Saturday, September 17, 2022

GANGES SACRED RIVER OF INDIA - இந்தியாவின் புனிதமான ஆறு கங்கை


 

இந்தியாவின்  புனிதமான ஆறு 

கங்கை

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !

இந்தியாவில் நீளமான ஆறு, உலக அளவில் 17 வது  நீளமான ஆறு, உலக அளவில் நீரோட்டம் உடைய ஆறுகளில் நான்காவதாக உள்ள ஆறு, உலக அளவில் அதிக மக்கள் தொகைக்கு உணவளிக்கும் ஆறு, அத்தோடு அதிக மாசுடைய ஆறு இப்படி பல பண்புகள் கொண்ட கங்கை ஆறுபற்றிய எனக்குப் பிடித்த 10 முக்கிய செய்திகளைப் பார்க்கலாம்.  

1. இமயமலையில் கங்கோத்ரி பனிமலையில் உருவாகும் பாக்கீரதி மற்றும் அலக்நந்தா ஆகிய  இரு ஆறுகள் ஒன்று சேர்ந்து கங்கை நதியாகி, இந்தியா  நேப்பாளம், வங்காளதேசம் மற்றும் சீனா ஆகிய  நான்கு நாடுகளில்  ஓடி வங்காள விரிகுடாவில் சங்கமமாகும் ஆறு.

2. இந்தியாவில் 8,61,000 .கி.மீ. ம், நேப்பாளத்தில் 1,40,000 .கி.மீ, ம், வங்காள தேசத்தில் 46,000 ச.கி.மீ., ம், சீனாவில் 33,000 ச.கி.மீ. ம் நீர்வடிப் பரப்புகளைக் கொண்டது கங்கை, ஆறுகளின் ஓட்டமே இந்த நீர்வடிப்பரப்பை நம்பியதுதான்.  

3. இந்தியாவின் மிக நீளமான ஆறு கங்கைஇந்தியா மற்றும் வங்காளதேசத்தில்  2704 கி,மீ. ஓடும் நதி. உலக அளவில் 17 வது நீளமான நதி. 1465 கி.மீ. ஓடும் கோதவரி நதி.

4. இந்தியாவில் இரண்டாவது   நீளமான ஆற்றின் ஆண்டு சராசரி நீரோட்டத்தின் அளவைப் பொறுத்தவரை  சர்வதேச அளவில் கங்கை 4 வது நதி, அமேசான், காங்கோ மற்றும் ஒரினாகோ விற்கு அடுத்தது கங்கை நதிதான். ஆச்சரியமான அரிய செய்தி !

5. கங்கை  நதியில், 90 வகை நீர்வாழ் உயிரினங்கள் (AMPHIBIANS),  140  வகை மீன் இனங்கள் உள்ளன. கங்கை ஆற்றின் டால்பின்களும், கங்கை ஆற்றின் சுரா மீன்களும் மிகவும் வித்தியாசமானவை.

6.கங்கை என்றால் மூன்று முக்கியமான அம்சங்கள் உண்டு, ஒன்று கங்கை ஒரு புனிதமான ஆறு. இரண்டாவது, இந்துக்களின் மதம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஆறு. மூன்றாவது உலகிலேயே மிகவும் மாசடைந்த ஆறு என்பது, இந்த மூன்றும் சேர்ந்ததுதான் கங்கை !

7. இந்தியாவின் 400 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக உள்ளது. இந்த கங்கை ஆறு இந்தியாவின் மூன்றில் ஒருபங்கு மக்களுக்கு சோறு போடும் மகராசி !

8. கங்கையில் இருக்கும் டால்பின்ஐ இந்தியாவின் அரசு நீர்ப் பிராணியாக 2009 ம் ஆண்டு அறிவித்துள்ளார்கள். கங்கை ஆற்று டால்பின்கள்  நகர்ப்புறத்தில் ஓடும் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளில் வசிக்கின்றன. ஆக இது அரசு அங்கீகாரம் பெற்ற நீர்ப்பிராணி !

9. கிளைபிஸ் மற்றும் புல்ஷார்க் எனும் இருவகை சுறா மீன்கள் கங்கை ஆற்றில் உள்ளன. இவை இரண்டும் கங்கை ஸ்பெஷல் !

10. விஷ்ணுவின் பாதத்திலிருந்து உற்பத்தி ஆகும் வியர்வைதான் கங்கை நதியாக வடிவெடுக்கிறது, அதனால்தான் அதற்குவிஷ்ணுப்படிஎன்ற பெயரும் உண்டு.

தற்போது கங்கை நதிக்கு புத்துயிர் ஊட்டும் பணியை இந்திய அரசு தொடங்கியுள்ளது உங்களுக்கு தெரியுமா ? அது  நல்ல பலன் அளித்துள்ளதா ? என்று உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள். மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம், வணக்கம்.

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...