Saturday, August 27, 2022

BHAVANI RIVER - பவானி ஆறு

 

பவானி ஆறு

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !  

நேற்று ஆரணியார் ஆறுபற்றிப் பார்த்தோம். இன்று பவானி ஆறுபற்றிப் பார்க்கலாம். தமிழ் மற்றும் மலையாள ஆறுறு இது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஓடும் ஆறு பவானி. 

நீலகிரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவாகி கேரளாவில் இறங்கி கிழக்கு நோக்கி ஓடி தமிழ் நாட்டில் நுழைந்து காவிரியுடன் சேரும் அதன் துணையாறு.

பவானி ஆறு தனது 90 சதவிகித நீரை விவசாயத்திற்கு தருகிறது. இதன் நீர்வடிப் பகுதியின் பரப்பளவு 0.62 மில்லியன் ஹெக்டர். இதில் 87% தமிழ்நாட்டுக்கு உரியது, கேரளா மற்றும் கர்நாடகத்தில் உரியது 9 மற்றும் 4 சதம் மட்டுமே.

பவானி ஆற்றால் மிகுதியாக பயன்பெறுவது தமிழ் மாவட்டங்கள் கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு. பவானி ஆறு கூடுதுறை என்ற இடத்தில் காவிரியுடன் கூடுகிறது. 

மொத்தம் 12 துணையாறுகள் பவானிக்கு உண்டு. அவற்றில் முக்கியமானவை இரண்டு. மேற்கு வரகார் ஆறு  மற்றும் கிழக்கு வரகார் ஆறு. இதர துணையாறுகள் குந்தா ஆறு, சிறுவாணி ஆறு, கொடுங்கரைப்பள்ளம் ஆறு, குன்னூர் ஆறு. பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள முக்கியமான அணைகள் பவானிசாகர் அணை, மற்றும் கொடிவேரி அணை. 

பவானிசாகர் அணை 8 கிலோ மீட்டர் நீளமும்  40 மீட்டர் உயரமும் கொண்ட மண்அணை. இதில் இரண்டு நீர் மின் உற்பத்தி கேந்திரங்கள் மின்சாரம் தயாரிக்கின்றன. உலகத்தின் மிகப்பெரிய மண்அணைகளில் பவானி சாகர் அணையும் ஒன்று. 

ஆனாலும் பவானி ஆறு தொழிற்சாலைக் கழிவுகள், நகராட்சிக் கழிவுகள், மற்றும் விவசாயம் தொடர்பான கழிவுகள் என்ற மூவகைக் கழிவுகளினால் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது.

இது உங்களுக்கான கேள்வி: பொதுவாக ஆறுகளை மாசுபடுத்தும் மூவகை கழிவுகள் என்னென்ன ?

மீண்டும் நாளை சந்திப்போம் வணக்கம்.

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...