ஆறும்
ஊரும்
கொள்ளிடம் ஆறு
பகுதி- இரண்டு
அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !
இன்று நாம் கொள்ளிடம் முதல் பகுதியில் கொள்ளாத செய்திகளை இந்த இரண்டாம் பகுதியில் பார்க்கப்போகிறோம். உங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று ரசித்து ருசித்துப் பார்த்து பார்த்து பல தகவல்களை துளித்துளியாக சேகரித்துத் தந்திருக்கிறேன்.
கொள்ளிடம் எங்கு பிறக்கிறது ? எங்கு சங்கமமாகிறது ? இதில் கட்டப்பட்டுள்ள மேலணை மற்றும் கீழணை எங்கு உள்ளது ? இந்த அணைகளைக் கட்டியது எந்த அரசாங்கம் ? கொள்ளிடத்தின் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் எவை ?
இப்படி கொள்ளிடம் ஆறு பற்றிய அனைத்து தகவல்களையும் இதில் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
1. இந்த அணையின் சிறப்பு அம்சங்கள் இரண்டு. இதன் மூலம் விவசாய நிலங்கள் பாசனம் பெறுவது. இரண்டாவது வெள்ள காலத்தில் பயிர் சேதமும் உயிர்ச் சேதமும் ஏற்படாமல் பாதுகாப்பது.
2. காவிரியிலிருந்து கிளையாகப் கொள்ளிடம் ஆறு திருச்சி அரியலூர் தஞ்சாவூர் மாவட்டங்களைக் கடந்து, கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை அருகில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் சங்கமமாகிறது. வேறு சில இடங்களிலும் இது சங்கமம் ஆகிறது எனத் தெரிகிறது.
3. கொள்ளிடம் ஆறு பற்றி ஒரே வரியில் சொல்வதானால் அது காவிரியின் வெள்ள வடிகால் அதாவது மிகப்பெரிய மழைநீர் அறுவடை சாதனம்.
4. மேல் அணை கட்டியவர், சர் ஆர்தர் காட்டன். என்ற வெள்ளைக்காரர். இவரை இந்திய நீர்ப்பாசனத் திட்டங்களில் தந்தை என்று இன்றும் அவரைப் போற்றுகிறார்கள்.
5. தனது வாழ்க்கை முழுவதையும் இதற்காக அர்ப்பணித்தவர் சர் ஆர்தர் காட்டன்.பிரிட்டீஷ் காரர்களின் போர்த் தளபதியாக அறியப்பட்டவர். ஆனால் அடிப்படையில் இவர் ஒரு போற்றக்கூடிய பொறியாளர்.
6. மேலணை போலவே கொள்ளிடத்தில் அமைந்துள்ள கீழணையும் முக்கியமான அணைக்கட்டு. ஆங்கில அரசால் 1902-ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தின் பாசனத்திற்காக இது கட்டப்பட்டது.
7. கீழணையில் இருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ளது. அதைவிட இதுபற்றிய ஒரு அதிசயமான செய்தி உண்டு. சொழமன்னர்களின் தலைநகராக இருந்த கங்கைகொண்ட சோழபுரத்தில் இடிபாடுகளில் கிடைத்த கற்களைக் கொண்டு இந்த அணையைக் கட்டி இருக்கிறார்கள்.
8. கீழணையின் மதகுகள், கொள்ளிடம் கொண்டு வரும் நீரை மண்ணியாறு உப்பனாறு என்ற இரு ஆறுகளாகப் பிரிக்கிறது.
9. கொள்ளிடம் ஆற்றின் கரையில் இருக்கும் பிரபலமான ஊர்களிலும் முதன்மையானது எது தெரியுமா சிதம்பரம். எனக்கும் சிதம்பரத்திற்கும் உள்ள தொடர்பு, ஒரு சிதம்பர ரகசியம். வேறு ஒன்றுமில்லை, முதன்முதலாக விவசாய அதிகாரியாக வேலையில் சேர்ந்தபோது நான் தங்கியிருந்த இடம்தான் சிதம்பரம்.
10. தமிழ்நாட்டின் மிக முக்கியமான தீவு நகரம் திருச்சி மாவட்டத்தின், ஸ்ரீரங்கம். இங்குதான் காவிரி ஆறிலிருந்து கொள்ளிடம் ஆறு பிரிகிறது.
11. விஜயநகரப் பேரரசின் போது, 1336 முதல் 1565 ம் ஆண்டு வரையான காலகட்டத்தில், ஆயிரம் தூண்களுடன் கட்டப்பட்ட ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் கொள்ளிடத்தின் பிறப்பிடமான ஸ்ரீரங்கம் தீவில்தான் உள்ளது.
12. ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி யையும் தரிசிக்கலாம் கொள்ளிடத்தின் தாய் ஆறான காவிரி யையும் தரிசிக்கலாம்.
13. குடும்ப சமேதராக சுற்றுலா செல்ல ஏற்ற இடம் ஸ்ரீரங்கம். அங்கு போனால் ஸ்ரீரங்கநாதரை தரிசிக்கலாம். கோயில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். இங்கு ஆலயப் பிரவேசம் இலவசம் ஆனால் விஸ்வரூப சேவா என்றால் தலைக்கு நூறு ரூபாய் உடனடி சேவா என்றால் 250 ரூபாய் கட்டணம்.
ஸ்ரீரங்கமும், முக்கொம்பும் போய் வந்து எனக்கு சொல்லுங்கள்.
இதுவரை நான் ஆறுகள் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளை வாசிக்காதவர்கள் www.gnanasuriabahavan.com என்ற வலைத்தளத்திற்கு சுற்றுலா போய் வாருங்கள்.
நன்றி வணக்கம் ! மீண்டும்
அடுத்தப் பதிவில்.
No comments:
Post a Comment