Sunday, November 14, 2021

BONSUM MANIPPURI TREE - மணிப்புரியின் மாநில மரம் போன்சம் எனும் யூனிங்தாவ் மரம்

 

மணிப்புரியின் மாநில மரம்

  போன்சம் எனும்  யூனிங்தாவ் மரம் /

UNINGTHOU TREE / BONSUM TREE

My Dear  Friends! Good Morning !

யூனிங்தாவ்என்றும்போன்சம்என்றும் அழைக்கப்படும் இந்த மரம்தான் மணிப்பூா் மாநிலத்தின் அரசு மரம்.

மரத்தின் பொதுப் பெயா்யூனிங்தாவ் ( UNING THOU)

தாவரவியல் பெயா்போபி ஹெயினிசியானா( PHOEBE  HAINE SIANA)

தாவரக் குடும்பம் : லாரேசியே ( LAURACEAE)

ஆங்கிலப் பெயா்  / பொதுப் பெயா்அங்கோரியா, போன்சம்.

 

பரவி இருக்கும் இடங்கள்

உயரம் குறைவான பகுதிகளில் வளரும் இந்த மரம் பரவி இருக்கும் முக்கியமான நாடுகள், இந்தியா, பூட்டான் மற்றும் மலேசியா.

 

அடிமரம் மிகுந்த உயரமான மரங்கள்

குறிப்பிடும்படியான உயரமாக வளரும் இந்த மரங்கள் அதிகபட்சம் 45 மீட்டா் உயரமும், 6 மீட்டா் குறுக்களவும் கொண்டவையாக தென்படுகின்றன, மரத்தின் பட்டைகள், தடிமனாகவும், கருமையான சாம்பல் நிறத்திலும். இதன் மரக்கட்டைகள் மஞ்சள் நிறமாகவும் இருக்கின்றன.

இலைகள், கிளை   நுனிகளில் கொத்துக் கொத்தாக முட்டை வடிவிலும் இலை நுனி மொட்டையாகவும் கூா்மையின்றியும் இருக்கும்.

பூக்கள்:   பருமனான 7.5 முதல் 10 செ.மீ நீளமான காம்புகளில், பூங்கொத்துக்களாக, பூக்கும், மே முதல் செப்டெம்பா் வரையான காலங்களில் அதிகம் பூக்கும்.


இதன் பழங்கள் அல்லது கனிகள், நீள வட்ட வடிவில் கோள வடிவில் இருக்கும்.

பெட்டிகள், கட்டிடங்கள், கட்டுமான சாமான்கள், மேஜை நாற்காலி, ஒட்டுப்பலகைகள், போன்று பலவகையான மரச்சாமான்கள் செய்யவும் பயன்படும் இந்தபோன்சம்மரக்கட்டை..


போன்சம்  – மரங்களின் ராஐா

பொதுவாக தேக்கு மரத்தைமரங்களின் ராஐாஎன்று சொல்லுவார்கள்அதுபோல மணிப்பூா் மாநிலத்தைப் பொருத்தவரை இந்தபோன்சம்மரங்கள்தான்  மரங்களின்  ராஐா,  ”கிங் ஆஃப் டிம்பா்

மணிப்புரி மொழியில்போன்சம்என்றால்டிம்பா் கிங்என்று அா்த்தம்அதனால்தான் இந்த மரத்தை மணிப்பூா் மாநிலத்தின் அரசு மரமாக தோ்வு செய்துள்ளார்கள்.


மிசோ பழங்குடி இளைஞா்கள்

இங்கு வசிக்கும் மிசோ பழங்குடிகளின் இளைஞா்கள் சங்கம், இந்த போன்சம் மரங்கள் பாதுகாப்பில் தீவிரமாக உள்ளார்கள்இந்த இளைஞா் அமைப்பிற்கு யங் மிசோ அசோசியேஷன்என்று பெயா்.


மணிப்புரியில் உள்ள மரங்கள்

தேக்கு, தேவதாரு (பைன்), ஒக், போன்சம், லிகாவோ ஆகியவைதான் முக்கியமான மரங்கள்ஆனாலும் மணிப்பூா் மரங்களின் ராஐா என போன்சம் மரங்களைத்தான் கொண்டாடுகிறார்கள். இவை தவிர மூங்கில், பிரம்பு, ரப்பா், தேயிலை, காப்பி, ஆரஞ்சு  ஏலக்காய் ஆகியவற்றையும் பெருமளவில், மலைப் பகுதியில் சாகுபடி செய்கிறார்கள்.

 

இந்தியாவின் தரமானடிம்பா்மரங்கள்

இந்தியாவின் பிரபலமான டிம்பா் அல்லது மரக்கட்டைக்கான மரங்கள் என்றால்மணிப்பூரின் போன்சம்இல்லாமல் பத்து வகை மரங்களைச் சொல்லலாம்அவை தேக்கு, ரோஸ்வுட், சாட்டின் வுட், சால் வுட், சிசு, மலைவேம்பு, மகோகனி, மல்பெரி, தேவதாரு   (பைன்) மற்றும் பலா.

 

மணிப்புரியின் மக்கள்

மணிப்புரியின்  முக்கியமான மரத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும்போது, அங்கு வசிக்கும் மக்கள் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்மெய்டிஸ்    மற்றும் இரண்டு பெருங்குழுக்களாக இருக்கும் 29 இன பழங்குடி மக்கள்ஆக மொத்தம் மூன்று மூகங்களைச் சோ்ந்தவா்கள் இங்கு வசிக்கிறார்கள்அந்த 29 இன பழங்குடி மக்களை  நாகா்கள் மற்றும்கூக்கிசின்ஸ்என்ற இரண்டு பழங்குடி மூமாகப் பிரிக்கிறார்கள்.

