Saturday, August 27, 2022

AMBULIYAR RIVER - அம்புலியார் ஆறு

 


அம்புலியார் ஆறு

     அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !

சில ஆறுகளின் பெயர்களைச் சொல்லும்போது இது தமிழ்நாட்டின் ஆறுகளா என்று கூட  நினைக்கத் தோன்றுகிறது. அம்புலியார் ஆறு, அப்படித் தெரிகிறதா என்று பாருங்கள்.

அப்படி ஒரு ஆறுதான் இது. அது பற்றித்தான் இன்றைக்கு நான் சொல்லப் போகிறேன். பாரதி பாட்டில் எழுதவில்லை என்றால் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருனையைக் கூட நாம் மறந்திருப்போம். 

அம்புலியார் ஆறு புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி நகரில் உற்பத்தி ஆகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி தாலுகாவில், கொடிவயல் என்னும் இடத்தில் பாக் ஜலசந்தியில் (Palk Strait) வங்கக் கடலில் சங்கமமாகிறது.

பூனைக்குட்டியார் ஆறு, வெல்லுண்ணியார் ஆறு  மற்றும் மருதங்குடியார் ஆறு இவை எல்லாம் அம்புலியார் ஆற்றின் துணை ஆறுகள்.

702.58 சதுர கிலோமீட்டர் நீர்வடிப்பகுதி பரப்பினை உடைய சிறிய ஆறு இது.

அம்புலியார் ஆறு, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், தென்கிழக்கு திசையில் 48 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செய்யும் ஆறு.

ஆற்று நீரில் மீன்கள் இல்லை என்றால் அது உயிரியல் ரீதியாக இறந்த ஆறு என்கிறார்கள். 1957 ம் ஆண்டு

ஒரு ஆற்றை அப்படி அறிவித்தார்கள். அந்த ஆறு எந்த ஆறு ?

நாளை உங்ளை சந்திக்கிறேன் அந்த  இறந்த ஆற்றின் பெயருடன்.

07 ஆக 22

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...