Sunday, November 14, 2021

ALPHONSEA FRUIT TREE OF EASTERNGHATS - கருக்கரம்பை மரம் எனும் அல்போன்சியா பழமரம்


கருக்கரம்பை மரம்

எனும் அல்போன்சியா பழமரம்

ALPHONSEA FRUIT TREE OF EASTERN GHATS

(HARDFRUIT ALPHONSEA, ALPHONSEA SCLEROCARPA, ANNONACEAE)

 

My Dear friends, Good Morning !


தமிழில்கருக்கரம்பைஎன்றும், ஆங்கிலத்தில், அல்போன்சியா முரட்டுப் பழமரம் என்ற அா்த்தத்தில் அல்போன்சியா ஹார்ட் புரூட் என்றும் சொல்லும் இந்த மரம், தென்னிந்தியாவில், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்கு சொந்தமான மரம், தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவிற்கு சொந்தமானது, சீத்தா பழ குடும்பம்அனோனேசி” (ANNONACEAE) அல்லது  ”சுகா் அப்பிள்” (SUGAR APPLE) குடும்பத்தைச் சேர்ந்தது.

 

வெள்ளி மலை, கல்ராயன் மலை

தமிழ்நாட்டிற்கு சொந்தமான மரம், கிழக்குத் மலைத் தொடரில் வெள்ளி மலை மற்றும் கல்ராயன் மலைப்பகுதிகளில் இந்த மரங்கள் காணப்படுகின்றனகடல் மட்டத்திலிருந்து 680 முதல் 740 மீட்டா் உயரமான பகுதிகளில் இந்த மரங்கள் நன்கு வளா்கின்றன.

 

 ஆண்டி அக்ஸிடெண்ட்டுகள்

அல்போன்சியா பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட்டுகள், பற்றிய ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன, இந்த ஆராய்ச்சிகளின் முடிவில் இந்த பழமரம், பட்டைகளில் நமது ஆரோக்கியத்திற்கு உதவும் மருந்துகள் பற்றிய முடிவுகள் எடுக்க முடியும் எனத் தெரிகிறது.

 

அழிந்துவிடும் அருகிவரும் மரம்

ஒரு பிரபலமான மரம் அல்லஆனால் தென்னிந்தியாவில் தமிழ்நாட்டிற்கு சொந்த மரமாகக் கருதப்படுகிறதுகுறிப்பாகக் கிழக்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் கல்ராயன் மலைப் பகுதிக்கு உரிய மரம் இதுஇந்த மரத்தினை அழித்துவரும், அருகி வரும் மரமாக (ENDEMIC TREE) தென்இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் அறிவித்துள்ளார்கள்.

 

சிறிய மரங்கள்

அல்ஃபோன்சியா மரங்கள் 10 முதல் 15 மீட்டா் உயரம் வளரும் சிறுமரங்கள், சாதாரணமாக 6 முதல் 8 மி.மீ. நீளமான காம்பில், ஒன்றின் மேல் ஒன்றாக குறித்த இடைவெளியில் அமைந்த ஈட்டி வடிவ இலைகளை உடையவைகாடுகளில் தாழ்வான தலைப்பகுதியை உடைய மரங்களாக வளரும். .

 

இருபாலின பூக்கள்

பசுமையும் மஞ்சளும் கலவையான நிறத்தில் அமைந்த இருபாலினத்தில், அமைந்த சிறு காம்புடன் கூடிய அல்லது இலைகளின் எதிர்ப்புறமாக அமைந்த பூங்கொத்துக்களாக (CYMES) மார்ச் முதல் மே மாதம் வரை பூக்கும்.

 

பழங்கள்

மஞ்சள் நிறத்தில், 5 முதல் 8 மி.மீ நீளமுள்ள காம்பில், 6 விதைகளையுடைய, 3 முதல் 5 பழங்கள் கொத்தாக காய்க்கும், ஏப்ரல் மாதங்களுக்குப் பிறகு பழங்களாக முதிர்ச்சி அடையும்.

 

பரவி இருக்கும் இடங்கள்

கேரளாவில், மலப்புரம், மலபார், தமிழ்நாட்டில், கோயம்புத்தூா், தா்மபுரி, திண்டுக்கல், மதுரை,  நீலகிரி, சேலம், தேனி, திருநெல்வேலி, திருவண்ணமலை, வேலுார் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் நிறைய மரங்களைப் பார்க்கலாம்.

அழகா் மலை, கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்ராயன் மலை, பச்சைமலை, போதமலை, சித்தேரி மலை, சிறுமலை, ஏலகிரி, தா்மபுரி மலை, பிரான் மலை, தீர்த்த மலை, செஞ்சி மலை, மற்றும் ஜவ்வாது மலைகளிலும் இந்த மரங்கள் உள்ளன.

தென்னிந்தியா, ஸ்ரீலங்கா, கிழக்குத் தொடா்ச்சி மலையில் வெள்ளிமலை, மற்றும் கல்ராயன் பகுதி, மேற்குத் தொடா்ச்சி மலையில் தெற்கு சகாயத்திரி, திருநெல்வேலி மலைப்பகுதிகள், மற்றும் அகத்தியா் மலைப் பகுதிகளிலும் இந்த  மரங்கள் பரவியுள்ளன.

 

ஆந்திரப் பிரதேசத்தில்

தலக்கோனா மலைகள் உதயகிரிப் மலைகள், சேஷாசலம் மலைகள், விசாகப் பட்டினம், விஐயநகரம், மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்கள் மற்றும் சா்வதேச அளவில்இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் மியான்மா் பகுதிகளிலும் இந்தமரங்கள் பரவியுள்ளன.

 

வேண்டுகோள்

மியாவாக்கி சிறுவனம் அமைப்பவா்கள், மரம் நடும் மர ஆா்வலா்கள், தங்கள் பகுதியில் இந்த மரங்கள் இருந்தால், அவற்றை தங்கள்  நடவுப்ப பணிகளில், இந்தகருக்கிரும்பைமரங்களையும் சோ்த்துக் கொள்ளுமாறு, கேட்டுக் கொள்ளுகிறேன். ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியளர்கள் இது போன்ற பிரபலமாகாத மரங்களை ஆய்வு செய்யும்போது பல புதிய, அரிய பல பயனுள்ள தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

 

(WWW.FLORA.PENN.SULA – INDIACA – ALPHONSEA SOLEROCARDA )

( WWW.FLOWEROFINDIA.NET “ALPHONSEA SELEVOCANPA – HAND – FRUIT ALPHONSEA – FLOWERS OF INDIA)

(WWW.RESEARCHGARE.NET- 2935- – ALPHONSEA SCLEROCARPA THWRITES SPECIES – RESEARCHGARENET)

(WWW.INDAI BIODIVERSITY.ORG – ALPHONSEA SCLEROCARPA THWRITES SPECIES – INDIA BIODIVERSITY PORTAL)

(WWW.VJPPT.ORG – AONOXIOANT ACHVITY OF ALPHONSOQ SCLARPARPA BAR – RJPPD)

(WWW.EN.M.WIKIPEDIA.ORG – “ALPHONSEA SCLERO CARPA – WIKIPEDIA)


Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, of this Website, Phone: +918526195370, Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.


 

 

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...