சென்னையின் அடையாளம்
அடையார் ஆறு
அன்பு உடன்பிறப்புகளுக்கு வணக்கம் !
உலக நாகரிகங்களுக்கு வளங்களை வாரித் தந்த வள்ளல் ஆறுகள் !
அந்த ஆறுகள் பற்றி பேச கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். என்று அடையாறு
ஆறு பற்றி பார்க்கலாம்.
சென்னை கழிவுகளை மட்டும் சேகரித்துக்
கொண்டு கடலுக்கு செல்லும் மூன்று ஆறுகளில் ஒன்று அடையாறு என்று நாம் நினைத்துக்
கொண்டிருக்கிறோம்.
ஆண்டுதோறும் வங்கக் கடலில் அடையார்
ஆறு கொண்டு சேர்ப்பது 190 முதல் 940 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாலைப்பட்டு ஏரியில் உற்பத்தியாகி சென்னையைச் சுற்றி வந்து அடையாறு பகுதியில் வங்கக் கடலில் சங்கமம் ஆகும் ஆறு அடையார்.
860 சதுர கிலோமீட்டர் பரப்பில் பெய்யும் மழை நீரை சேகரித்தபடி, 42.5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யும் ஆறு இது.
திருவள்ளூர் காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு தண்ணீர் தருவது அடையார் ஆறு.
மீண்டும் நாளை பார்க்கலாம்.
பூமி ஞானசூரியன்
06ஆக22
No comments:
Post a Comment