Friday, September 9, 2022

SECRET SEX LIFE OF SNAKES

  

 

பாவம் ஆண் பாம்புகள்

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம்.!

"நாகமும் சாரையும் இழையும்போது பாத்திருக்கிங்களா ?"

"பாம்புங்க சேரும்போது நாம பாத்துட்டா அவ்ளோதான்..துரத்த ஆரம்பிச்சுடும்..கடிக்காம விடாது..அந்த சமயத்துல அதுங்க ரொம்ப ஆக்ரோஷமா இருக்கும்.." இப்படி நிறைய சொல்லுவார்கள். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது

பாம்புகள் சேர்வது, கூடுவது, இனப்பெருக்கம் செய்வது பற்றிய அறிவியல் ரீதியான செய்திகளைப் பார்க்கலாமா? 

1.சாரைப் பாம்புகளில் சில ஒரு ஆண்டில் பலமுறை உடலுறவு கொள்ளும்.  

2.கருஞ்சாரைகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் உடலுறவு கொள்ளும். 

3.ஒருமுறை உடலுறவு கொண்ட பாம்புகள் எனக்கு நீ உனக்கு நான் என்று  சேர்ந்து வாழ்வதில்லை, நீ யாரோ நான் யாரோ என்பது போல பிரிந்து சென்றுவிடும். 

4. ராஜநாகங்களில்உடலுறவுக்குப் பின் ஆண் பாம்புகளை பெண்பாம்புகள் விழுங்கி விடுகின்றன என்பது மயிர்க் கூச்செரியும் உண்மை. 

5.அனகோண்டா பாம்புகளில், ஒரு பெண்பாம்பு, உடலுறவு முடிந்ததும் சந்தோஷத்தில் இரண்டு மூன்று ஆண் பாம்புகளைக் கூட சாப்பிட்டு விடுமாம்.

6.பாம்புகள் ஒன்றை ஒன்றைப் பின்னிப் புரளுவவது உடலுறவு கொள்வதற்காக மட்டுமல்லஅவை சண்டை போடுவதற்கும் கட்டிப்புரளுகின்றன. 

7.சிலந்திப் பூச்சிகள் மற்றும் பாம்பு இனங்கள், ஒரே மாதிரியான உடலுறவு கொள்கைகளைக் உடையவை.

8. பெண் சிலந்திகள் மற்றும் பெண் பாம்புகள்  ஆண்களைவிட அளவில் பெரியதாக இருக்கும்.  

9. சாரைப் பாம்புகளும் நாகப்பாம்புகளும் பின்னிப் பிணைந்து உடலுறவு கொள்ளும் என்பதில் உண்மையில்லை. 

10.பாம்புகள் இனப் பெருக்கம் செய்ய ஆண் பாம்புகள் தேவையில்லை, பெண்பாம்புகள் தன்னிச்சையாக, சுயமாக முட்டையிட வாய்ப்புள்ளதாம். 

அதனால் ஆண்பாம்புகளை பெண் பாம்புகள் மதிப்பதில்லை. 

மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல் களைத் தெரிந்து கொள்ள www.gnanasuriabahavan.com வலைத்தளத்தைப் பாருங்கள். 

அடுத்த பதிவில் சந்திப்போம்,வணக்கம்

 



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...