Tuesday, September 20, 2022

QUEEN ELIZABETH'S LIFE TIME MESSAGE - வாழ்நாள் செய்தி தந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்

 


வாழ்நாள் செய்தி தந்த

மகாராணி இரண்டாம் எலிசபெத்

அன்பு உடன் பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !   

இந்தப் பதிவில் "பேரரசி இரண்டாம் எலிசபெத்  பற்றிய ஏழு சுவையான தகவல்களைப் பார்க்கலாம். 

1.இரண்டாம் எலிசபெத், இங்கிலாந்து நாட்டின் 1952 ம் ஆண்டிலிருந்து அவர்  மறைவு வரை  பேரரசியாக பதவி வகித்தது, 25760 நாட்கள், 70 ஆண்டுகளும் 214 நாட்களும். அவருடைய அங்க அசைவுகளை வைத்து அவர் விருப்பம்  என்ன என்று சொல்லுகிறார்கள். ஆச்சரியம்..!  பிரமுகர்களை உலகம் எப்படி கவனிக்கிறது பாருங்கள். 

2. அவர் தன் விரல் மோதிரத்தை சுழற்றினால் எங்கிட்ட கேளுங்கப்பா நான் என்னன்னு சொல்றேன்..நீங்க ரெடின்னா நான் ரெடி..” என்று அவர் பேச அல்லது கருத்து சொல்ல தயாராக இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

3. கொஞ்சநேரம் பேசிவிட்டு மீண்டும் விரலில் தன் மோதிரத்தை சுழற்றினால், “இதுக்கு மேல என்னால பேசமுடியாது.. ஆள விடுங்கப்பா..” என்று அவர் தனது பேச்சை முடித்துக் கொள்ள விரும்புகிறார் என்று அர்த்தம். 

4.அவர் கலந்து கொள்ளும் விருந்தில் தனது கைப்பையை மேசை மீது எடுத்து வைத்தால், "சாப்பிட்டது போதும். ஏப்ரானை கழற்றிட்டு.. டிஷ்யூவில கையத் தொடைங்கப்பா.." என்று அர்த்தம். 

5. ஒரு கலந்துரையாடலின் போது தனது கைப்பையை தூக்கி தரையில் வைத்தால் " போரடிக்கறாங்க.. இதுக்கு மேல எனக்கு  பொறுமை இல்ல.. யாராச்சும் வந்து என்னை காப்பாத்துங்கப்பா.." என்று அர்த்தமாம். 

6.இப்படி எலிசபெத் மகாராணியின் தும்மலைக்கூட துல்லியமாகக் கவனித்துப் பதிவு செய்தவர் ஹியூகோ விக்கர்ஸ், இவர் ஒரு ஆங்கி எழுத்தாளர் மற்றும் ஒலிபரப்பாளர். இதையே தொழிலாக வைத்து ராணியின் பின்னால் அலைந்திருப்பார் போல. 

7. "நாம் யாரும் காலம் காலமாக வாழப் போவதில்லை..நாம் இப்போது இங்கே செய்யப் போவது நமக்காக அல்ல..நம் குழந்தைகளுக்காக, நம் குழந்தைகளின் குழந்தைகளுக்காக. நாம் நமது இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும்..பராமரிக்க வேண்டும்..மேம்படுத்த வேண்டும்..." 2021 ம் ஆண்டு யுனைட்டட்  நேஷன்ஸ் கிளைமேட் சேஞ்ச் கான்பரன்ஸ்' சில் அவர் பேசியதுதான் இது.

நாம் நமக்காக வாழலாம்தவறில்லை அடுத்த தலைமுறைக்கு ஏதாவது செய்யுங்கள் என்பதை  அவருடைய வாழ்நாள் செய்தியாகக் கொள்ளலாம். 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம், வணக்கம் !

20 செப் 22

 

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...