Tuesday, August 30, 2022

KUNDAR CAUVERY INTERLINKING - குண்டார்ஆறு காவிரி ஆறு இணைப்பு

 

குண்டார்ஆறு காவிரி ஆறு 

இணைப்பு 

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !

நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் கடனாநதி பற்றி பார்த்தோம். இன்று குண்டார் ஆறு பற்றி பார்க்கலாம். அதற்கு முன்னர் நேற்றைய கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம். கடனாநதி திருநெல்வேலியில் ஓடுகிறது என்று பார்த்தோம். கடனா டேம் என்ற பெயரில் அணைக்கட்டு ஒன்று குஜராத் மாநிலத்தில் இருக்கிறது என்பதையும் பார்த்தோம். இந்த அணைக்கட்டு எந்த ஆற்றின் மீது  கட்டப்பட்டுள்ளது ? என்பதுதான் எனது கேள்வி. குஜராத் மாநிலத்தில் மாஹி என்ற நதியின் மீது இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

இப்போது குண்டாறு பற்றி பார்க்கலாம். குண்டார்ஆறு  சதுரகிரி மலையில் உற்பத்தியாகி திருமங்கலம் கமுதி வழியாக பயணம் செய்து வங்காள விரிகுடாக் கடலில் சங்கமமாகிறது. பொதுவாக குண்டார் என்றால் அது விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு உரிய ஆறு என்று சொல்லலாம்.

2021 ஆம் ஆண்டு காவிரி, தெற்கு வெள்ளாறு, வைகை, மற்றும் குண்டார் ஆற்றினை இணைக்கும் ஒரு அற்புதமான திட்டம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக காவேரியில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிலோமீட்டர் நீளத்திற்கு இணைப்புக் கால்வாய் வெட்டத் திட்டமிட்டார்கள். இதற்காக ஆகும் திட்ட நிதியை நபார்டு வங்கி இருந்து பெறவும் திட்டமிடப்பட்டது. 

இப்படி இந்த ஆறுகளை இணைக்கும் கோரிக்கை வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலத்திலிருந்து இருந்ததாகச் சொல்கிறார்கள்.

வாட்டர் ரிசோர்சஸ் டிபார்ட்மெண்ட் அதிகாரிகளின் கருத்துப்படி இந்த காவிரி வைகை குண்டாறு இணைப்புக்கான  ஏற்பாடுகள் துரிதமாக நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள். இந்த திட்டப்படி 255.60 கிலோமீட்டர் கால்வாய் ஒன்றினை அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்த கால்வாய் கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் வழியாக அமைய உள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் விவசாயத் தேவை, குடிநீர்த் தேவை மற்றும் தொழிற்சாலைகளில் நீர்த் தேவையும் பூர்த்தி செய்ய இயலும் என்றும் தெரிகிறது. 

இன்றைய கேள்வி: இந்த காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் முழுமையாக நிறைவடைந்தால் எவ்வளவு பரப்பு சாகுபடிக்கு உதவும்

மீண்டும் நாளை சந்திக்கலாம்,வணக்கம்.

31ஆக 22

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...