Friday, September 30, 2022

SUKANYA SAMRIDDHI YOJANA - செல்வமகள் சேமிப்பு திட்டம்

 


பெண் குழந்தைகளுக்கு  உதவும் திட்டம்

SUGANYA SAMRITHI YOJANA 

செல்வமகள் சேமிப்பு திட்டம் 

அன்பு உடன்பிறப்புகளுக்கு  பூமி ஞானசூரியன் வணக்கம் ! 

மத்திய அரசும் மாநில அரசும் போட்டி போட்டபடி பெண் குழந்தைகளை போற்றி வளர்க்க பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்கள்.

இதில் முக்கியமாக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், நமது தும்பேரி சிக்கனாங்குப்பம் நீர்வடிப் பகுதி கிராமங்களில், இதனை பூமி நிறுவனமும் நமது யூனியன் பேங்க் ஆப் இந்தியாவும் இணைந்து அறிமுகம் செய்வதில் பெருமைப்படுகிறோம். 

நபார்டு வங்கியின் நீர்வடிப்பகுதி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய துணைக் கண்டத்திலேயே மிகவும் சிறப்புடையதாக விளங்குகின்றன தும்பேரி மற்றும் சிக்கனாங்குப்பம் கிராமங்கள். அந்த வகையில் பூமி நிறுவனம்  இந்தத் திட்டத்தையும் நன்கு  பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறது.

 இந்தப் பதிவில் செல்வமகள் திட்டம் பற்றிய முக்கியச் செய்திகளை உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். 

1. செல்வமகள் சேமிப்பு திட்டம் என்பது பெண் குழந்தைகளுக்கான ஒரு சேமிப்பு திட்டம். இது ஒரு மத்திய அரசின் திட்டம். இதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் சுகன்யா சம்ரிதி யோஜனா. 

2. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, இந்தத் திட்டத்தில் மாதா மாதம் ஒரு சிறு தொகையை சேமிப்பாக செலுத்தி வரலாம். 

3. செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து ஒரு சிறிய தொகையை செலுத்தி வந்தால் அந்தத் தொகையை அவர்களின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கு அது கை கொடுக்கும்.  

4. செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேமிக்கும் தொகைக்கு அரசு 7.5 % வட்டித் தொகை வழங்குகிறது.

5.  இந்தத் திட்டம்  எதிர்காலத்தில் பெண் குழந்தைகளின் சேமிப்பாக  உதவும். 

6. அவர்களின் எதிர்காலத்தில் அது  ஒரு முதலீடாகவும்  பயன்படும்.

7. இந்தத் திட்டத்தில் சேரும் பெண் குழந்தைகளின் வயது 10 க்கு குறைவாக இருக்க வேண்டும். 

8. ஒரே ஒரு பெண் குழந்தை உள்ள பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்க முடியும்.  

9. நீங்கள் மாதம் 2500 ரூபாய் செலுத்தி இந்த திட்டத்தில் சேமித்து வந்தால் சேமிப்பு முடிவடையும்போது அதாவது 15 ஆண்டுகளுக்குப் பிறகு 12 லட்ச ரூபாய் வரை பணமாகக் கிடைக்கும். 

10. உங்கள் ஊர் அஞ்சலகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் செலுத்தி இந்த திட்டத்தில் சேரலாம்.  

11.இதற்கு  S S A I என்ற விண்ணப்ப மனுவைப் பூர்த்தி செய்து தர வேண்டும்.  

12. குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் முகவரிச் சான்று, ரேஷன் அட்டை, ஓட்டுனர் லைசென்ஸ், ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றின் நகலை  விண்ணப்பத்துடன் தரலாம். 

13. இந்த செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து  மாதம் 2500 ரூபாய் செலுத்தி 15 ஆண்டுகளில்  12 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை பணமாகப் பெறலாம்.

செல்வ மகள் சேமிப்பு திட்டம் அல்லது சுகன்யா சம்ரிதி யோஜனா முதலீடு மற்றும் சேமிப்பு திட்டம் குறித்த உங்கள் சந்தேகங்களை பூமி நிறுவனத்தில், கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

தொலைபேசி எண்கள்: 9047690108, 6369484711, 8526195370. 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம், வணக்கம்.

