"தேம்ஸ் ஆறு"
அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம். !
நேற்று கோடப்ப மந்து ஆறு பற்றி பார்த்தோம். இன்று லண்டன் தேம்ஸ் ஆறு பற்றி பார்க்கலாம்.
நேற்று, நான் கேட்ட கேள்விக்கான பதிலை இப்போது பார்க்கலாம். லண்டன் தேம்ஸ் நதியை சுத்தப்படுத்த இங்கிலாந்து அரசு என்ன செய்தது என்று நான் நேற்று கேட்டிருந்தேன்.
1989 ஆம் ஆண்டு வாக்கில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் மார்கரெட் தாட்சர். அவர் தேம்ஸ் நதியை சுத்தப்படுத்துவது சுத்தப்படுத்திய தண்ணீரை குடிநீராக விநியோகம் செய்வது ஆகிய இரண்டையும் தனியார்மயம் ஆக்கினார். தேம்ஸ் நதி சுத்தமானதற்கு அது தான் முக்கிய காரணம் என்று சொல்லுகிறார்கள்.
இப்போது தேம்ஸ் நதி பற்றி பார்க்கலாம். கெம்பிள் என்ற இடத்தில் உருவாகி ஏசக்ஸ் என்னும் நகரம் வரை 360 8.55 கிலோ மீட்டர் ஓடும் ஆறு தேம்ஸ் நதி சவுதண்ட்சன் கடலில் சங்கமமாகிறது.
தேம்ஸ் ஆற்றின் நாற்றம் தாங்காமல் மக்கள் லண்டன் நகரை விட்டு ஓடியதை "கிரேட் ஸ்டிங்க்" என்று சொல்லுகிறார்கள். அது நிகழ்ந்தது 1858ஆம் ஆண்டு.
சர் ஜோசப் பாசல்கெட்டி என்பவர் ஒரு சிவில் இன்ஜினியர்.இவர்தான் லண்டன் நகரின் சாக்கடை கால்வாய்களை சரி செய்தவர். சாக்கடைக் கால்வாய்களுடன் வீடுகளின் கழிவறை கழிவுகளை சேருமாறு வடிவமைத்தவர் இவர்தான். அந்த சீரமைக்கப்பட்ட வடிகால் வசதி தான் தேம்ஸ் நதியை சுத்தம் ஆக்கியது.
இன்று தேம்ஸ் நதியில் எவ்வளவு கழிவுநீரை வேண்டுமானாலும் கலந்து விடலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அந்த கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். 1961 முதல் 1995 வரை அதற்கான சட்டங்களை அடுக்கடுக்காக கொண்டு வந்தது ஆங்கில அரசு.
ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் மற்றும் பப்ளர்கள்(Oxy generator & Bubblers) என்ற அமைப்புகளை தேம்ஸ் ஆற்றில் உருவாக்கி நீரில் ஆக்சிஜன் அளவை அதிகரித்தார்கள்.
தேம்ஸ் நதியை சுத்தமானதாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர் ராபர்ட் ஓட்ஸ் என்பவர். இவர் தேம்ஸ் ரெஸ்டொரேஷன் பிராஜக்ட் டின் இயக்குனராக இருந்தவர்.
தேம்ஸ் வாட்டர் யுட்டிலிட்டிஸ் லிமிடெட் என்ற
தனியார் கம்பெனி தான் இங்கிலாந்து நாட்டின் 15 மில்லியன் மக்களுக்கு தண்ணீர்
விநியோகம் செய்கிறது. இந்த கம்பெனியின் வேலை 4.7 பில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்தம்
செய்வது அதில் 2.6 பில்லியன் லிட்டர் தண்ணீரை வினியோகம் செய்வது.
இன்றைய கேள்வி: இந்தியாவில் ஓடும் ஆறுகளில் சர்வதேச அளவில் சுத்தமான ஆறு என்று சொல்லக்கூடிய ஆறு ஏதாவது உள்ளதா? அப்படி இருந்தால் அதன் பெயர் என்ன ?
மீண்டும் நாளை சந்திப்போம், வணக்கம். 25 ஆக 22
No comments:
Post a Comment