Wednesday, September 1, 2021

ARJUN TREE,TERMINALIA ARJUNA, COMBRETACEAE

 

நீர்மருது

(NEER MARUTHU, ARJUN TREE,TERMINALIA ARJUNA, COMBRETACEAE)


தாவரவியல் வகைப்பாடு

நீர் மருது பொதுப் பெயர்: அர்ஜூன் ட்ரீ (ARJUN TREE):; தாவரவியல் பெயர்: டெர்மினேலியா அர்ஜூனா (TERMINALIA ARJUNA)தாவரக் குடும்பம்: காம்பிரிட்டேசி (COMBRETACEAE)

மரத்தின் தாயகம் : இந்தியா மற்றும் இலங்கை


My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!


கறி சமைத்து உண்ண ஏற்ற கனி தரும்.சித்த மருத்துவம், ஆயர்வேத மருத்துவம் பாரம்பரிய மருத்துவம் மற்றும் நவீன மரத்துவங்களிலும் பயன்படும்  முக்கியமான மூலிகை மரம் இது.

சட்டென நம் கவனத்தை ஈர்க்கும் மரம். ஒரு முறை பார்த்தால் இது என்ன மரமாக இருக்கும் ?’ என்று திரும்பிப் பார்க்க வைக்கும். கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குப் போனால் சுலபமாக இந்த மரங்களைப் பார்க்கலாம். ஓடைகளில்ஓடைக்கரைகளில் எல்லாம் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கின்றன. தூரத்தில் இருந்துப் பார்த்தாலே தெரியும், வெளுப்பான சாம்பல் நிற மரங்கள். வஞ்சனை இல்லாமல் வளர்ந்திருக்கும்.


மரத்தண்டில் தண்ணீர் சேமிக்கும் கருமருது

ஒரு மரத்தின் வெட்டிய பகுதியிலிருந்து தண்ணீர் பீச்சி அடிக்கிறது அப்படி ஒரு போட்டோ  வாட்ஸ்அப்பில் சுற்றி வந்தது. நிறைய பேரைக் கேட்டு விசாரித்து, வலைத் தளங்களில் துழாவி அதைக் கண்டு பிடித்தேன்.

அதுவும் நீர்மருது மரத்தின் நெருக்கமான சொந்தம் என்று. அதன் பெயர் கருமருது. தாவரவியல் பெயர் டெர்மினேலியா டொமன்ட்டோசா (TERMINALIA TOMENTOSA). 

நன்கு வளர்ந்த மரத்தில் ஒரு முறை வெட்டினால் 4 முதல் 6 லிட்டர் தண்ணீர் பீச்சி  அடிக்குமாம். வனத்துறை அதிகாரிகள் காடுகளில் அலையும் போது தாகம் எடுத்தால் கருமருது எங்கே என்று தேடுவார்களாம்.


வேரில் 2000 லிட்டர் தண்ணீர் சேமிக்கும் மரம்

 ஒரு மரம் தனது வேரில் 2000 லிட்டர் வரை தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளகிறது. அதைப் பார்த்து நான் அசந்து போனேன். அது நம்ம ஊர் இலந்தைமாதிரி சாதாரணமான ஒரு பழ மரம்.

 இந்த மரத்திலிருந்து பழக்கூழ், பழச்சாறு என்று தயாரித்து அந்த பழத்திற்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்துவிட்டார்கள், பிரேசில் நாட்டில். இந்த மரத்தின் பெயர் உம்பு.


தண்டு பகுதியில் தண்ணீர் தொட்டி வைத்திருக்கும் மரம்

 அதே போல ஆப்ரிக்க நாட்டு பேவோபாப்”; மரத்தின் நடுப்பகுதி உளுத்து உதிர்ந்து போக அதன் நடுப்பகுதி வாட்டர் டேங்க் மாதிரி செயல்படுகிறது. அதில் மழைக் அதிக பட்சமாக ஒரு லட்சத்து இருபதியாயிரம் லிட்டர் வரை தேங்கி இருக்குமாம். ஆப்ரிக்க பாலைவனப் பகுதி பறவைகள் மற்றும் விலங்குகள் தாகம் எடுத்தால் இந்த மரங்களைத் தேடுமாம்.