KEY WORDS: INDIA,  GOVERNMENT OF INDIA, GIRL CHILDREN  BETTERMENT, EDUCATION, MARRIAGE,  SUGANYA  SAMRITHI  YOJANA,  SAVING SCHEME, செல்வமகள் சேமிப்பு திட்டம், 15 YEARS SAVINGS SCHEME, ELIGIBILTY, TAX BENEFITS, INTEREST RATES

RURAL INDIA MILK INDUSTRY - வீட்டுக்கு வீடு பால்மாடு

வீட்டுக்கு வீடு 
பால்மாடு

அன்பு உடன்பிறப்புகளுக்கு  வணக்கம்.🌹🙏🏻

விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் தொழில் பால் மாடு வளர்ப்பு. அது பற்றியப் பதிவுதான் இது.

நாம் ஏன் பால் தொழிலில் கவனம் செலுத்தவேண்டும் ? பால் தொழில் லாபகரமானதுதானா ? அது கிராம மக்களின் எதிர்கால வாழ்விற்கு எப்படி ஏற்றம் உடையதாக இருக்க போகிறது ? அதற்கான வாய்ப்புகள் எப்படிப் பிரகாசமாக உள்ளது ?அது பற்றிய முக்கியமான 25 செய்திகளைப் பார்க்கலாம்.

 1.உலகிலேயே அதிக எண்ணிக்கையில்  எருமைகள் மற்றும் கால்நடைகளைக் கொண்டது இந்தியா. 

2.உலகில் உள்ள எருமைகளில் 57.3% இந்தியாவில் தான் உள்ளன. இதர கால்நடைகள் 14.7 சதம்  நம்மிடம்தான் உள்ளது என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம்.

3. இந்தியாவின் பால் உற்பத்தித் தொழிலுக்கு இமாலய வரவேற்பு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 4. உத்தரப்பிரதேசம் ராஜஸ்தான், ஆந்திரா ஆகியவைதான்  இந்தியாவின் பால் கிண்ண மாநிலங்கள்.

5. உத்தரபிரதேசம் பெரிய பால்குடம், இந்தியாவின் பால் உற்பத்தியில் 18 சதம் பாலை உற்பத்தி செய்கிறது.

6. உலகில் மொத்தம் 193 நாடுகள் இருக்கின்றன. அதில் அதிகப்படியான பாலை உற்பத்தி செய்வது நம் நாடு. அதனால் இந்தியா தான் உலகத்தின் பால் கிண்ணம்.

7.உலகிலேயே அதிகமான பாலை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருந்தாலும் பால் உற்பத்தியில் அல்லது பால் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருப்பது  நியூசிலாந்து.

8.இந்தியா ஏற்றுமதி செய்யும் பாலின் மொத்த அளவு, 108711.27 மெட்ரிக் டன். 

9.பாலில் இருந்து இந்தியாவிற்கு கிடைக்கும் வருமானம் 2928.27 கோடி ரூபாய் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

10.இந்தியாவில் அதிக அளவில் பால் பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனம் "அமுல்".

11.அமுல் என்னும் பெயர் நமக்கு அறிமுகமானது 1946ஆம் ஆண்டு அதாவது சுதந்திரத்திற்கு ஒரு ஆண்டு முன்னதாக.

12. நாம் கறந்த பாலை மதிப்புக் கூட்டினால் விற்பனை செய்ய முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

13.கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர், இதனை ஸ்கிம்டு மில்க் என்று சொல்லுகிறோம்.

14. இது தவிர வெண்ணெய், நெய், சீஸ் என்னும் பாலாடைக்கட்டி, கிரீம், தயிர் ஆகியவை. 

15.இவற்றையெல்லாம் வாங்க பல வெளிநாடுகள் இந்தியாவிலிருந்து
வாங்குவதற்கு காத்திருக்கின்றன.

16.கிராமப் புற மக்கள்  தொழில் செய்ய லாபகரமாக பால்மாடு வளர்க்க முடியும்.

17.ஐ டி பட்தாரி இளைஞர்கள் கிராமங்களில் பால் மதிப்புக் கூட்டும் தொழிலை குறைவான முதலீட்டில் தொடங்கி ஏற்றுமதித் தொழிலில் விட கூடுதலான லாபம் பெற முடியும் .

18.உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகள் பால் மதிப்புக் கூட்டும் தொழிலை கிராமங்களில்  தொடங்க முடியும். 

19. ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் கம்பெனியும் ஒரு அமுல்  கம்பெனியை உருவாக்க முடியும்.

