லண்டன்
தேம்ஸ் ஆறு
அன்பு
உடன் பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !
இரண்டு
நாட்களுக்கு முன்னால் எனது நண்பர் கோபால் சோலைமலை எனக்கு லண்டன்
தேம்ஸ் நதிக் கரையிலிருந்து போன் செய்திருந்தார்.
“என்னது ? லண்டன்லயா ? தேம்ஸ் நதியிலயா
?” என்று நான் ஆச்சரியப்பட்டேன். அவர் கேள்விக்கு
சுருக்கமாக அதுபற்றி சொன்னேன்.
“இண்ணையத் தேதியில உலகத்துல ரொம்ப சுத்தமான ஆறு தேம்ஸ் ஆறுதான்..ஆனா 1957 ம் வருஷம் தேம்ஸ் நதி கூவம் மாதிரி இருந்தது. அப்போதான்.. அதை பயலாஜிக்கலி டெட்’ டுன்னு அறிவிச்சாங்க.. அதாவது “உயிரியல் ரீதியாக மரணமடைஞ்ச ஆறு”ன்னு சொன்னாங்க. அப்போ தேம்ஸ் நதியில ஒரு மீன் கூட உயிரோட இல்லையாம். அதுதான் பயலாஜிகலி டெட்”டுக்கு அடையாளம்.
“இன்று, தேம்ஸ்
நதியில் சாலமன் மீன் உட்பட 120 வகையான மீன்கள் துள்ளிக்கிட்டு
கிடக்கு. அம்பது அறுபது வருசத்துல லண்டன்வாசிகள் சாதிச்சுட்டாங்க.. தேம்ஸ் நதியை
சுத்தமா மாத்திட்டாங்க.”
தேம்ஸ்
நதியில் படகில் மிதந்தபடி நான் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார் எனது நண்பர் சோலைமலை
கோபால்..
எனது மிக
நெருங்கிய நண்பர் கோபால். வானொலியில் என்னோடு வேலை பார்த்தவர். நான் சினிமாவில்
வாய் பிளந்து பார்த்த ஏகப்பட்ட சினிமாப்படங்களின் (பாகப்பிரிவினை, பாசமலர், படித்தால் மட்டும் போதுமா ?,) கதைகளை எழுதிய சோலைமலை அவர்களின் இரண்டாவது மகன் கோபால். “பா’ வரிசை படங்களின் கதைகளை எழுதியவர்.
வானொலியில்
நான் பணி செய்த காலத்தில் நான் எழுதும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதற்குக் காரணமாக இருந்தது,
கோபால் அவர்களின் அசாத்தியமான நிகழ்ச்சி தயாரிக்கும் திறமை. நானும் அவரும் சேர்ந்து ஏகப்பட்ட வானொலி நிழ்ச்சிகளை தயாரித்து ஒலிபரப்பினோம்.
உண்மையில் நான் அவரின் விசிறி !
இன்றைய
கேள்வி: தேம்ஸ்
நதியை சுத்தப்படுத்த இங்கிலாந்து அரசு செய்த முக்கியமான இரண்டு காரியங்கள் என்னென்ன
?
மீண்டும்
நாளை சந்திப்போம், வணக்கம்.
12 ஆக 22
No comments:
Post a Comment