அரசலார் ஆறு
அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !
நேற்று நாம் அக்கினியார் ஆறு பற்றி பார்த்தோம், இன்று அரசலார் ஆறு பற்றி பார்க்கலாம்.
நேற்று நான் கேட்ட கேள்விக்கான பதில்: உங்கள் ஊரில் ஓடும் ஆற்று நீரில் மீன்கள் இருந்தால் அது உயிரியல் ரீதியாக உயிருள்ள ஆறு என்று அர்த்தம். 1957-ஆம் ஆண்டு லண்டன் தேம்ஸ் ஆற்றில் ஒரு மீன் கூட இல்லையாம். இன்று தேம்ஸ் ஆற்றில் இருப்பது 120 வகை மீன்கள். இன்று உலகின் மிக சுத்தமான ஆறு தேம்ஸ்தான்.
அரசலாறு ஆறு பற்றி இப்போது பார்க்கலாம். அரசலாறு மிகவும் மாசடைந்த ஆறு என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ஆனாலும் ஒரு காலத்தில் காரைக்கால் துறைமுகமாக ஏற்றுமதி இறக்குமதி செய்ய உதவியாக இருந்தது இந்த அரசலாறு. தாய்லாந்து, ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகள், மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் "எச் எம் டி எஸ்" பண்டகசாலை என்ற பெயரில், கடல் வாணிபம் செய்ய உதவியாக இருந்தது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் நீர்ச் சேவை செய்யும் இரு மாநில ஆறு.
இது புள்ளம்பாடி அருகில் காவிரியில் இருந்து பிரியும் ஐந்து ஆறுகளில் ஒன்று. அது ஓடும் தூரம் 24 கிலோமீட்டர். இது காரைக்காலில் அகலங்கண்ணி என்ற இடத்தில் வங்கக் கடலில் சங்கமமாகிறது.
இன்றைய கேள்வி: ஒரு பிரபலமான எழுத்தாளர், தனது பிரபலமான நாவலில், அரசலாறு பற்றி நிறைய எழுதியுள்ளார், அந்த எழுத்தாளர் யார் ? அந்த நாவலின் பெயர் என்ன ?
மீண்டும் நாளை சந்திக்கலாம்
No comments:
Post a Comment