20. பால் உற்பத்தி ஏற்றுமதியில் கூட இந்தியா நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளிவிட முடியும்.

21.எனது தோழமையான தொண்டு நிறுவனங்களால், எல்லோரையும் விட இதனை வெற்றிகரமாக செய்ய முடியும்.

22. இந்தக் கனவுகள் எல்லாம் நனவாக அரசுத்துறைகளும், பல்கலைக் கழகங்களும் ஆதரவுக் கரங்களை, உதவிக் கரங்களை நீட்ட முடியும்.

23. பால் மாடுகளை வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமப்புற மக்களுக்கான இந்தப் பதிவு தொடரும். 

24. எனது இதர பதிவுகளை கட்டுரைகளை வாசிக்க எனது வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.

25. எனது வலைத்தளத்தின் இணைப்பு அல்லது லிங்கினை இத்துடன் தருகிறேன்.(www.gnanasuriabahavan.com).

மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம் வணக்கம் !

 Milk Industry, India, Tamilnadu, Tirppathur District, Thekkupattu, Bhumii trust, Gnanasuria bahavan,


 
KEY WORDS; INDIA, RURAL INDIA, INDIA'S MILK INDUSTRY, வீட்டுக்கு வீடு  பால்மாடு, TAMILNADU, THURUPPATHUR DISTRICT, SKIMMED MILK POWDER, BUTTER, GHEE, CHEESE, CREAM, CURD, JERSSEY COW, BUFFALOES, WORLD'S NUMBER ONE  MILK PRODUCUNG  COUNTRY, NEWSLAND, UTHRAPRADESH,

Monday, September 26, 2022

REALISTIC FACTS ON KOLLIDAM / COLEROON RIVER - கொள்ளிடம் ஆறு பகுதி- இரண்டு



ஆறும் ஊரும்

கொள்ளிடம் ஆறு

பகுதி- இரண்டு

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !

இன்று நாம் கொள்ளிடம் முதல் பகுதியில் கொள்ளாத செய்திகளை இந்த இரண்டாம் பகுதியில் பார்க்கப்போகிறோம். உங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று ரசித்து ருசித்துப் பார்த்து பார்த்து பல தகவல்களை துளித்துளியாக சேகரித்துத் தந்திருக்கிறேன்.

கொள்ளிடம் எங்கு பிறக்கிறது ?  எங்கு சங்கமமாகிறது ? இதில் கட்டப்பட்டுள்ள மேலணை மற்றும் கீழணை எங்கு உள்ளது ? இந்த அணைகளைக் கட்டியது எந்த அரசாங்கம் ? கொள்ளிடத்தின் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் எவை ?

இப்படி கொள்ளிடம் ஆறு பற்றிய அனைத்து தகவல்களையும் இதில் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். 

1. இந்த அணையின் சிறப்பு அம்சங்கள் இரண்டு. இதன் மூலம் விவசாய நிலங்கள் பாசனம் பெறுவது. இரண்டாவது வெள்ள காலத்தில் பயிர் சேதமும் உயிர்ச் சேதமும் ஏற்படாமல் பாதுகாப்பது. 

2. காவிரியிலிருந்து கிளையாகப் கொள்ளிடம் ஆறு திருச்சி அரியலூர் தஞ்சாவூர் மாவட்டங்களைக் கடந்து, கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை அருகில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் சங்கமமாகிறது. வேறு சில இடங்களிலும் இது சங்கமம் ஆகிறது எனத் தெரிகிறது. 

3. கொள்ளிடம் ஆறு பற்றி ஒரே வரியில் சொல்வதானால் அது காவிரியின் வெள்ள வடிகால் அதாவது மிகப்பெரிய மழைநீர் அறுவடை சாதனம்.

4. மேல் அணை கட்டியவர்,  சர் ஆர்தர் காட்டன். என்ற வெள்ளைக்காரர். இவரை  இந்திய நீர்ப்பாசனத் திட்டங்களில் தந்தை என்று இன்றும் அவரைப் போற்றுகிறார்கள்.

5. தனது வாழ்க்கை முழுவதையும் இதற்காக அர்ப்பணித்தவர் சர் ஆர்தர் காட்டன்.பிரிட்டீஷ் காரர்களின்  போர்த் தளபதியாக அறியப்பட்டவர். ஆனால் அடிப்படையில் இவர் ஒரு போற்றக்கூடிய பொறியாளர். 

