ஆறும் ஊரும்
"கொள்ளிடம் ஆறு"
பகுதி 1
அன்பு உடன்பிறப்புகளுக்கு வணக்கம் !
நமது ஆறும் ஊரும் தொடரில் நீங்கள் காட்டும் ஆர்வம் எனக்கு உற்சாகம் தருகிறது. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் இன்று வசிக்கும் ஊர்களையும் புசிக்கும் உணவையும் உருவாக்கியவை ஆறுகள்தான்.
அதனால் தான் அந்த ஆறுகளை பாதுகாப்பதும் பராமரிப்பதும் மேம்படுத்துவதும் நமது கடமை என்று சொல்லுகிறோம்.
அதனால்தான் ஆறுகள் பற்றிய விழிப்புணர்வு நமக்கு அவசியம் தேவை என்று சொல்கிறோம்.
அதனால்தான் இந்தக் கட்டுரைத் தொடர்.
இந்த தொடரில் அமேசான் நதி, நைல் நதி உட்பட நமது தமிழக ஆறுகள்பற்றி இதுவரை 32 ஆறுகள் பற்றிய சுவையான தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளேன். இன்று நாம் 33வது ஆறாக கொள்ளிடம் ஆறு பற்றி பார்க்கலாம்.
ஒரு ஊர் கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஒரு சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது, அது எந்த ஊர் ? 630 அடி நீளமான மேல் அணையை இரண்டே ஆண்டில் கட்டி முடித்த வெள்ளைக்காரப் பொறியாளர் யார் ? அவர் பெயர் என்ன ? ஏன் இந்தியாவின் நீர்ப்பாசனத் திட்டத்தின் தந்தை என்று அவரை குறிப்பிடுகிறார்கள் ? இப்படி கொள்ளிடம் பற்றிய பல சுவையான தகவல்களை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
1.கொள்ளிடம் என்பது தனி ஆறு அல்ல. காவிரி ஆற்றின் கிளை ஆறு. பெருமழை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தை கொள்ளும் ஆறு என்பதால் அதனை கொள்ளிடம் என்று அழைத்தார்கள். அதுதான் கொள்ளிடம் என்ற பெயரின் ரகசியம்.
3.திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள முக்கொம்பு,திருச்சி கரூர்
தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
தமிழகத்தின் மிக அழகான ஒரு சுற்றுலாத் தலம் இது. இங்குதான் மேல்அணை அமைந்திருக்கிறது. அங்குதான் காவிரியில் இருந்து பிரிந்து கொள்ளிடம் ஆகிறது. முக்கோம்பு என்பதும் இதுதான். மேலணை என்பதும் இதுதான்.
4.கொள்ளிடம் ஆற்றில் வீணாகப் போகும் தண்ணீரை விரயப் படுத்தாமல் விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக வெள்ளைக்காரர்கள் புத்திசாலித்தனமாக கட்டிய அணைதான் இந்த முக்கொம்பு மேலணை.
5. மேலணை சிறிய அணை அல்ல, 630 அடி நீளமும் 40 அடி அகலமும் 45 மதகுகளும் கொண்ட அணை.
6.வெள்ளைக்காரர்கள் சில நல்ல காரியங்களையும் செய்து தான் இருக்கிறார்கள். 1929 ஆம் ஆண்டிலேயே காவிரி ஆற்றுப் பாசனப் பகுதியை கவனிக்க என்று பொறியாளர் ஒருவரைப் போட்டிருக்கிறார்கள். அவர் பெயர் தான் சர் ஆர்தர் காட்டன் என்பது
7. சர் ஆர்தர் காட்டன் 1834 ம் ஆண்டு மேலணையைக் கட்டத் தொடங்குகிறார். இரண்டே ஆண்டில் அதனை கட்டி முடிக்கிறார். இரண்டே ஆண்டில் கொள்ளிடத்தின் குறுக்கே 640 அடி நீளத்திற்கு அணையைக் கட்டி முடித்திருக்கிறார்.
8. மேலணை பற்றி சொன்னால் சர் ஆர்தர் காட்டன், கல்லணையை மாதிரியாகக் கொண்டுதான் உருவாக்கினார்.
9. இந்த முக்கொம்பு திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் 17 வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. திருச்சி கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம், போனால் அடுத்து முக்கொம்பு தான்.
10. காவிரியின் மேட்டூர் அணையில் இருந்து இந்த மேலணை 169.3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, இந்த முக்கொம்பு அணை.
அன்பிற்குரிய உடன்பிறப்புகளே இன்னும் கூட சுவாரசியம் மிக்க பல செய்திகள் இருக்கின்றன. அவற்றை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.
எனது வலைத்தளத்தில் இதுவரை 1001 இரவுகள் மாதிரி 1001 பதிவுகளை பதிவு செய்துள்ளேன் ! உங்களுக்காக ! படியுங்கள் !
அடுத்தப் பதிவில் சந்திப்போம்,
நன்றி வணக்கம்.
இதுவரை நான் ஆறுகள் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் மட்டுமின்றி 1000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை இந்த வலைத்தளத்தில் படிக்கலாம்.
நன்றி வணக்கம் ! மீண்டும்
அடுத்தப் பதிவில்.
No comments:
Post a Comment