கமண்டலநாக நதி மீட்புப் பணிக்கு பிரதமர் பாராட்டு
அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !
திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்றுதான்
இந்த கமண்டல நதி.
1.
ஜவ்வாது மலைகளிலிருந்து உருவாகும் பீமன் ஆறு, மிருகண்ட
நதி, மற்றும் நாகநதி ஆகியவை மூன்றும் ஒன்று சேர்ந்து உருவாவதுதான்
கமண்டல நாக நதி.
2.
செண்பகத் தோப்பு அணை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை.
3.
கமண்டல நாகநதி ஆறு வாழப்பந்தல் என்னும் ஊரில் செய்யார் ஆற்றில் கலக்கிறது.
4.
படவேடு, சந்தவாசல், வெள்ளூர்,
ஒண்ணுபுரம், கண்ணமங்கலம், நீப்பளாம்பட்டு, அரசம்பட்டு, காமக்கூர்,
ஆரணி, சத்திய விஜய நகரம், லாடப்பாடி, மாமண்டூர், முணுகம்பட்டு,
வாழப்பந்தல், ஆகிய ஊர்கள் கமண்டல நாகநதியின் கரையில்
அமைந்துள்ள ஆற்றங்கரை ஊர்கள்.
5.
கணியம்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 354 இடங்களில்
உறைக்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதால் இப்பகுதிகளில் உள்ள திறந்த வெளிக் கிணறுகளில் நீர்மட்டம்
கணிசமாக உயர்ந்துள்ளது என்கிறார்கள்.
6.
இந்த ஊரைக் கிணறு திட்டம் 9 ஊராட்சி ஒன்றியங்களில்
விரிவுபடுத்தப்பட்டு 3768 இடங்களில் அமைத்திருக்கிறார்கள்.
7.
ஒரு ஆச்சரியமான செய்தி, 100 நாள் திட்டப் பெண்கள்
உதவியுடன் மட்டுமே இந்த்த் திட்ட்த்தை செயல்படுத்துகிறார்கள்.
8.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது “மனதின் குரல்” வானொலி நிகழ்ச்சியில்
26.09.2021 அன்று இந்தத் திட்டத்தினை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
9.
மழைக்காலத்தில் கிடைக்கும் வீணாகப் போகும் நீரை அறுவடைச் செய்வதுதான்
இந்த உறைக்கிணறு திட்டம்.
10.
இந்த நாகநதி ஆற்ரின் மீட்புத் திட்ட்த்தைத் தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்திய "ஆர்ட்
ஆஃப் லிவிங்க் ஃபவுண்டேஷன்" என் ஜி ஓ நிறுவனத்துக்கு நமது வாழ்த்துக்களை பாராட்டுக்களைத்
தெரிவித்துக் கொள்ளுவோம்.
மீண்டும் நாளை சந்திப்போம் ! வணக்கம் !
06
செப் 22
No comments:
Post a Comment