 

நீர்மருது மரத்தைக்கூட வெட்டிப் பார்க்கலாம் நீர் வருதா என்று  சோதிக்க.

 

நீர்மருது மரத்தின் பலமொழிப் பெயர்கள்

தமிழ்ப் பெயர் : நீர்மருது (NEER MARUTHU)

ஆங்கிலம்: அர்ஜூன் ட்ரீ (ARUN TREE)

இந்தி: அர்ஜூன் (ARJUN)

தெலுங்கு: தெல்ல மத்தி (THELLA MATHTHI)

கன்னடம்: நீர்மத்தி (NEER MATHTHI)

மலையாளம்: வெண்மருது (VENMARUTHU)

சமஸ்கிருதம: ; வீரவிருக்ஷா (VEERA VRIKSHA)

குஜராத்தி: சட்டடோ (SATATO)

தாவரவியல் பெயர்  :  டெர்மினேலியா அர்ஜூனா (TERMINALIA ARJUNA)

தாவரக்குடும்பம்  : காம்பிரிட்டேசி (COMPRETACEAE)

மரத்தின் வகை  : பெரிய மர வகை


மருத்துவப் பயன் 

கொலஸ்ட்ரால் மற்றும் சக்கரையைக் கட்டுப்படுத்ம்

மருத்துவப் பயன்: ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்குதல், சிறுநீரகக் கோளாறு, ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத் தாழ்வை சரிசெய்தல், கருப்பைக் கட்டிகள், மாதவிடாய்களில் ஏற்படும் மிகையான ரத்தப் போக்கு, கபம், பித்த தோஷங்களை நிவர்த்தி செய்தல், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் சக்கரையைக் கட்டுப்படுத்துதல், போன்றவற்றிற்கு மருந்துகள் செய்ய உதவுகிறது, நீர்மருது.

நீர் மருதின் பட்டைப் பொடி பொட்டலங்களாக  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது. இது ரத்தத்தில் கொல்ட்ரால் அளவைக் குறைக்கிறதாம்.


மரங்கள், கடினமானவை.

சுரங்கங்களில் தூண்களாக நிறுத்தலாம் 

பலவித மரச் சாமான்கள் செய்யலாம். மரங்களில் நீர்மருது ஒரு சகலசகலாவலலவன்.

வண்டிகள், படகுகள், பொதுவான கட்டுமானச் சாமான்கள், வேளாண்மைக் கருவிகள், தண்ணீர்த் தொட்டிகள், மின்சாரக் கம்பங்கள், பிளைவுட்சுரங்கத் தூண்கள் போன்றவற்றைச் செய்யலாம்.


பல பயன் தரும் 

அற்புதமான எரி பொருள். கரி மற்றும் விறகாகப் பயன்படுத்தலாம்.

காப்பித் தோட்டங்களில் நிழலுக்காக வளர்க்கலாம். தென்னை மற்றும் ஆரஞ்சுத் தோட்டங்களில் ஊடு பயிராகவும் வளர்க்கலாம்.

இலை, பட்டை, காய்களை  தோல்பதனிட பயன்படுத்தலாம்.

இவற்றை நட்டு வளர்ப்பதன் மூலம் களர் உவர் நிலங்களை சீர் திருத்தலாம். மணல்சாரி நிலங்களில் மணல் மேலும் பரவாமல் தடுக்கலாம்.

இதன் இலைகளும் கனிகளும் கால்நடைகளுக்கு பிடித்தமான தீவனம். தழைகள் டஸ்ஸார் பட்டுப்புழு வளர்க்க பயன்படுத்தலாம்.


மண்ணில் ஈரப்பசை இருக்க வேண்டும்

ஈரப்பசை மிக்க வண்டல் மண் ஏற்புடையது

பூக்கள்: ஏப்ரல் மே மாதங்களில் பூபூத்து பிப்ரவரி மே மாதத்தில்

ஏற்ற மண் : ஈரப்பசை மிக்க வண்டல் மண்

நடவுப் பொருள் : விதைவேர்க்குச்சி

மரத்தின் உயரம்  :  30 - 60  மீட்டர்.


 Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...