Wednesday, August 31, 2022

RESTORATION OF ARICHANDRA RIVER

 

பொதுமக்கள் சீரமைத்த 
அரிச்சந்திரா ஆறு

"அரிச்சந்திரா ஆறு" அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமிஞானசூரியன் வணக்கம் ! 🌹🙏🏻

நேற்று அனுமன் ஆறு பற்றி தெரிந்து கொண்டோம். இன்று அரிச்சந்திரா ஆறு பற்றி பார்க்கலாம்.
 
நேற்றைய கேள்விக்கான பதிலை முதலில் பார்க்கலாம். குடிமராமத்து என்றால் என்ன ? 

ஆறுகளின் கரைகளை பலப்படுத்தி ஆழப்படுத்துதல் அகலப்படுத்துதல் போன்ற கிராமங்களின் பொது வேலைகளைச் செய்வதில் நமது உடல் உழைப்பை இலவசமாக அளிப்பதற்கு குடிமராமத்து என்று பெயர். 

இப்போது அரிச்சந்திரா ஆறு பற்றி பார்க்கலாம். வெண்ணார் ஆற்றின் துணை ஆறுதான்  இந்த அரிச்சந்திர ஆறு. 

திருச்சிராப்பள்ளி, நீடாமங்கலம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளில் ஓடும் ஆறு இது.

நாகை மாவட்டத்தின் வேதாரண்யம் பகுதியில் தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடியில் தொடங்கி தலைஞாயிறு பகுதியில் நாலுவேதபதி கிராமத்தின் 55 பாலம் வழியாக கடலில் கலக்கிறது.

 அரிச்சந்திரா நதியில் அணைக்கட்டு ஒன்று உள்ளது. ஆலங்குடி தலைஞாயிறு தொழுதூர் பழைய ஆற்றங்கரை உள்ளிட்ட 20 கிராமங்களில் இந்த அணைக்கட்டு தண்ணீரைக் கொண்டு விவசாயம் செய்கிறார்கள்.

அரிச்சந்திரா நதியின் மூலமாக உள்ளே வரும் கடல் நீரின் உதவியால் பல நூறு ஏக்கரில் இறால் பண்ணைகளை அமைத்து உள்ளார்கள். இந்த இறால் பண்ணைகளில் உள்ள குளம் கிணறுகள், குட்டைகள் அனைத்தும் கால்நடைகள் கூட குடிக்க முடியாத அளவிற்கு உப்பாக மாறி விட்டது என்கிறார்கள். 

ஐம்பது ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த இந்த அரிச்சந்திரா நதியின் முகத்துவாரத்தை சீரமைக்க, பொதுமக்கள் 10 லட்ச ரூபாய் வரை திரட்டி இசை சீரமைத்துள்ளனர். இதைக்கூட குடிமராமத்து என்று சொல்லலாம். 

இது போன்ற ஆறுகளின் முகத்துவாரங்களை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை சீரமைக்க வேண்டும் ? 

இதற்கான நிதி ஒதுக்கீட்டை மாவட்ட வளர்ச்சி திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள், சமூக ஆர்வலர்கள். 

இது போல ஒரு முறை பழவேற்காடு மீனவர்கள், ஒன்று சேர்ந்து தங்கள் சொந்த செலவில் முகத்துவாரத்தை ஆழப்படுத்துவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

இன்றைய கேள்வி: அரிச்சந்திரா நதியின் மூலம் எந்தப் பகுதியில் இறால் பண்ணைகள் அமைந்துள்ளன என்று சொல்ல முடியுமா?

மீண்டும் நாளை சந்திக்கலாம். 
03 செப்டம்பர் 22 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...