Monday, September 5, 2022

HOW TO COOK BOKA CHAUL RICE WITHOUT FIRE ?

 

சமைக்காமலே சோறாகும் அரிசி

போக்கா சாவல்


அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமிஞானசூரியன் வணக்கம் !

உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வகையான அரிசி ரகங்கள் இருக்கின்றன. இவற்றில் எல்லா அரிசி ரகங்களுமே சமைத்தால்தான் அரிசி ஆகும். ஆனால், சமைக்காமலே தண்ணீரில் ஊர வைத்தாலே சோறாகும் ஒரே ஒரு அரிசி ரகம் போக்கா சாவல் என்னும் இந்திய அரிசி ரகம் மட்டும்தான்.

அபூர்வமான இந்த அரிசிக்கு சொந்த ஊர் அஸ்சாம் மாநிலம். போக்கா சாவல் என்பது இதன் பெயர்.  சாதம் அல்லது சோறு என்பதை இந்தியில் சாவல் என்று சொல்லுகிறார்கள்.

1. போக்கா சாவல் அரிசியை முப்பது நிமிடம் தண்ணீரில் ஊரவைத்தால் போதும், சாப்பிட சோறு தயார் ஆகிவிடும்.

2. போக்கா சாவல் அரிசியை முப்பது நிமிடம் சுடு தண்ணீரில் ஊரவைத்தால் போதும், சாப்பிட சுடு சோறு தயார் ஆகிவிடும்.

3. போக்கா சாவல் அரிசியில் 10.73 % நார்ச்சத்தும் 6.8 % புரதச்சத்தும் அடங்கியுள்ளது.

4. அமேசான் அல்லது ஃபிளிப்கார்ட்’டுக்கு  200 முதல் 250 ரூபாய் அனுப்பினால், அரை கிலோ  போக்கா சாவல் அரிசி நம் வீடு தேடி வரும்.

5. நல்பாரி, பார்பெட்டா, கோல்பாரா, காமரூபம், டார்ரங்க், தூப்ரி, சிராங், போன்கை காவுன் ஜோக்ராஜர், பக்சா – பயப்படாதீர்கள் இதெல்லாம் போக்கா சாவல் நெல் ரகம் சாகுபடி செய்யும் அஸ்சாம் கிராமங்களின் பெயர்கள்.

6. அஸ்சாம் கிராமத்து மக்கள் தண்ணீரில் ஒருமணி நேரம் பொக்கா சாவல் அரிசியை ஊரவைத்து சாதமாக மாறிய பின்னால், அத்துடன் வெல்லம் அல்லது  வாழைப்பழம் அல்லது தயிரில் பிசைந்து சாப்பிடுகிறார்கள்.

7.போக்கா சாவல் நெல் ரகத்தை ஜூன் மாதம் விதைத்து டிசம்பரில் அறுவடை செய்கிறார்கள்.

8. இந்த நெல் ரகத்திற்கு ரசாயன உரம் என்றால் பிடிக்காது, போட்டால் பயிரும் சரியாக வளராது, மகசூலும் சரியாக தராது,  நூறு சதவிகிதம் ஆர்கானிக் !

9. சுருக்கமாக சொல்லப்போனால் இது இயற்கையான சமைக்காத ஃபாஸ்ட்ஃபுட்.

10. போக்கா சாவல் நெல் ரகத்தின் வயது 145 நாட்கள், ஐந்து மாதத்திற்கு அந்து நாட்கள் கம்மி.

போக்கா சாவல் அதிசய நெல் ரகம் பற்றி தகவல் தேவைப்படுவோர் பூமி இயற்கை வளப்பாதுகாப்பு மையப் பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.(போன்;8526195370)

05.செப்.22

.  

 

 

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...