அமர்ந்து அடை காப்பதுபோல பெண் ராஜநாகங்கள் அடை காக்கும். அந்த சமயங்களில் ஆண் ராஜ நாகங்களும் அருகில் இருக்கும்.

03. பொதுவாக ராஜ நாகங்கள்  தடைகள் அல்லது எதிரிகள் குறுக்கே வந்தால் ஒதுங்கிப்போகும் தன்மை உடையவை. ஆனால் இப்படி அடை காக்கும் சமயங்களில் இந்த பெண் ராஜநாகங்கள் எப்போதும் கோபம் உடையவைகளாக இருக்கும்.

04. பெரும்பாலும் ராஜநாகங்கள் கோடை காலத்தில் அடைகாத்து இலையுதிர் காலங்களில் முட்டைகள் பொரித்து குட்டி ராஜநாகங்கள் வெளிவரும். முட்டைகளிலிருந்து வெளிவரும்போதே குட்டிகள் 50 செ.மீ. நீளத்திற்கு இருக்கும்.

05. ராஜநாகங்கள் 10 முதல் 18 அடிவரை நீளமுள்ளவைகளாக இருக்கும், மஞ்சள், பச்சை, காவி நிறம், மற்றும் கருப்பு நிறங்களில் இருக்கும். இவற்றின் சராசரி வயது 17 ஆண்டுகள். ராஜநாகங்களின் அறிவியல் பெயர் ஓப்பியோபேகஸ் ஹன்னா (Opiophagus hanna).

06. ராஜநாகங்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் மட்டுமே நடமாடும், இதர  நாகப்பாம்புகள்  மாலை நேரத்தில்தான் அதிகம் வெளிவரும்.

07. தனக்கு ஆபத்து வருவதென்றால் ராஜ நாகங்கள் தோராயமாக மூன்றடி உயரத்திற்கு எழுந்து நின்று தாக்கத் தயாராகும். நின்றபடி அதனால் எதிரிகளைத் துரத்தியபடி ஓடவும் முடியும்.

08. ராஜ நாகங்கள் பெரும்பாலும் பாம்புகளை மட்டுமே சாப்பிடும், இவை சாப்பாட்டு விஷயத்தில் கறாராக இருக்கும். ஒரு குறிப்பிட்ட இனப் பாம்புகளை சாப்பிட்டு பழகிவிட்டால் அதுதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும். தனது இனப்பாம்புகளையே கூட சாப்பிடும்.

09. ராஜநாகங்கள் பெரிய சைஸ் பாம்புகளை மட்டுமே சாப்பிடும். குறைந்தது 10 அடி நீளமாவது இருக்க வேண்டும். சாரைகள் மற்றும் மலைப்பாம்புகளை சாப்பிடப் பிடிக்குமாம். தாமன் (Dhaman) என்ற பாம்பைக் கூட சாப்பிடுமாம்.

10. இதன் விஷம் கடுமையான நியூரோ டாக்சின், இது சுவாச மண்டலத்தையும் மூளையின் மெடுல்லா பகுதியைத்தாக்கும். சரியான சிகிச்சை தரவில்லை என்றால் பதினைந்தே நிமிடத்தில்  மரணம் சம்பவிக்குமாம்.

அம்மா பாம்பு மற்றும் அப்பா பாம்பு இரண்டுமே முட்டையிலிருந்து வெளிவந்த குட்டிப்பாம்புகள் பற்றி கவலைப்படுவதில்லை. குட்டிப்பாம்புகளும் அம்மா அப்பா எங்கே என்று கவலைப்படுவதில்லை.

முட்டையிலிருந்து வெளிவந்த அடுத்த நொடியே தனது வேட்டையைத் தொடங்குகின்றன, இந்த ராஜநாகக்குட்டிகள்.

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...