6. மேலணை போலவே கொள்ளிடத்தில் அமைந்துள்ள கீழணையும் முக்கியமான அணைக்கட்டு. ஆங்கில அரசால் 1902-ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தின் பாசனத்திற்காக இது கட்டப்பட்டது.

7. கீழணையில் இருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ளது. அதைவிட இதுபற்றிய ஒரு அதிசயமான செய்தி உண்டு. சொழமன்னர்களின் தலைநகராக இருந்த கங்கைகொண்ட சோழபுரத்தில் இடிபாடுகளில் கிடைத்த கற்களைக் கொண்டு இந்த அணையைக் கட்டி இருக்கிறார்கள். 

8. கீழணையின் மதகுகள்,  கொள்ளிடம் கொண்டு வரும் நீரை மண்ணியாறு உப்பனாறு என்ற இரு ஆறுகளாகப் பிரிக்கிறது.

9. கொள்ளிடம் ஆற்றின் கரையில் இருக்கும் பிரபலமான ஊர்களிலும் முதன்மையானது எது தெரியுமா சிதம்பரம். எனக்கும் சிதம்பரத்திற்கும் உள்ள தொடர்பு, ஒரு சிதம்பர ரகசியம். வேறு ஒன்றுமில்லை, முதன்முதலாக விவசாய அதிகாரியாக வேலையில் சேர்ந்தபோது நான் தங்கியிருந்த இடம்தான் சிதம்பரம். 

10. தமிழ்நாட்டின் மிக முக்கியமான தீவு நகரம் திருச்சி மாவட்டத்தின், ஸ்ரீரங்கம். இங்குதான் காவிரி ஆறிலிருந்து கொள்ளிடம் ஆறு பிரிகிறது.

11. விஜயநகரப் பேரரசின் போது, 1336 முதல் 1565 ம் ஆண்டு வரையான காலகட்டத்தில், ஆயிரம் தூண்களுடன் கட்டப்பட்ட ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் கொள்ளிடத்தின் பிறப்பிடமான ஸ்ரீரங்கம் தீவில்தான் ள்ளது.

12. ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி யையும் தரிசிக்கலாம் கொள்ளிடத்தின் தாய் ஆறான காவிரி யையும் தரிசிக்கலாம். 

13. குடும்ப சமேதராக சுற்றுலா செல்ல ஏற்ற இடம் ஸ்ரீரங்கம். அங்கு  போனால் ஸ்ரீரங்கநாதரை தரிசிக்கலாம். கோயில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். இங்கு ஆலயப் பிரவேசம் இலவசம் ஆனால் விஸ்வரூப சேவா என்றால் தலைக்கு நூறு ரூபாய் உடனடி சேவா என்றால்  250 ரூபாய் கட்டணம்.

ஸ்ரீரங்கமும், முக்கொம்பும் போய் வந்து எனக்கு சொல்லுங்கள். 

இதுவரை நான் ஆறுகள் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளை வாசிக்காதவர்கள்  www.gnanasuriabahavan.com  என்ற வலைத்தளத்திற்கு சுற்றுலா போய் வாருங்கள். 

நன்றி வணக்கம் ! மீண்டும் அடுத்தப் பதிவில்.

FASCINATING FACTS ON RIVER KOLLIDAM - PART I - கொள்ளிடம் ஆறு - பகுதி 1



ஆறும் ஊரும்

"கொள்ளிடம் ஆறு"  

பகுதி 1

அன்பு உடன்பிறப்புகளுக்கு வணக்கம் !

 நமது ஆறும் ஊரும்  தொடரில் நீங்கள் காட்டும் ஆர்வம் எனக்கு உற்சாகம் தருகிறது. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நாம் இன்று வசிக்கும் ஊர்களையும் புசிக்கும் உணவையும் உருவாக்கியவை ஆறுகள்தான். 

அதனால் தான் அந்த ஆறுகளை பாதுகாப்பதும் பராமரிப்பதும் மேம்படுத்துவதும் நமது கடமை என்று சொல்லுகிறோம்.

 அதனால்தான் ஆறுகள் பற்றிய விழிப்புணர்வு நமக்கு அவசியம் தேவை என்று சொல்கிறோம்.

 அதனால்தான் இந்தக் கட்டுரைத் தொடர். 

