கொண்டாடப்பட வேண்டிய
மனிதர்
யாதவ் மொலாய் பேயங்
யாதவ் மொலாய் பேயங் 1963 ம் ஆண்டு
பிறந்தவர். இந்தியாவின் காடுகளுக்கான மனிதர்
என்று அழைக்கப்படுகிறார்.
பிரம்மபுத்திராவின் ஆற்றுப்படுகையில்
தனிமனிதனாக 1360 ஏக்கர் நிலப்பரப்பில்
காடுகளை உருவாக்கி உள்ளார்.
இதனை அவர் பெயரிலேயெ
மோலாய் காடுகள் என்று
அழைக்கிறார்கள்.
இந்த மொலாய் காடு அசாம் மாநிலத்தில் உள்ளது.
இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்.
2015 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது தந்து
கவுரவித்தது இந்திய அரசு.
அசாம் வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
மற்றும் காசிரங்கா பல்கலைக் கழகமும்
இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி
கவுரவித்தன.
ஆனால் கவுரவங்கள் பட்டங்கள்
இவற்றைத் தாண்டி கொண்டாடப்படவேண்டிய
மனிதர் யாதவ் மொலாய் பேயங்.
தே.ஞான சூரிய பகவான்
போன்:8526195370