தென் அமெரிக்காவின்
அமேசான் ஆறு
அன்பு
உடன் பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !
தென் அமெரிக்காவில் பெரு என்னும் நாட்டில் உற்பத்தி ஆகி எட்டு நாடுகளில் 6992 கி.மீ. ஓடி அட்லாண்டிக்
சமுத்திரத்தில் சங்கமாகும், உலகின் இரண்டாவது நீளமான நதி என்னும் சர்வதேச அங்கீகாரம்
பெற்றுள்ள ஆறு.
1.பிரேசில், பொலிவியா, கொலம்பியா, ஃபிரென்ச்
கயானா, கயானா,
ஈக்வேடர், பெரு, சூரினாம்,
, வெனிசுலா ஆகிய ஒன்பது தென் அமெரிக்க நாடுகளில்
ஓடுகிறது அமேசான் ஆறு.
2.உலகிலேயே
ஒரு வினாடிக்கு இரண்டு லட்சம் லிட்டர் சுத்தமான நீரை கடலில் வடிக்கும் ஒரே நதி அமேசான்தான். பல ஆறுகளின்
மூலம் அட்லாண்டிக் சமுத்திரத்திற்குக் கிடைக்கும் மொத்த நீரில் 20 சதவிகித சுத்தமான நீரை அமேசான் நதிதான் வழங்குகிறது.
3.
அமேசான் ஆற்றின் ஆற்றுபடுகைகளில் வசிக்கும் மொத்த மக்கள்தொகை 10 மில்லியன் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
நம்ம ஊர் கங்கை நதியின் ஆற்றுப்படுகையில்
இதைவிட நான்கு மடங்கு மக்கள் வசிக்கிறார்கள்.
4.
ஒரு காலத்தில் ஆண்டஸ் மலையில் உற்பத்தி ஆன அமேசான் ஆறு, பசுஃபிக் சமுத்திரதில் சங்கமம் ஆனது.
பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு அமேசான் ஆறு ஓடும் திசை நேரெதிர்
திசைக்கு மாறி தற்போது அட்லாண்டிக் சமுத்திரத்தில் சங்கமமாகிறது.
5.
6500 கி.மீ. ஓடும் உலகின்
இரண்டாவது பெரிய நீளமான
ஆறு. மற்றும் உலகின் மிகப்பெரிய அமேசான் மழைக்காட்டின் வழியாக
பயணம் செய்யும் ஆறு என்னும் சிறப்புக்கு உரியது. இந்த மழைக்காடு
உலகின் 10 சதவிகித தாவரங்களையும் 30 சதவிகித
பிராணிகளையும் உள்ளடக்கியது.
6.
அமேசான் ஆறு 2000 வகையான மீன்களையும்
400 வகையான நீர்வாழ் உயிரினங்களையும் கொண்டது. உலகின் நான்கு நல்ல நீரில் வசிக்கும் டால்ஃபின்களில் ஒன்று
இங்கு இருக்கும் ஊதாநிற டால்ஃபின்கள்.
7.
இது 1100 துணை ஆறுகளை கொண்டது என்பது ஆச்சரியமான செய்தி. ஆனாலும் புருஸ், சருவா,
மடிரா, ஆகிய மூன்று துணை ஆறுகள் மிக முக்கியமானவை.
இவை மூன்றும் 3000 கி.மீ. க்கும் மேலாக ஓடும் ஆறுகள்.
8.
இன்னொரு ஆச்சர்யமான செய்தி, தண்ணீரில் நீந்திச் செல்லும் பிராணிகளைப்
பார்த்திருப்பீர்கள் ! நடந்து செல்லும் பிராணிகளைப் பார்த்திருகிறீர்களா ? அமேசான் ஆற்றங்கரையில் உட்கார்ந்திருந்தால்
பார்க்கலாம். அந்த பிராணியின் பெயர் ஜீசஸ் கிறிஸ்ட் லிசார்ட். லிசார்ட் என்றால் பல்லி
என்பது உங்களுக்குத் தெரியும். இது பற்றி விரிவாக தனிப் பதிவில் பார்க்கலாம்.
9.
பிளாக் கைய்மேன் எனும் ஒரு வகை முதலையும் அமேசான் ஆற்றில் இருக்கும் முக்கியமான முரட்டு
முதலை இனம். இந்த முதலைகள் தென் அமெரிக்க நாடுகளில் அதிகம் இருக்கின்றன.
10.
அமேசான் நதியின் டெல்ட்டாப் பிரதேசங்களில் நல்ல நீரில் அலையாத்தி மரங்கள் 11252 சதுர
கி.மீ. பரப்பில் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அலையாத்தி மரங்கள் நல்ல நீரிலும்
வளரும் எனத் தெரிகிறது.
11.அமேசான் ஆற்றின் சூழல் நிலை மிகவும் மோசமான பிரச்சினைகளை எதிர் நோக்கி உள்ளது.
பிரேசில் நாட்டின் தலைவர் அமேசான் மழைக்காடுகள் மற்றும் ஆறுகள் பாதுகாப்பு
சட்டங்களை தளர்த்தி விட்டது.
ஆறுகளைப்
பற்றிய எனது கட்டுரைகளைப் படிக்கும்போது ஆறுகளின் மீது அக்கறை பிறக்கிறதா ? அல்லது
இதுவும் ஒரு பொது அறிவுச் செய்தியாக முடங்கிப்போகிறதா ? எனக்கு சொல்லுங்கள். அடுத்த
பதிவில் சந்திப்போம், வணக்கம் !
No comments:
Post a Comment