Saturday, August 27, 2022

AYYANAR KOYIL AARU - அய்யனார் கோயில் ஆறு

 


அய்யனார் கோயில் ஆறு

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !

நேற்று அர்ஜுனா ஆறுபற்றிப் பார்த்தோம். இன்று விருதுநகர் மாவட்டத்தின் அய்யனார் கோயில் ஆறு பற்றிப் பார்க்கலாம்.

அதற்கு முன்னால்  நேற்றைய கேள்விக்கு இன்றைய பதில்: விருதுநகர் மாவட்ட்த்தின் பிரபலமான ஆறு அய்யனார் கோயில் ஆறு. பிரபலமான அருவி அய்யனார் அருவி. பிரபலமான கோயில் அய்யனார் கோயில்.

இன்றும் அந்த அய்யனார் கோயில் ஆறு பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பழையாறு, நீராறு என இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் ஆறுதான் அய்யனார் கோயில் ஆறு.

இங்கு அமைந்திருக்கும் அய்யனார் கோயிலை காட்டு அய்யனார் கோயில். இது 500 ஆண்டுகள் பழமையானது.. இந்த அய்யனாருக்கு நீர் காத்த அய்யனார் என்ற பெயரும் உண்டு. இங்கு உள்ள அருவி அய்யனார் அருவி.

இந்த ஆற்றின்மீது அமைந்திருக்கும் அணைக்கு வைத்திருப்பது வித்தியாசமான பெயர். அதன் பெயர்ஆறாவது மைல்  அணைஇந்த அணை இந்த அருவியிலிருந்து ஆறாவது மைலில் இருக்கிறதாம்.

இந்த ஆறாவது மைல் அணை ராஜபாளையம் அதன் சுற்றுவட்டாரத்திற்கும் குடிநீர்  கொடுக்கிறது. பாசான நீர் தந்து பயிர் சாகுபடிக்கு உதவுகிறது.

இந்த அய்யனார் ஆறு இந்த சுற்றுவட்டாரத்தையே சுற்றுலாத்தலமாக மாற்றி உள்ளது.

ஒருகாலத்தில் பக்தகோடிகள் மட்டும்தான் இந்த அய்யனார் கோவிலையும் ஆற்றையும் சுற்றி வந்தார்கள். ஆனால் இன்று சினிமா தயாரிப்பாளர்களும் சுற்றி வருகிறார்கள், சினிமா எடுக்கத்தான்.

இன்னொரு கூடுதலான தகவல் அய்யனார் கோயில்  அருவி, மற்றும் ஆற்றுக்கு அருகில்  இருக்கிறது, மதுரை விமான நிலையம்.

இதுபற்றி என்னிடம் பேச விரும்பினால் பேசலாம். இது நாள் வரை   நான் எழுதிய 108 மரங்கள் பற்றிய நூல் தினம் தினம் வனம் செய்வோம் வாங்காதவர்கள் வாங்கலாம். போன்: 8526195370.

இன்றைய கேள்வி: ஆற்று நீரில் மீன்கள் சாகாமல் இருக்க அதில் எத்தனை சதம் ஆக்சிஜன் இருக்க வேண்டும் ?

நாளை மீண்டும் சந்திப்போம்.

11 ஆக 22

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...