"செய்யாறு"
அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி
ஞானசூரியன் வணக்கம் !
நேற்று நாம் லண்டன் தேம்ஸ் ஆறு பற்றி
பார்த்தோம்.உலகின் மிக சுத்தமான ஆறு என்றும் பார்த்தோம். இன்று நாம்
திருவண்ணாணாமலை ஆறு செய்யாறு பற்றி பார்க்கலாம்.
அதற்கு முன்னால் நேற்றைய கேள்விக்கான
பதிலையும் பார்க்கலாம் லண்டன் தேம்ஸ் நதியைப் போல இந்தியாவில் உள்ள ஆறுகளில்
மிகவும் சுத்தமான ஆறு என்பது எது ?
அப்படி இந்தியாவில் உள்ள ஆறுகளில்
மிகவும் சுத்தமான ஆறு டாவ்கி ஆறு அல்லது உம்மன்காட் ஆறு.
இது வடகிழக்கு இந்தியாவில்
மேகாலயாவில் உள்ளது.
இப்போது நாம் செய்யாறு பற்றி
பார்க்கலாம். இது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓடும் ஆறு. அதுமட்டுமல்ல பாலாற்றின்
துணை ஆறும் கூட. ஜவ்வாது மலையில் உற்பத்தியாகி வங்கக் கடலில் சங்கமம் ஆகும் ஆறு.
இந்த ஆறு உற்பத்தியானது பற்றி சுவையான
ஒரு ஆன்மிக கதை உண்டு. ஒரு பெண் தெய்வம் தனது கையில் வைத்திருக்கும்
சிறு சூலாயுதத்தால் இந்த பூமியில் ஒரு கோடு போட்டது.
சூலாயுதத்தால் போட்ட கோடு ஒரு ஆறு ஆக
மாறுகிறது. அந்த சூலாயுதத்தால் உருவான அந்த ஆற்றில் இறங்கி விளையாடிய குழந்தை தான்
வேலாயுதம் என்னும் முருகன். சூலாயுதத்தால் கோடு போட்ட பெண் தெய்வம்தான் பார்வதி.
அந்த ஆற்றில் இறங்கி விளையாடிய வேலாயுதம் வேறுயாருமல்ல முருகப்பெருமான் தான்.
ஒரு குழந்தை விளையாட உருவான ஆறு
என்பதால் சேயாறு என்று அழைக்கப்பட்டது. அதன் பிறகு அது செய்யார் ஆனது. இதுதான்
இந்த ஆற்றின் பின்புலத்தில் இருக்கும் ஒரு ஆன்மிக கதை.
ஆக இந்த சேயாறு தான் செய்யாறு ஆனது
என்று சொல்லுகிறார்கள்.
செய்யாறு ஜவ்வாது மலையில் உருவாகி செங்கம் அருகில் வட கிழக்கு
திசையில் திரும்பி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பாய்கிறது.
ஜவ்வாது மலையின் பீமன் ஆறும், மிருகண்ட நதி
என்பதும் இதன் துணையாறுகள். இவை போளூர் அருகில் சோழவரம் என்ற ஊரில் செய்யாருடன்
இணைகின்றன.
ஜவ்வாது மலையின் அடிவாரத்தில்
செண்பகத்தோப்பு அணையில் இருந்து உருவாகும் கமண்டல நதியும் அமிர்தி அருகில் வரும் நாகநதி ஆறும் ஆரணி
அருகில் சம்புவராயர் கிராமத்தில் ஒன்றிணைந்து கமண்டல நாகநதி என்னும்
பெயரில் வாழைப்பந்தல் என்ற இடத்தில் செய்யாருடன் இணைகிறது.
பின்னர் வட கிழக்காக ஓடி காஞ்சிபுரம்
நகரை அடுத்த பழைய சீவரம் எனும் ஊரில் பார்வதியுடன் சேர்ந்து வங்கக் கடலில் சங்கமம்
ஆகிறது.
இன்றைய கேள்வி: செஞ்சி ஆறு சங்கராபரணி
ஆறு வராக நதி ஆகிய ஆறுகள் எந்தெந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுகள் என்று
சொல்லமுடியுமா ?
மீண்டும் நாளை சந்திப்போம், வணக்கம்
28ஆகஸ்ட்22
No comments:
Post a Comment