அக்னியார் ஆறு
அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் நேற்று ஆறு பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்கப்போவது அக்கினியார் ஆறு.
உயிரியல் ரீதியாக மரணம் அடைந்த ஆறு என 1957ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆறு எது என்று நான் கேட்டிருந்தேன் நேற்று. அதற்கு சரியான பதில், தேம்ஸ் ஆறு. லண்டன் மாநகரின் பிரபலமான ஆறு.
இனி அக்கினி ஆறு பற்றிய ஆச்சர்யமான செய்திகளைப் பார்க்கலாம்.இது ஒரு சிறிய ஆறு தான். இதன் நீர்வடிப்பகுதி 4089 சதுர கிலோ மீட்டர் தான். ஆனால் இது எட்டு அணைக்கட்டுகளுக்கும், 1280 ஏரிகளுக்கும், 24073 ஏக்கர் பயிர் சாகுபடி பரப்புக்கும் தண்ணீர் தந்து உதவுகிறது.
அதுமட்டுமில்லாமல் ஆண்டுதோறும் சராசரியாக 90 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவு தண்ணீரை வங்கக் கடலுக்கும் தானமாக தந்து உதவுகிறது.
கிராண்ட் அணைக்கட்டுக் கால்வாய், வலது, இடது நரியார் ஆறுகள், மஹாராஜ சமுத்திரம் ஆறு ஆகியவை இதன் துணையாறுகள்.
இதனை எதிர்நோக்கி இருக்கும் சூழல் பிரச்சினைகள் அதிகமான அளவில் இந்த நீரில் கரைந்து இருக்கும் நைட்ரேட் மற்றும் குளோரைடு உப்புகள், மண் அரிப்பு மற்றும் முறையற்ற மணல் எடுப்பு.
இதனால் பயன்பெறும் மாவட்டங்கள், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் திண்டுக்கல். அக்னியாறு தெற்கு கீரனூரில் உற்பத்தியாகி, பாக் ஜலசந்தியில் வங்க கடலில் சங்கமமாகிறது.
உங்களுக்கு இன்றைய கேள்வி : ஒரு ஆறு உயிரியல் ரீதியாக மரணமடைந்ததா இல்லையா என்று சுலபமாக கண்டு பிடிப்பது எப்படி?
மீண்டும் நாளை இதற்கான பதிலுடன் நான்
உங்களை சந்திக்கிறேன், வணக்கம் !
08 ஆக 22
No comments:
Post a Comment