Saturday, August 27, 2022

ARANIYAR RIVER - ஆரணியார் ஆறு

ஆரணியார் ஆறு

ன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியனின் சுதந்திரதின வாழ்த்துகளும் வணக்கமும் !

நேற்று வைப்பார் ஆறுபற்றிய பல அரிய தகவலகளைப் பார்த்தோம். இன்று நாம் தமிழ், தெலுங்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைக்கு சொந்தமான ஆரணியார் ஆறு பற்றிப் பார்க்கலாம்.

அதற்கு முன்னால்  நேற்றைய  கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம். கேள்வி: தமிழகத்தில் ஓடும் ஒரு ஆற்றுக்கு ராஜநடை என்பது மாதிரிசர்ப்பநடைஎன்று பெயர். அது எந்த ஆறு ? எங்கு ஓடுகிறது இந்த ஆறு ? பதில்: சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமனாதபுரம் மாவட்டங்களில் ஓடும் ஆறு இது. இதன் பெயர் தென் பாம்பார் ஆறு. இதன் இன்னொறு பெயர்தான்சர்ப்பநடை”, ரொம்ப வளைந்து ஓடுமோ ?

இப்போது ஆரணியார் ஆறுபற்றி பார்க்கலாம்.

ஆரணியார் ஆந்திரா சித்தூர் மாவட்டத்தில்   நாராயண வனம் ரிசர்வ் ஃபாரெஸ்ட் எனும் காப்புக்காட்டிலிருந்து புறப்பட்டு 108 கிலோமீட்டர் தூரம் ஓடி திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு ஏரியில் இறங்கி வங்கக்கடலில் சங்கமமாகிறது.

ஆரணியார் ஆற்றின் நீர்வடிப்பகுதியின் பரப்பு 1535 சதுர கிலோமீட்டர். இதில் பாதிப்பகுதி ஆந்திராவைச் சேர்ந்தது.

49 மில்லியன் கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட ஓர் அணை சித்தூரில் உள்ளது. 1958 ம் ஆண்டில் கட்டிய இந்த அணையின் உதவியுடன் 2230 எக்டர் நிலங்களில் பயிர் சாகுபடி செய்கிறார்கள், ஆந்திரா மக்கள்.

பழவேற்காடு போனால் அங்கு ஆரணியார் வங்கக் கடலில் சேரும் முகத்துவாரம் பார்க்கலாம். அங்கு போனால் ஆயிரக்கணக்கான கடல் காக்கைகளைப் பார்க்கலாம்.

ஆரணியார் முகத்துவாரத்திற்கும் எங்கள் பூமி நிறுவனத்திற்கும் நிறைய பழக்கம் உண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பழக்கம் உண்டு. அங்கு ஆழித்திட்டு என்ற இடத்தில் கிட்டத்தட்ட, ஐம்பதாயிரம் அலையாத்தி மரக்கன்றுகளை  உற்பத்தி செய்து நடவு செய்தோம். ஆனால் அவற்றை காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்தால் இன்றும் வருத்தமாய் உள்ளது.

சென்ற வாரம்கூட ஆரணியாற்றைக் கடந்து வந்தபோது எனக்கு ஆழித்திட்டும் அழிந்துபோன மாங்குரோவ் செடிகளும் நினைவில் வந்து போயின.

15 ஆக 22    

  

 

 

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...