சஞ்சீவி மூலிகை வேர் பாருங்கள்
சஞ்சீவி மூலிகையின்
உண்மையான வேரா ? உடான்ஸ் வேரா ?
“கருடன் எப்போது முட்டையிடும் என்று பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். இலுப்பை போன்ற உயரமான மரங்களில்தான் கருடன் பறவைகள் கூடுகட்டி முட்டை யிடும். அப்படி முட்டையிட்டு குஞ்சு பொரித்தவுடன் அந்த கருடன் குஞ்சுகளின் கால்களில் சிறு கம்பியினால் கட்டிவிட வேண்டும். இத கம்பி கட்டினை நீக்குவதற்கு தாய் கருடன் பறவை சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும். சஞ்சீவி மூலிகை வந்ததும் இந்த கம்பிக்கட்டு தெறித்து விழும். அந்த மூலிகை மட்டும் அந்த கூட்டிலேயெ கிடக்கும். அந்த சமயம் பார்த்து அந்த சஞ்சீவி மூலிகையை நாம் கருடனுக்குத் தெரியாமல் எடுக்க வேண்டும்.”
நான் பள்ளிக்கூட பையனாக இருந்த போது எங்களுக்கு சொல்லப்பட்ட கதை இது. இந்த சஞ்சீவி மூலிகையை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் நாம் நினைத்ததெல்லம் நடக்கும் என்று சொல்லுவார்கள்.
ராம ராவண யுத்தத்தில் இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரம் தாக்கி மயக்கமான லட்சுமணன் உயிரைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி பர்வத மலையை பெயர்த்து எடுத்து வந்தார் என்பது ராமாயணத்தில் முக்கியமான கட்டம்.
அந்த சஞ்சீவி மூலிகையின்
வேரை தண்ணீரில் விட்டால் தண்ணீர் ஒடும் திசைக்கு எதிராக ஓடும் என்று சொல்லுவார்கள்.
மேலே உள்ள வீடியோவில் தண்ணீரில் ஓடுவது சஞ்சீவி வேர் என்று எனது நண்பர் எனக்கு அனுப்பியிருக்கிறார்.
பார்த்து சொல்லுங்கள். இது உண்மையான வேரா ? உடான்ஸ் வேரா ?
No comments:
Post a Comment