ங்கள் என்று பா்த்தால் 41 %  இந்த த்தினரும், 41%  கிறித்துவ மதத்தினரும், முஸ்லீம்கள் 8 % பேரும் இதரமக்கள் 10 %  பேரும் வசிக்கிறார்கள்.

 

மூன்று பிரபலங்கள்

மணிப்பூா் என்றால், பிரபலமானவை மூன்று, ஒன்று மணிப்பூா் நடனம், இரண்டாவதுபோலோஎன்னும் குதிரை மீதிருந்து விளையாடும் ந்தாட்டம், மூன்றாவது, இந்த போன்சம் என்று சொல்லும் மரங்களின் ராஐா மரம்இன்று நாம் போன்சம்  மரம் பற்றி  பார்க்கப் போகிறோம்.

 

வடகிழக்கு மாநிலம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், தாய்லாந்து, மிசோரம் மற்றும் மியான்மா் நாட்டின் மேற்கு எல்லை ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் மாநிலம்தான் இந்த மணிப்பூா்.

 

காடுகளும் மரங்களும்

மணிப்பூா் மாநிலத்தின் மொத்த பூகோளப் பரப்பில் 78.01  பரப்பில் இருப்பவை காடுகள், வெப்பமண்டல காடுகள், மித வெப்ப மண்டலக் காடுகள் மற்றும் மோண்டேன் வகைக் காடுகள், என மூன்று  வகைகளாக அமைந்துள்ளது.

 

மோண்டேன் காடுகள்

 நடுத்தரமான உயரமுள்ள மலைப்பகுதிகளில் அவற்றின் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப அமைத்திருக்கும் காடுகள்தான் மோன்டேன் காடுகள்நடுத்தரமான உயரமும், குளிர்ச்சியான சூழல்களில், பொதுவாக மரங்கள் அடா்ந்த காடுகளா இருக்கும்அல்லது உயரம் மிகுந்த மலைச் சரிவுகள் புல்வெளிகளாகவும் இருக்கும்.

 

மணிப்புரி  நடனம்

இந்தியாவின் மிக முக்கியமான பாரம்பரிய நடனங்களில் ஒன்று இந்த மணிபுரி நடனம் எனும் ராசலீலாமணிப்புரி நடனத்தின் இன்னொரு பெயா் ராசலீலாகிருஷ்ணன் மற்றும் ராதையின் காதல் நாடக வடிவம்தான் இந்த மணிப்ரி நடனம்.  “வைஷ்ணவம்”  தான் மணிப்பூா்  நடனத்தின் அடிநாதம் மற்றும் பின்புலம்.


போலோவிளையாட்டு

போலோ என்பது குதிரையிலிருந்து விளையாடும் பந்தாட்டம். உலகின் நவீன விளையாட்டு. அதுமட்டுமல்ல நாட்டை ஆளும் அரசர்கள் பங்குபெறும் விளையாட்டுப் போட்டி. போலோ வின் பிறப்பிடம் மணிப்பூா் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ?

மணிபுரியிலிருந்துதான் மேற்கத்திய நாடுகளுக்கு பரவியது என்று சொல்லுகிறார்கள். ”சேகல் கேங்ஐி”   என்பது மணிப்பூர் மொழியில் போலோமணிப்பூரியை ஆண்ட ஒரு ராஐாவால் அறிமுகம் செய்யப்பட்டதுதான் இந்த  ”போலோவிளையாட்டு,

1605 ம் ண்டிலிருந்து இங்கு போலோ புழக்கத்தில் உள்ளது என்கிறார்கள்அந்த சமயம்காகெம்பாஎன்னும் ராஐா மணிப்பூரை ஆண்டு வந்தார்.  அவர்தான் போலோ விளையாட்டிற்கு விதி முறைகளை வகுத்தார்.

மணிப்பூரில் இருக்கும் மூன்று வகையான  ஹாக்கி விளையாட்டுக்களில் ஒன்றுதான்  போலோ என்கிறார்கள் அந்த மாநில மக்கள். 

ஆக மணிப்புரி நடனம், போலோ விளையாட்டு மற்றும் போன்சம் மரம், ஆகியவைதான், மணிப்புரியின் முக்கிய அடையாளங்கள்.

நண்பா்களே! மணிப்பூா் நடனம் பார்த்திருக்கிறீர்களா ? போலோ விளையாடி இருக்கிறீர்களா ? “போன்சம்மரங்களைப் பார்த்திருக்கீறீா்களா? இவை பற்றி கூடுதலான தகவல் தெரிந்திருந்தால் எனக்கும் சொல்லுங்கள்.

 

(WWW.MANENVIS.NIC.IN – FOREST REPOUNEE – ENVIS CENTRE> MANIPUR)

(WWW.EN.M.WIKIPEDIA.ORG – MANIPUR – WIKIPEDIA)

(WWW.BRITANNICA.COM – MANIPUR / HISTORY< GOVERNMENT. MAP  CAPITAL & FACTO “ BRITTANICA)

(WWW.THE MANIPUR DAGE TRIPOD.COM – THE PEOPLE OF MANIPUR)


Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author of this Website,  Phone: +918526195370, Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...