பாம்பார் ஆறு
அன்பு உடன் பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !
நேற்று நாம் பவானி ஆறு பற்றி பார்த்தோம். இன்று பாம்பாறுகள் பற்றி பார்க்கலாம்.
அதற்கு முன்னால் நேற்றைய கேள்விக்கான பதிலை பார்க்கலாம். ஆறுகளை மோசமாக பாதிக்கும் மூன்று கழிவுகள் என்னென்ன ?
இதுதான் அந்த கேள்வி. இந்திய ஆறுகளை மட்டுமல்ல இந்த உலகில் உள்ள அனைத்து ஆறுகளையும் பாதிக்கும் முக்கியமான கழிவுகளில், ஒன்று தொழிற்சாலை கழிவுகள், இரண்டு நகராட்சிக் கழிவுகள், மூன்று விவசாயம் தொடர்பான கழிவுகள்.
இனி பாம்பாறுகள் பற்றிப் பார்க்கலாம். பாம்பாறு என்ற பெயரில் இரண்டு ஆறுகள் உள்ளன. ஒன்று வடதமிழ்நாட்டு பாம்பாறு, இரண்டாவது தென் தமிழ்நாட்டுப் பாம்பாறு. வடதமிழ்நாட்டு பாம்பாறு.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பூங்குளம் கிராமத்தில் உற்பத்தியாகி பேராம்பட்டு ஊத்தங்கரை வரை ஓடி, தென்பெண்ணை ஆற்றுடன் சங்கமமாகிறது.
இது திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் துணையாறு. இரண்டாவது பாம்பார் ஆறு. தென் தமிழ்நாட்டு ஆறு. சிவகங்கை புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓடும் ஆறு.
இந்தத் தென் பாம்பாறு புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி, புட்டுக்கிடப்பட்டினம் என்ற இடத்தில் வங்கக் கடலில் சங்கமமாகிறது. தென்னார், விடுதலையார் ஆகிய இரண்டு ஆறுகளும் இந்த தெற்கு பாம்பாற்றின் துணை ஆறுகள்.
இனி அடுத்து ஆறுகள் பற்றிய பொது அறிவு வினா: சமீபத்தில் கனத்த காசுபணம் செலவுடன் மூன்று நகர்ப்புற ஆறுகளையும் சுத்தப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது தமிழக அரசு. அது எந்தெந்த ஆறுகள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
மறுபடியும் நாளை சந்திப்போம்.
No comments:
Post a Comment