இந்த தொடரில் அமேசான் நதி, நைல் நதி உட்பட நமது தமிழக ஆறுகள்பற்றி  இதுவரை 32 ஆறுகள் பற்றிய சுவையான தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளேன். இன்று நாம் 33வது ஆறாக கொள்ளிடம் ஆறு பற்றி பார்க்கலாம். 

ஒரு ஊர் கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஒரு சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது, அது எந்த ஊர் ?  630 அடி நீளமான மேல் அணையை இரண்டே ஆண்டில் கட்டி முடித்த வெள்ளைக்காரப் பொறியாளர் யார் ? அவர் பெயர் என்ன ? ஏன் இந்தியாவின் நீர்ப்பாசனத் திட்டத்தின் தந்தை என்று அவரை குறிப்பிடுகிறார்கள் ? இப்படி கொள்ளிடம் பற்றிய பல சுவையான தகவல்களை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம். 

1.கொள்ளிடம் என்பது தனி ஆறு அல்ல. காவிரி ஆற்றின் கிளை ஆறு. பெருமழை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தை கொள்ளும் ஆறு என்பதால் அதனை கொள்ளிடம் என்று அழைத்தார்கள். அதுதான் கொள்ளிடம் என்ற பெயரின் ரகசியம். 

3.திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள முக்கொம்பு,திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

தமிழகத்தின் மிக அழகான ஒரு சுற்றுலாத் தலம் இது. இங்குதான் மேல்அணை அமைந்திருக்கிறது. அங்குதான் காவிரியில் இருந்து பிரிந்து கொள்ளிடம் ஆகிறது.  முக்கோம்பு என்பதும் இதுதான். மேலணை என்பதும் இதுதான். 

4.கொள்ளிடம் ஆற்றில்  வீணாகப் போகும் தண்ணீரை விரயப் படுத்தாமல் விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக வெள்ளைக்காரர்கள் புத்திசாலித்தனமாக கட்டிய அணைதான் இந்த முக்கொம்பு மேலணை.

5. மேலணை சிறிய அணை அல்ல, 630 அடி நீளமும் 40 அடி அகலமும் 45 மதகுகளும் கொண்ட அணை. 

6.வெள்ளைக்காரர்கள் சில நல்ல காரியங்களையும் செய்து தான் இருக்கிறார்கள். 1929 ஆம் ஆண்டிலேயே காவிரி ஆற்றுப் பாசனப் பகுதியை கவனிக்க என்று பொறியாளர் ஒருவரைப் போட்டிருக்கிறார்கள். அவர் பெயர் தான் சர் ஆர்தர் காட்டன் என்பது 

7. சர் ஆர்தர் காட்டன் 1834 ம் ஆண்டு மேலணையைக் கட்டத் தொடங்குகிறார். இரண்டே ஆண்டில் அதனை கட்டி முடிக்கிறார். இரண்டே ஆண்டில் கொள்ளிடத்தின் குறுக்கே 640 அடி நீளத்திற்கு அணையைக் கட்டி முடித்திருக்கிறார்.

8. மேலணை பற்றி சொன்னால் சர் ஆர்தர் காட்டன், கல்லணையை மாதிரியாகக் கொண்டுதான் உருவாக்கினார்.

9. இந்த முக்கொம்பு திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் 17 வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. திருச்சி கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம், போனால் அடுத்து முக்கொம்பு தான். 

10. காவிரியின் மேட்டூர் அணையில் இருந்து இந்த மேலணை 169.3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, இந்த முக்கொம்பு அணை.

அன்பிற்குரிய உடன்பிறப்புகளே இன்னும் கூட  சுவாரசியம் மிக்க பல  செய்திகள் இருக்கின்றன. அவற்றை அடுத்தப் பதிவில் பார்க்கலாம். 

எனது வலைத்தளத்தில் இதுவரை 1001 இரவுகள் மாதிரி 1001 பதிவுகளை பதிவு செய்துள்ளேன் !  உங்களுக்காக ! படியுங்கள் ! 

அடுத்தப் பதிவில் சந்திப்போம்,

 நன்றி வணக்கம்.

இதுவரை நான் ஆறுகள் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் மட்டுமின்றி 1000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை இந்த வலைத்தளத்தில் படிக்கலாம்.

நன்றி வணக்கம் ! மீண்டும் அடுத்தப் பதிவில்.

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...