Friday, September 16, 2022

SECRET SEXUAL LIFE OF SNAKES - KING COBRAS (PART 1)

 


SECRET SEXUAL LIFE OF SNAKES - KING COBRAS

ராஜநாகங்களின் தன்னின

ஊன் உண்ணும் பண்பு

பாகம் 1

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !

மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலேஎன்ற பாடல்தான் இந்தகன்னிபாலிசம்என்பதை விளக்கும்படியான சினிமாப்பாட்டு. இதை இதற்குமேல் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனைத் தமிழில் தன்னின ஊன் ஊண்ணும் பண்பு என்று சொல்ல்லாம்.

பாம்புகள் இனத்தில் இந்தகன்னிபாலிசம்மிகவும் சாதாரணம். அதிலும் ராஜ நாகங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். ராஜநாகங்களின் முக்கிய சாப்பாடே பாம்புகள்தான்.

அதிலும் முக்கியமாக உடலுறவின் போது பெண்பாம்புகள் ஆண் பாம்புகளை சாப்பிடுவிடும் என்று சொல்லுகிறார்கள். இந்தப் பதிவில் அதுபற்றிய 10 செய்திகளை உங்களுக்கு சொல்லுகிறேன்.

1. ஒரு உயிரினம் தன் இனத்தையே உணவாகக் கொள்வதுதான்கான்னிபாலிசம்என்பது. ஆண் பெண் உயிரினங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும்போது, அந்த உயிரினத்தை உணவாகக் கொள்வதைசெக்சுவல் கன்னிபாலிசம்”.என்று சொல்லுகிறார்கள்.

2. மனித இனங்களில் கூட சில பழங்குடி இனங்களிடையே இது போன்ற மனிதனை மனிதன் சாப்பிடும் பழக்கம் இருந்தது உண்மைதான். பல சினிமாக்களில், கதாநாயகி அல்லது கதா நாயகனைக் காட்டின மக்கள் சூப்பு வைக்க முயற்சிப்பதாகக் காட்டுவார்கள்.

3.ராஜ நாகங்கள் தோலுறிக்கிறது என்றால் அது இனப்பெறுக்கக் காலம் தொடங்குகிறது, என்று பொருள்.  பெண்ராஜ  நாகங்கள் தோல் உறிக்கும்போது பெரமோன் (PHEROMON) எனும் ஒருவகை இனக்கவர்ச்சி திரவத்தை சுரக்கும். இந்த பெரமோன் திரவத்தின் வாசனைதான் ஆண் பாம்புகளை ஈர்க்கும்.

4. ஒரு ஆச்சரியமான செய்தி, ராஜ நாகங்கள் தங்களின் பிளவுபட்ட நாக்கினல் காற்றினை சுவைக்குமாம், எந்தவிதமான வாசனை அதில் கலந்திருந்தாலும் அதனைச் சுலபமாக்க் கண்டுபிடித்துவிடும். அந்த வகையில்தான் பாம்புகள் தங்கள் இறையினைத் துரத்திப் பிடிக்கின்றன.

5. நாவினால் காற்றை சுவாசிக்கும் முறையில்தான், ஆண் ராஜநாகங்கள் பெரமோன் திரவ வாசனையை உணர்ந்து பெண் ராஜ நாகங்களின் இருப்பிடம் தேடிப்போகின்றன.

6. ராஜநாகங்கள் உடலுறவு பல மணி நேரம்   நீடிக்கும். ஒரு நாள் முழுவதும்கூட ஆண் பெண் பாம்புகள் ஒன்றைஒன்று பின்னியபடி கிடக்கும். இந்த உடலுறவு முடிந்த்தும் சில சமயம் ஆண் பாம்புகள் பெண் பாம்புகள் விழுங்கிவிடும்.

7.பெண் ராஜ நாகங்கள் கர்ப்பமாக இருக்கும் சமயம் மற்றும் உடலுறவில் விருப்பம் இல்லாத சமயங்களிலும் ஆண் பாம்புகளை பெண்பாம்புகள் சாப்பிட்டு ஏப்பம் விடுகின்றன.

8. இந்த ஆண் ராஜ நாகங்கள் இனப்பெருக்கக் காலத்தில், இதே ஞாபகமாக இருக்குமாம். இந்த சமயத்தில் இரண்டு முதல் மூன்று மாதங்கள் கூட எதையும் சாப்பிடாமல் பட்டினி கிடக்குமாம்.

9. அதனால்தான் உடலுறவு முடிந்ததும் ஆண் பாம்புகளை பெண் பாம்ம்புகள் விழுங்கி விடும். இந்த சமயங்களில் ஆண்பாம்புகள் பெண் பாம்புகளைவிட அளவில் சிறியதாகவும், பலவீனமாகவும் இருக்கும். அதனால் இந்த ஆண் பாம்புகள் தங்கள் உயிரையே பணயம் வைக்கின்றன.

10. பாம்பு இனங்களில் சில முட்டை இடும், சில இனங்கள் குட்டிப் போடும். ஆனால் ராஜநாகங்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கக் கூடியவை. ஒரே சமயத்தில் 21 முதல் 40 முட்டைகள் வரை இடும்.

இனப் பெருக்கத்திற்காக தனது உயிரையே பெண் பாம்பிற்கு இறையாகத் தரும் ஆண்பாம்ம்புபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று உங்கள் கருத்தினை பதிவு செய்யுங்கள்.

மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திக்கலாம், இது போன்ற அரிய தகவல்களைத் தெரிந்துகொள்ள எனது வலைத் தளத்தில் மீதம் உள்ள கட்டுரைகளைப் படியுங்கள், www.gnanasuriabahavan.com.

மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திக்கலாம், நன்றி, வணக்கம்

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...