Saturday, August 27, 2022

ARJUNA RIVER - அர்ஜுனா ஆறு

 



                                         அர்ஜுனா ஆறு

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !

நேற்று அரசலார் ஆறுபற்றிப் பார்த்தோம் ! 

இன்று நாம் பார்க்கப்போவது சரித்திரப் பிரசித்தி பெற்ற அர்ஜுனா ஆறு.

அர்ஜுனா ஆறுபற்றிப் பார்ப்பதற்கு முன்னால் நேற்றைய கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம். 

பொன்னியன் செல்வன்நாவல்தான் அதிகம்  அரசலார் ஆறுபற்றி பேசிய பிரபலமான நாவல். 

அதனை எழுதிய பிரபலமான தமிழ் எழுத்தாளர் அமரர் கல்கி. 

இன்றைக்கு அர்ஜுனா ஆற்பற்றிப் பார்க்கலாம். 

அர்ஜுனா ஆறு மகாபாரத காலத்தில் உருவான ஆறு இது. 

பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன். தனது சகோதரர்களுக்காக, உருவாக்கிய ஆறு இது.

அர்ஜுனா ஆறுதான் விருதுநகர் மாவட்டத்திற்கு தண்ணீர் தரும் ஆறு இது. 

இந்த ஆற்றின் மீது இருப்பதுதான் ஆனைக்குட்டம் அணை. 

இது 2940 மீட்டர் நீளமும் 9.5 மீட்டர் அகலமும் கொண்ட மண்அணை இது. ஆனைகுட்டம் அணை 1989 ஆம் கட்டப்பட்டது. 

இந்த அணை இரண்டு மில்லியன் லிட்டர் தண்ணீர் தரும் கொள்ளளவு கொண்டது.

கேள்வி: விருதுநகர் மாவட்டத்தை சுற்றுலாத் தலமாக மாற்ற உதவும் ஆறு, அருவி மற்றும் கோவில் எங்கு உள்ளது ?

இந்த கேள்விக்கான பதிலை  நாளைப் பார்க்கலாம்

வணக்கம்.

10 ஆக 22

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...