ஊட்டி கோடப்பமந்து ஆறு
அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம்.
நேற்று குன்னூரில் ஓடும் ஹன் கூன்துறை ஆறு பற்றி பார்த்தோம். இன்று ஊட்டி எனும் உதகமண்டலத்தில் ஓடும் கோடப்பமந்து ஆறு பற்றி பார்க்கலாம்.
அதற்கு முன்னால் நேற்றைய கேள்விக்கான
பதிலை பார்க்கலாம்.சர்வதேச ஆறுகள் தினத்தை எப்போது கொண்டாடுகிறார்கள் ?
நேற்றுதான் சர்வதேச ஆறுகள் தினத்தை நாம் கொண்டாடினோம்.அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி சர்வதேச ஆறுகள் தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம்.
இனி ஊட்டி என்னும் உதகமண்டலத்தில் ஓடும் கோடப்பமந்து ஆறு பற்றிப் பார்க்கலாம். பொதுவாக நகரங்களில் ஓடும் ஆறுகள் எல்லாம் சபிக்கப்பட்ட ஆறுகள் என்றே சொல்ல வேண்டும். இந்த ஆறுகளில் எல்லாம் தண்ணீர் ஓடுவதை விட சாக்கடை ஓடுவது தான் அதிகம் இருக்கும்.
ஆறுகள் பற்றி அரசு மட்டும் கவலைப்பட்டால் போதாது அங்கு வசிக்கும் மக்களும் வியாபாரிகளும் கவலைப்பட வேண்டும் என்கிறார்கள் ஊட்டி குன்னூர் பகுதியில் சமூக ஆர்வலர்கள்.
இந்து சுற்றுவட்டாரங்கள் எல்லாம் காடுகள் சூழ்ந்த மலைப்பகுதிகள். இந்த காடுகளில் வசிக்கும் யானைகள், காட்டு மாடுகள், மற்றும் இதர வன விலங்குகள் அனைத்தும் நல்ல தண்ணீர் தேடி நகரங்களுக்கு வர ஆரம்பித்து விட்டன என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.
உதகமண்டலத்தின் பழைய பெயர் ஒத்தக்கல்மந்து என்பது. ஒத்தக்கல்மந்து என்ற பெயர் 1972 ம் ஆண்டுதான் உதகமண்டலம் ஆனது. ஆமாம், "ஒத்தக்கல் மந்து" என்பது என்ன மொழி? இதற்கான பதிலை நாளை பார்க்கலாம்.
மீண்டும் நாளை சந்திப்போம் !
வணக்கம் !
23 ஆக 22
No comments:
Post a Comment