Tuesday, September 14, 2021

DRAGON FRUIT CAN WE GROW ON THE TERRACE?, அது என்ன டிராகன் ஃபுரூட் மாடியில் வளர்க்கலாமா ?

 



GARDENING TIPS – SERIAL

வாங்க தோட்டம் போடலாம்தொடர்

அது என்ன  டிராகன் ஃபுரூட்

மாடியில் வளர்க்கலாமா ?

DRAGON FRUIT CAN WE GROW ON THE TERRACE?


My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!

நான் முதன்முதலாக மலேசிய நாட்டில்தான் இந்த டிராகன் பழத்தை பார்த்தேன், சாப்பிட்டேன். அதன் சுவை, உருவம் மற்றும் வடிவம் எல்லாம் எனக்கு  ஆச்சரியமாக இருந்தது.

அதற்கு பின்னால் ஏறத்தாழ ஐந்தாறு ஆண்டுகள் கழித்து வாணியம்படியில் ஒரு பழக்கடையில் பார்த்தேன். கொஞ்சம் பழங்கள் வாங்கிவந்து என் குடும்பத்தினருக்கும் அறிமுகப்படுத்தினேன். அவர்களும் ஆச்சரியப்பட்டார்கள்.

சூட்டோடு சூடாக டிராகன் பழங்கள் பற்றிய  கட்டுரை ஒன்றை எழுதி வாட்ஸ்அப்பில் வெளியிட்டேன். டிராகன் பழக் கன்றுகளை இந்தியாவில் குஜராத்தில் கிடைக்கும் என எழுதியிருந்தேன்.

சமீப காலமாய் விவசாய தோட்டம், வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அனைத்திலும் வளர்க்கலாம் இந்த டிராகன் ஃபுரூட் எனும் டிராகன் பழச்செடியை.

இது புதிய பழச்செடி. நமக்கு அறிமுகம் இல்லாத பழச்செடி. வெளி நாட்டு பழச்செடி. நம்ம ஊரிலும் நன்றாக வளரும் பழச்செடி.

ஒரு கிலோ 100 ரூபாய்க்கு பக்கமாக விற்பனை ஆகும் பழம். வைட்டமின் “சி” “பி” ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகம் உள்ள பழம்.

இதனால் இந்த டிராகன் பழச்செடிபற்றிய பல  அடிப்படையான பல செய்திகளை சேகரித்தேன். இருபது சதவிகித கவனம் தந்தால் போதும் எண்பது சதவிகித பலன் கிடைக்கும் என்று தெரிந்துகொண்டேன்.

 

இன்று அகில உலக அளவில் டிராகன் பழங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு வியட்னாம்.

டிராகன் பழங்களில் ஆன்டியாக்சிடென்ட்டுகள், நார்ச்சத்துக்கள், வைட்டமின் “சி” மற்றும் “பி” மற்றும் இதர சத்துக்களுக்கும் நிரம்ப உள்ளன.

 

இதில் நான்கு வகைகள் உள்ளன.

1. சிவப்பு தோலுடன் வெண்மையான தசையுடன் கூடியது ஒறு வகை. இதன் தாவரவியல் பெயர் ஹைட்ரோசெரியஸ் அண்டேட்டஸ் (HYDROCEREUS UNDATUS)

2. சிவப்பு தோலும் சிவப்பு தசையும் உடையது இன்னொரு வகை. இதன் தாவரவியல் பெயர் ஹைட்ரோசெரியஸ் பாலிரைசஸ் (HYDROCEREUS POLYRHIZUS)

3. சிவப்பு தோலும் ஊதா தசையும் உடையது மூன்றாவது வகை. இதன் தாவரவியல் பெயர் ஹைட்ரோசெரியஸ் காஸ்டாரிசென்சிஸ் (HYDROCEREUS COSTARICENCIS)

4. மஞ்சள் தோலும் வெண்மையான தசையும் உடையது நாங்காவது வகை. இதன் தாவரவியல் பெயர் ஹைட்ரோசெரியஸ் காஸ்டாரிசென்சிஸ் (HYDROCEREUS COSTARICENCIS)

டிராகன் பழச்செடிகள் ஒரு ஆண்டில் பூக்க ஆரம்பித்த 30 முதல் 35 நாட்களில் பழங்கள் அறுவடைக்கு தயார் ஆகும்.  

20 ஆண்டுகள் வரை பலன் தரும். மதிப்புக்கூட்டும் தொழில்களுக்கு சிறந்தது. 

டிராகன் பழச்செடிகளை தமிழ் நாட்டிலும், கேரளாவிலும் நிறையபேர் மாடித்தோட்டங்களில் 

டிராகன் பழங்களுடன் அறிமுகம் இருந்தால் உங்கள் அனுபவங்களை எனக்கு சொல்லுங்கள். அடுத்த கட்டுரையில் மீண்டும் சந்திக்கலாம்.

பூமி ஞானசூரியன், தொலைபேசி எண்: +91 8526195370

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.

 

 

 

 

 

 

 

3 comments:

முரளிதரன் ராமராவ் said...

அருமையான தகவல்கள்.அது சரி டிராகன் புரூட் என்று ஏன் பெயர் வந்தது என்பதையும் சொல்லிவிடுங்கள்.

Anonymous said...

Interesting and useful message about dragon fruit

Gnanasuriabahavan Devaraj said...

டிராகன் பழ தோல்முள் நெருப்பு ஜுவாலை மாதிரி இருக்கும், பழத்தின் மேல் இருக்கும் தோல்செதில்கள் டிராகன் உடம்பின் மீது இருக்கும் செதில்கள் மாதிரி இருக்கும். அதனால்தான் அதற்கு அந்தப் பெயர். தைவான், மியான்மர், மற்றும் ஸ்ரீலங்காவில் திரும்பிய பக்கம் எல்லாம் டிராகன்தான். எங்கள் தெக்குபட்டு தெருமுனைகளில் கூட டிராகன் நடமாட்டம் தெரிகிறது. நான் கூட என் தோட்டத்தில் 8 டிராகன்கள் வைத்திருக்கிறேன்.

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...