Monday, August 29, 2022

COONOOR HAN KUN DORAI RIVER - "குன்னூர் ஹன் கூன் தொரை ஆறு"


"குன்னூர் ஹன் கூன் தொரை ஆறு"


அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் ! 

நேற்று "சிற்றார் ஆறு" பற்றிப் பார்த்தோம். இன்று "ஹன் கூன் தொரை ஆறு" பற்றி பார்க்கலாம்.

குன்னூரில் ஓடும் "ஹன்கூன் ஆறு" பற்றி  பார்க்கலாம். அதற்கு முன்னால் நேற்றைய கேள்வி " சிற்றார் ஆற்றில்  அமைந்துள்ள தூரலும் சாரலும் நிறைந்த நீர்வீழ்ச்சி எதுஇதற்கு சரியான பதில்...குற்றாலம்..குற்றாலம்..குற்றாலம் !

 இப்போது "ஹன்கூன் தொரை ஆறு" எனும் குன்னூர் ஆறு பற்றி பார்க்கலாம். "ஹன்கூன் தொரை" அந்த காலத்து குன்னூர் வெள்ளைக்கார "தொரை" யாக இருக்கும்.

நகரத்தில் ஓடும் ஆறுகள் எல்லாம் சிறு சாக்கடை ஓடைகளின் தொகுப்பாகத்தான் இருக்கும். அப்படித்தான் இந்த "தொரை" ஆறும்.

1847 ஆம் ஆண்டு வாக்கில் நூறடி  அகலமான ஆறு ஆறடி  ஆறாக ஆகிவிட்டது சில இடங்களில்.

ஒரு தன்னார்வ அமைப்பும், அரசும், வியாபாரிகளும் சேர்ந்து இந்த குன்னூர்  "தொரை" ஆற்றை குறை இல்லாமல்  சுத்தம் செய்திருக்கிறார்கள். 

"ஈஸ்பர்வா ஹோம்ஸ்" என்ற ஒரு பம்பாய் கம்பெனியும், "கிளீன் குன்னூர்" என்ற தன்னார்வ அமைப்பும் இணைந்து இந்த வேலையைச் செய்தன. சர்வ தேச ஆறுகள் தினத்தன்று, இந்த வேலையைச் செய்யத் தொடங்கினர்.  

வரதா மேனன் என்பவர்  குன்னூர் ஆறு பற்றி இங்கிலீஷில் வருத்தப்பட்டு எழுதிய ஒரு கவிதை, படியுங்கள்.

I am so soiled, so neglected;

Save me please

Let me once again be

A flowing - free sister

Of Ganga, Yamuna, Saraswathy, Brahmmaputra, Narmada

Godavari and Kavery.

Let me not still.

இன்றைய கேள்வி, "சர்வதேச ஆறுகள் தினம்" எந்த தேதியில் கொண்டாடப் படுகிறது ?

மீண்டும் நாளை சந்திப்போம்.

22ஆக 22

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...