Sunday, September 12, 2021

HOW TO PLAN YOUR HOME GARDEN ?, வீட்டுத்தோட்டம் அமைக்க திட்டமிடுவது எப்படி ?

 


GARDENING TIPS – SERIAL

வாங்க தோட்டம் போடலாம் – தொடர்

வீட்டுத்தோட்டம் அமைக்க திட்டமிடுவது எப்படி ?

HOW TO PLAN YOUR HOME GARDEN ?


My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!

“ஒரு வேலையை  திட்டமிடாமல் செய்கிறோம் என்றால் அதில் கண்டிப்பாய் தோல்வியடைய திட்டமிடுகிறோம் என்று அர்த்தம்” என்கிறார் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் என்ற அறிஞர்.

ஒரு தோட்டம் போடும்போது எதை எல்லாம் திட்டமிட வேண்டும் என்று சொல்லுவதுதான் இந்த சிறு குறிப்புகளின் நோக்கம்.

 

1. அடுத்த வீட்டுக்காரருக்கு, எதிர் வீட்டுக்காரருக்கு இதனால் தொந்தரவு ஏற்படுமா என்று பாருங்கள். அப்பார்ட்மெண்ட் என்றால் சம்மந்தப்பட்ட அசோசியேஷன்களில் அனுமதி பெறவேண்டும். அதை முதலில் செய்யுங்கள்.

2. வீட்டுத் தோட்டம் அமைக்க தெரிந்திருந்தால், நீங்களே செய்யலாம். அல்லது அதற்கான வேலைகளைச் செய்யத் தெரிந்த ஆர்க்கிடெக்ட்களின் உதவியினைப் பெறலாம்.

3. நமக்கு பிடித்தமான செடிகளை நர்சரிகளில் வாங்கி வந்து நமது வீட்டில் நடுவது ஒருவகை தோட்டம்.

4. இருக்கும் இடவசதிக்கு ஏற்ப திட்டமிட்டு நமக்கு விருப்பமான செடிகள், கொடிகள், மற்றும் மரங்களை வடிவமைத்து நடுவது இரண்டாவது வகை.

5. காலம் காலமாக கிராமத்தில் வீட்டுத் தோட்டங்களில் அரளி நந்தியாவட்டம், பவழமல்லி, முல்லை, மல்லிகை, ஜாதிமல்லி, போன்ற பூவகைகள், முருங்கை, கறிவேப்பிலை, போன்று சமையலுக்கு உதவும் சிறு மரங்கள், நெல்லி, கொய்யா போன்ற பழ மரங்கள், நொச்சி ஆடாதொடா, துளசி, கற்பூரவள்ளி போன்ற மூலிகைச் செடிகளையும் வளர்ப்பார்கள்.

6. ஒரு தோட்டத்தில் கொஞ்சம் பூச்செடிகள், கொஞ்சம் காய்கறிச்செடிகள், கொடிகள், மூலிகைகள் என திட்டமிடலாம். இதுதான் ஒரு கிராமத்து தோட்டத்தின் மாதிரி.

7. தோட்டம் போடுவதற்கான இடத்தில் எங்கு பூச்செடிகள் வைக்கலாம் ? எங்கு பழச்செடிகள் வைக்கலாம் ? எங்கு காய்கறிச்செடிகள் வைக்கலாம் ? எங்கு மூலகைச் செடிகள் வைக்கலாம் என முன்னதாக, சின்னதாகத் திட்டமிடலாம்.

8. ஒரு சிறிய வரைபடம் தயாரிப்பதன் மூலம்  நமக்கு இருக்கும் இடவசதி மற்றும் நீர்வசதிக்கு ஏற்ப,  மற்றும் பண வசதிக்கு ஏற்ப எத்தனை செடிகள்,  ? எத்தனை கொடிகள் ? எத்தனை மரங்கள் தேவை என கணக்கிட்டு திட்டமிடலாம்.

9. தோட்டத்தில் போதுமான இடவசதி இருந்தால், சதுரம், செவ்வகம், வட்டம் என பல்வேறு வடிவங்களில் நமது கற்பனைத் திறன் மற்றும் அழகுணர்ச்சிக்கு  ஏற்ப வடிவமைப்பை திட்டமிடலாம்.

10. நமது வீட்டுத் தோட்ட்த்தை அழகாக திட்டமிட இதுதான் எல்லை என்று எதுவும் இல்லை. வானம்தான் இதற்கு எல்லை என்று சொல்லுவேன் நான்.

அன்பின் இனிய நண்பர்களே !  தோட்டத்தை  திட்டமிட வேறு என்னவெல்லாம் தேவை ?

உங்கள் அனுபவங்களை எனக்கு சொல்லுங்கள். அடுத்த கட்டுரையில் மீண்டும் சந்திக்கலாம்.

பூமி ஞானசூரியன், தொலைபேசி எண்: +91 8526195370

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.


  

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...