Saturday, August 27, 2022

VAIPPAR RIVER - வைப்பார் ஆறு

 

       வைப்பார் ஆறு

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !

நேற்று தேம்ஸ் ஆறுபற்றிய பல அரிய தகவல்களைப் பார்த்தோம். இன்று நாம் வைப்பார் ஆறு பற்றிப் பார்க்கலாம்.

அதற்கு முன்னால்  நேற்றைய  கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம். இனி வைப்பாறு பற்றிப்பார்க்கலாம்.

வாங்க ராமாயண காலத்துக்குப் போகலாம். ஒருசமயம் ராமபிரான் ஒரு வேடனை கொன்றுவிடுகிறார். அதற்கு பிராயசித்தம் தேட தவம் செய்யப்போகிறார். தவம் செய்ய தண்ணீர் கிடைக்கவில்லை. அகத்திய முனிவருக்கு சொந்தமான தண்ணீர் குடம் ஒன்றினை உடைக்கிறார். அதிலிருந்து தண்ணீர் பொங்கி வருகிறது. அந்தத் தண்ணீர்தான் வைப்பார் என்னும் ஆறானது. இது வைப்பார் ஆறுக்குப் பின்னால் இருக்கும் கர்ண பரம்பரைக் கதை.

இந்த ஆற்றுத் தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டால் போதும். நீங்கள் காசி ராமேஸ்வரம் போக வேண்டாம். கூப்பிடு தூரத்தில் இருக்கும் விருது நகர் மாவட்டம் போனால் போதும். வைப்பார் ஆறு அர்ஜுனா ஆறு ஆகிய இரண்டும் கங்கைக்கு ஒப்பானவை என்கிறார்கள்.

இந்த ஆறு தேனி மாவட்டத்தின், வருஷமலை அடுக்குகளில்  உருவாகி, விருதுநகர் மாவட்டத்தில் நுழைந்து, தூத்துக்குடி மாவட்டம் கடந்து   சிப்பிக்குளம் அருகில், மன்னார் வளைகுடா வரை, 5288 சதுர கிலோமீட்டர் நீர்வடிப்பகுதியில் மழை நீரை சேகரித்தபடி 130 தூரம் பயணம் செய்து வங்கக்கடலில் சங்கம்மாகிறது.

வைப்பர் ஆற்றில் கட்டியிருக்கும் வெம்பக்கோட்டை அணைக்கும், இருக்கங்குடி அணைக்கும் தண்ணீர் தந்து உதவுகிறது. வைப்பார் ஆறு விவசாயத்துக்கு பயன்பட்டாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு தயாரிக்க உதவும் ஆறு இது.

அதுசரி, தமிழகத்தில் ஓடும் ஒரு ஆற்றுக்கு ராஜநடை என்பது மாதிரிசர்ப்பநடைஎன்று பெயர். அது எந்த ஆறு ? எங்கு ஓடுகிறது இந்த ஆறு ? முயற்சி செய்யுங்கள் பார்ப்போம். இதற்கான பதிலை நாளை சொல்லுகிறேன்.

14 ஆக 22   

  

 

 

 

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...