Monday, September 19, 2022

QUEEN ELIZABETH IN WESTMINSTER ABBEY - மகாராணி இரண்டாம் எலிசபெத்

 


மகாராணி இரண்டாம் எலிசபெத்

வெஸ்ட்மின்ஸ்டர் அப்பே’யில்

அடக்கம் செய்யப்படுகிறார் !

பிரிட்டீஷ் பேரரசி இரண்டாம் எலிசபெத் அவர்களின்  உடல் இன்று (19.09.2022) லண்டனில் பார்லிமெண்ட் கட்டிடத்திற்கு அருகிலும், தேம்ஸ் நதியின் கரையிலும் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அப்பேஎன்னும் புராதனமான கிறித்துவப் பேராலயம் மற்றும் துறவிகள் மடாலயத்தில் அடக்கம் செய்ய உள்ளார்கள்.

இன்றைக்கு நாம் பார்க்கும் பிரம்மாண்டமான பேராலயத்தினை 1240 ம் ஆண்டில் அரண்மனை போலக் கட்டியவர் பேர்ரசர் மூன்றாம் ஹென்றி என்பவர். நூறாண்டுகள் கழித்து மூன்றாம் ரிச்சர்ட் என்ற மன்னரால் கட்டி முடிக்கப்பட்டது. வெஸ்ட்மினிஸ்டர் என்பது லண்டனில் ஒரு நகரின் பெயர். அப்பே என்றால் ஒரு கிறித்துவ பேராலயம் மற்றும் துறவிகளின் வசிப்பிடத்துடன் இணைந்த அரண்மனை  என்று சொல்லலாம்.

 ஆறாம் நூற்றண்டில் கட்டப்பட்ட இந்த சர்ச் வளாகத்தில் இங்கிலாந்து நாட்டின் பேரரசர்கள், பேரரசிகள், அரசியல் பிரமுகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், மற்றும் விஞ்ஞானிகள் என 3000 பிரமுகர்களின் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டீஷ் பேரரசி இரண்டாம் எலிசபெத் அவர்களின்  உடலும் இறுதி அஞ்சலிக்குப் பிறகு இங்குதான் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...