Monday, August 29, 2022

COOUM RIVER OF CHENNAI


"சென்னை கூவம் ஆறு"

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் ! 

நேற்று நாம் கோடப்பமந்து ஆறு பற்றி பார்த்தோம். இன்று நாம் சென்னை நகரின் கூவம் ஆறு பற்றிப் பார்க்கலாம். அதற்கு முன் நேற்றைய கேள்விக்கான பதிலை பார்க்கலாம்.

உதகமண்டலத்தின் பழைய பெயர் "ஒத்தக்கல் மந்து" என்பது என்ன மொழி என்று கேட்டிருந்தேன். "ஒத்தக்கல்மந்து"  என்பது தோடா மொழி ! தோடா மொழி ! தோடா மொழி !

இப்போது கூவம் ஆறு பற்றி பார்க்கலாம். 

கூவம் ஆறு ஓடும் மொத்த தூரம் 72 கிலோ மீட்டர். இதில் சென்னையில் சாக்கடையாக ஓடும் தூரம் 32 கிலோமீட்டர். நல்ல தண்ணீராக ஓடும் தூரம் 40 கிலோமீட்டர்.

கேசவரம் என்னுமிடத்தில் ஆறாகத் தோன்றும் கூவம் ஆறு, பட்டாபிராம் முதல் திருவேற்காடு வரை சுத்தமான ஆறாகத்தான் ஓடுகிறது. சென்னை பெருநகரில் கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆகிய பகுதிகளில் தான் கூவம் ஆறு சாக்கடையாக மாறும் அவலம் நடக்கிறது.

 கூவம் ஆற்றை சுத்தம் செய்ய பலமுறை முயற்சிகள் செய்யப்பட்டன. அதில் 2018 ஆம் ஆண்டு மட்டும்  21665 டன் கழிவுகளை அப்புறப்படுத்தியதாக செய்தி ஒன்றைப் படித்தேன்.

தொழிலகங்களின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் ஆற்றில் விட அனுமதிக்கக் கூடாது. திடக்கழிவுகளை அங்கக உரமாக மாற்றி விற்பனை செய்யலாம். பெரு நகரங்களில் ஓடும் ஆற்று நீரில் ஆக்ஸிஜனின் அளவைக் கூட்டும் அமைப்புகளையும் தேவையான எண்ணிக்கையில் அமைக்கவேண்டும். பெருநகர ஆறுகளை சுத்தப்படுத்தும் பணி என்பது அன்றாடம் நடக்கும் பணியாக மாற்ற வேண்டும்.

 குடிசைப் பகுதிகளுக்கு தேவைப்படும் போதுமான கழிவறை வசதிகளை செய்து தர வேண்டும். 

லண்டன் தேம்ஸ் நதி தான் உலகில் சுத்தமான நதி என்னும் கிரீடத்தை தற்போது அணிந்து உள்ளது. ஏன் தேம்ஸ் நதிகூட பல ஆண்டுகளுக்கு முன்னால் வரை "லண்டன் கூவம்"  என்ற நிலையில் தான் இருந்தது. 

தேம்ஸ் நதியை சுத்தப்படுத்த என்ன செய்தார்கள் என்பதை நாம் அப்படியே நகல் எடுக்கலாம் !   காப்பி அடிக்கலாம் 

இன்றைய கேள்வி லண்டன் தேம்ஸ் நதியை சுத்தப்படுத்த இங்கிலாந்து அரசு எடுத்த முக்கியமான நடவடிக்கை என்ன

மீண்டும் நாளை சந்திக்கலாம், வணக்கம் ! 

24 ஆகஸ்ட் 22

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...