Wednesday, September 14, 2022

INDIAN DIAMOND KOHINOOR IN ELIZABETH'S CROWN

 



திருடுபோன கோகினூரை 

திருப்பி குடுங்கண்ணே !

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !🌹🙏🏻

"திருடுபோன கோகினூரை திருப்பி குடுங்கண்ணே !


கோகினூர் வைரம் தொடர்பான 21 செய்திகளை இப்போது பார்க்கலாம்.

1. தங்கம் வாங்கும் போது ஒரு பவுன் என்று சொன்னால் அது 8 கிராம் என்று அர்த்தம். அது போல வைரத்தை "காரட்" என்கிறார்கள். காரட் என்பது அதன் எடையைச் சொல்லுகிறது. ஒரு காரட் என்பது 200 மில்லி கிராம் எடையைக் குறிக்கும்.

2. கோகினூர் வைரம் தோண்டி எடுக்கப்பட்டது கொல்லூர் சுரங்கத்தில், இந்த சுரங்கம் ஆந்திரப் பிரதேசத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யும் பெரிய சைஸ் வைரங்களை  கோல்கொண்டா டைமண்ட்ஸ் என்கிறார்கள்.

3. டெவர்னியர் புளூ:(Tavernier Blue) இதுவும் கோகினூர் மாதிரியான ஒரு பிரபலமான ஒரு வைரக்கல்.ஜீன் பாப்டிஸ்ட் டெவர்னியர் என்பவர் 17 ம் நூற்றாண்டில் கொல்லூர் சுரங்கத்திலிருந்து இதை வாங்கினார்.

4. பிரான்ஸ் நாட்டின் அரசர் 14 வது லூயிஸ், டெவர்னியர் புளூ வைரக்கல்லை ஜீன் பாப்டிஸ்டிடமிருந்து வாங்கினார்.

5. லூயிஸ் மன்னரிடமிருந்த டெவர்னியர்புளூ என்ற வைரக்கல் பிரெஞ்சுப் புரட்சியின் போது காணாமல் போனது.

6. அதே வைரக்கல் சில காலம் கழித்து "ஹோப் டைமண்ட்" என்ற பெயரில் மீண்டும் வெளி வந்தது. 

7. கோகினூர் வைரமும் கொல்லூர் சுரங்கத்தில் எடுத்ததுதான்.

8. உலகிலேயே வெட்டி தயாரிக்கப்பட்ட பெரிய வைரங்களில் பிரபலமானது கோகினூர் வைரம்.

9. கோகினூர் வைரத்தின் எடை 105.6 காரட். ஒரு காரட் என்பது 200 மில்லி கிராம்.அப்படிப்பார்த்தால் கோகினூர் வைரத்தின் எடை 21.12 கிராம்.

10.எழுபது ஆண்டுகளும் 214  நாட்களும்(25764 நாட்கள்)  இங்கிலாந்தின் அரசியாக தொடர்ந்து இருந்தவர் இரண்டாம்  எலிசபெத் ராணி,இதுவரை அவருடைய கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது இந்த கோஹினூர் வைரம்.

11.எலிசபெத் மகாராணி இறந்ததைத் தொடர்ந்து அடுத்து இந்த கிரீடம் செல்ல வேண்டியது மன்னராக பொறுப்பேற்றுள்ள மூன்றாம் சார்லசின் கிரீடத்திற்கு.

12. 14 ஆம் நூற்றாண்டில் காக்காத்தியர்கள் அரசாண்ட போது இந்தக் கோகினூர் வைரம் உருவாக்கப்பட்டது.

13.இந்த கோஹினூர் வைரம், ஆந்திராவில் வாரங்கல்லில் உள்ள ஹிந்து கோவிலில் ஒரு தெய்வத்தின் சிலைக்கு கண்ணாக பொருத்தப்பட்டிருந்தது. 

14.அலாவுதீன் கில்ஜியின் போர்த் தளபதியாக இருந்த மாலிக்காபூர் இந்த கோவிலில் கொள்ளை அடித்த போது, இந்த கோகினூர் வைரத்தையும் சேர்த்து கொள்ளை அடித்தார். 

15.அதற்கு பின்னர் இந்த கோகினூர் வைரம் தொடர்ச்சியாக முகலாய மன்னர்கள் வசம் இருந்ததாகத் தெரிகிறது.

16.பின்னர் லாகூரை அரசாண்ட சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங் வசம் இந்த கோகினூர் வைரம் போய்ச் சேர்ந்தது.

17. பின்னர் பஞ்சாப்பும் ரஞ்சித் சிங்கின் ஆட்சியின்கீழ் வந்தது.ரஞ்சித் சிங்கின் வசமிருந்த கோஹினூர் வைரம் அவருடைய மகன் வசம் வந்தது.  

18.ரஞ்சித் சிங்கைத் தொடர்ந்து அவருடைய மகன் திலீப் சிங் மன்னரானார்.

19. மன்னர் திலீப் சிங் தன் வசம் இருந்த கோகினூர் வைரத்தை விக்டோரியா ராணிக்குப் பரிசாகத் தந்தார்.

20. தற்போது இந்தக் கோகினூர் வைரம் இங்கிலாந்து ராணியின்/ அரசரின் கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

21.கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடம் தற்போது "டவர் ஆப் லண்டன்ஸ் ஜுவல் ஹவுஸ்" என்ற இடத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது, என்கிறார்கள். 

இதுவரை கோரிக்கைற்று கிடக்குதண்ணே  இந்த கோகினூர் வைரம் என்று விட்டு விட்டோம் !

 திருடுபோன கோகினூரைத் திருப்பிக் குடுங்கண்ணே ! சார்லஸ் அண்ணே !

14 செப் 22
 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...