Monday, August 29, 2022

CHITRARU - "சிற்றாறு"

 


"சிற்றாறு" 

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமிஞானசூரியன் வணக்கம் !

நேற்று வட தமிழ்நாட்டிலும் தென் தமிழ்நாட்டிலும் ஓடும் பாம்பாறுகள் பற்றி பார்த்தோம். .

இன்று நான் உங்களுக்கு "சிற்றாறு" என்று பெயர் இருந்தாலும் 17 அணைக்கட்டுகளைக் கொண்ட தென்காசியில் உற்பத்தியாகும் தாமிரபரணியின் துணையாறு பற்றி சொல்லுகிறேன். 

அதற்கும் முன்னால் நேற்றைய கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம். தமிழ்நாடு அரசு சுத்தம் செய்வதற்காக திட்டமிட்டு அறிவிக்கப்பட்டிருக்கும் ஆறுகள் என்னென்ன ? 

சென்னை பெருநகரில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு ஆறு, மற்றும் பக்கிங்காம் கால்வாய் இந்த மூன்றுதான் இன்றைய நிலையில் அதிர்ஷ்டம் செய்த ஆறுகள். இப்படி அதிர்ஷ்டம் செய்த வேறு ஆறுகள் இருந்தால் சொல்லுங்கள்.

 இப்போது "சிற்றாறு" பற்றி பார்க்கலாம். ஐந்தருவி ஆறு, குண்டார் ஆறுஅனுமான் நதி, அழுதகண்ணியார் ஆறு, ஆகியவை சிற்றாரின் துணையாறுகள். ஆனால் தாமிரபரணி ஆற்றின் முக்கியமான துணையாறு இந்த சிற்றாறு. 

எண்பது கிலோமீட்டர் பயணம் செய்யும் இந்த சிற்றார் ஆறு  22 ஆயிரம் ஏக்கர் பயிர் சாகுபடிக்கு பாசன நீர் தருகிறது. இறுதியாக மணிமுத்தாறு ஆற்றுடன் கலந்து சங்கமமாகிறது. 

இந்த ஆற்றில் உலக பிரசித்தி பெற்ற ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது. அந்த நீர்வீழ்ச்சியின் பெயர் என்ன ?

மீண்டும் நாளை சந்திப்போம், வணக்கம்.

21ஆக 22

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...