Friday, September 30, 2022

RURAL INDIA MILK INDUSTRY - வீட்டுக்கு வீடு பால்மாடு

வீட்டுக்கு வீடு 
பால்மாடு

அன்பு உடன்பிறப்புகளுக்கு  வணக்கம்.🌹🙏🏻

விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் தொழில் பால் மாடு வளர்ப்பு. அது பற்றியப் பதிவுதான் இது.

நாம் ஏன் பால் தொழிலில் கவனம் செலுத்தவேண்டும் ? பால் தொழில் லாபகரமானதுதானா ? அது கிராம மக்களின் எதிர்கால வாழ்விற்கு எப்படி ஏற்றம் உடையதாக இருக்க போகிறது ? அதற்கான வாய்ப்புகள் எப்படிப் பிரகாசமாக உள்ளது ?அது பற்றிய முக்கியமான 25 செய்திகளைப் பார்க்கலாம்.

 1.உலகிலேயே அதிக எண்ணிக்கையில்  எருமைகள் மற்றும் கால்நடைகளைக் கொண்டது இந்தியா. 

2.உலகில் உள்ள எருமைகளில் 57.3% இந்தியாவில் தான் உள்ளன. இதர கால்நடைகள் 14.7 சதம்  நம்மிடம்தான் உள்ளது என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம்.

3. இந்தியாவின் பால் உற்பத்தித் தொழிலுக்கு இமாலய வரவேற்பு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 4. உத்தரப்பிரதேசம் ராஜஸ்தான், ஆந்திரா ஆகியவைதான்  இந்தியாவின் பால் கிண்ண மாநிலங்கள்.

5. உத்தரபிரதேசம் பெரிய பால்குடம், இந்தியாவின் பால் உற்பத்தியில் 18 சதம் பாலை உற்பத்தி செய்கிறது.

6. உலகில் மொத்தம் 193 நாடுகள் இருக்கின்றன. அதில் அதிகப்படியான பாலை உற்பத்தி செய்வது நம் நாடு. அதனால் இந்தியா தான் உலகத்தின் பால் கிண்ணம்.

7.உலகிலேயே அதிகமான பாலை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருந்தாலும் பால் உற்பத்தியில் அல்லது பால் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருப்பது  நியூசிலாந்து.

8.இந்தியா ஏற்றுமதி செய்யும் பாலின் மொத்த அளவு, 108711.27 மெட்ரிக் டன். 

9.பாலில் இருந்து இந்தியாவிற்கு கிடைக்கும் வருமானம் 2928.27 கோடி ரூபாய் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

10.இந்தியாவில் அதிக அளவில் பால் பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனம் "அமுல்".

11.அமுல் என்னும் பெயர் நமக்கு அறிமுகமானது 1946ஆம் ஆண்டு அதாவது சுதந்திரத்திற்கு ஒரு ஆண்டு முன்னதாக.

12. நாம் கறந்த பாலை மதிப்புக் கூட்டினால் விற்பனை செய்ய முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

13.கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர், இதனை ஸ்கிம்டு மில்க் என்று சொல்லுகிறோம்.

14. இது தவிர வெண்ணெய், நெய், சீஸ் என்னும் பாலாடைக்கட்டி, கிரீம், தயிர் ஆகியவை. 

15.இவற்றையெல்லாம் வாங்க பல வெளிநாடுகள் இந்தியாவிலிருந்து
வாங்குவதற்கு காத்திருக்கின்றன.

16.கிராமப் புற மக்கள்  தொழில் செய்ய லாபகரமாக பால்மாடு வளர்க்க முடியும்.

17.ஐ டி பட்தாரி இளைஞர்கள் கிராமங்களில் பால் மதிப்புக் கூட்டும் தொழிலை குறைவான முதலீட்டில் தொடங்கி ஏற்றுமதித் தொழிலில் விட கூடுதலான லாபம் பெற முடியும் .

18.உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகள் பால் மதிப்புக் கூட்டும் தொழிலை கிராமங்களில்  தொடங்க முடியும். 

19. ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் கம்பெனியும் ஒரு அமுல்  கம்பெனியை உருவாக்க முடியும்.

20. பால் உற்பத்தி ஏற்றுமதியில் கூட இந்தியா நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளிவிட முடியும்.

21.எனது தோழமையான தொண்டு நிறுவனங்களால், எல்லோரையும் விட இதனை வெற்றிகரமாக செய்ய முடியும்.

22. இந்தக் கனவுகள் எல்லாம் நனவாக அரசுத்துறைகளும், பல்கலைக் கழகங்களும் ஆதரவுக் கரங்களை, உதவிக் கரங்களை நீட்ட முடியும்.

23. பால் மாடுகளை வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமப்புற மக்களுக்கான இந்தப் பதிவு தொடரும். 

24. எனது இதர பதிவுகளை கட்டுரைகளை வாசிக்க எனது வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.

25. எனது வலைத்தளத்தின் இணைப்பு அல்லது லிங்கினை இத்துடன் தருகிறேன்.(www.gnanasuriabahavan.com).

மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம் வணக்கம் !

 Milk Industry, India, Tamilnadu, Tirppathur District, Thekkupattu, Bhumii trust, Gnanasuria bahavan,


 
KEY WORDS; INDIA, RURAL INDIA, INDIA'S MILK INDUSTRY, வீட்டுக்கு வீடு  பால்மாடு, TAMILNADU, THURUPPATHUR DISTRICT, SKIMMED MILK POWDER, BUTTER, GHEE, CHEESE, CREAM, CURD, JERSSEY COW, BUFFALOES, WORLD'S NUMBER ONE  MILK PRODUCUNG  COUNTRY, NEWSLAND, UTHRAPRADESH,

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...