PREPARATION OF ORGANIC LIQUID MANURE
இயற்கை முறையில்
திரவ உரம் தயாரிப்பு
அதிக செலவில்லாமல்,
சிக்கனமாக நமக்கு சுலபமாக கிடைக்கும் மூன்று வகையான பழங்களையும் கொஞ்சம்
வெல்லமும் இரு கோழிமுட்டையும் சேர்த்து ஒருவாரம் புளிக்க வைத்து
தயாரிக்கும், திரவ நுண்ணுயிர் உரம் இது,
எல்லா தாவரங்களையும் வளர்க்க உதவும் இந்த
நூண்ணுயிர் கரைசலை எப்படி தயரிப்பது என்று உங்களுக்கு
சொல்லுகிறேன்.
இந்த
கரைசலில் உள்ள நுண்ணுயிர்கள் அங்கக அமிலங்களை உருவாக்குகின்றன. இந்த அங்கக அமிலங்கள்
அங்ககப்பொருட்களை விரைவாக மக்க வைத்து அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு கிடைக்கச்
செய்கின்றன.
தேவைப்படும் பொருட்கள்
1.
கனிந்த வாழைப்பழம் 1 கிலோ
2.
கனிந்த ப்ப்பாளிப்பழம் 1 கிலோ
3.
கனிந்த பூசணி பழம் 1 கிலோ
4.
நாட்டு கோழிமுட்டை – 2
5.
நாட்டு வெல்லம் – 1 கிலோ
6.
தண்ணீர் – 100 லிட்டர்
7.
100 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாய் அகன்ற டின் அல்லது பாரல்
செய்முறை
1.
மூன்று வகை பழங்களையும் தனித்தனியாக, சிறுசிறு
துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அவற்றைத் தனித்தனியாக பிசைந்து கூழாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
2.
அந்த மூன்று வகையான பழக்கூழையும் 100 லிட்டர் கொள்ளளவு
கொண்ட டின்னில் போட்டுக் கொள்ளுங்கள்.
3.
நாட்டு கோழிமுட்டைகள் இரண்டையும் உடைத்து ஓட்டுடன் பழக்கூழுடன் போட்டுக்கொள்ளுங்கள்.
4.
நாட்டு வெல்லத்தை நன்கு உடைத்து பொடியாக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து
கட்டிமுட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். அந்த வெல்லக்கரைசலையும் பழக்கூழில் ஊற்றுங்கள்.
5.
அத்துடன் நூறு லிட்டர் பேரல் ஏறத்தாழ நிறையும் அளவு தண்ணீரை ஊற்றிக்
கொள்ளுங்கள்.
6.
பின்னர் நீளமான, உறுதியான ஒரு குச்சியினால் அந்த
கரைசலை வலது பக்கம் இஃபட்து பக்கம் என மாற்றிமாற்றி சுழற்றி நன்கு கலக்குங்கள்.
7.
பேரலுக்கு மூடி இல்லை என்றால் கவலை வேண்டாம், பருத்தி
நூலில் நெய்த ஒரு பெரிய துண்டு அல்லது வேட்டி அல்லது மெல்லிய போர்வை துணியினால் மூடி கட்டுங்கள்.
8.
அந்த திரவ நுண்ணுயிர் அடங்கிய பேரலை நிழலான ஒரு இடத்தில் அல்லது
ஒரு மரத்தடியில் வையுங்கள்.
9.
தினசரி அந்த பேரலைத் திறந்து அந்த நீளமான குச்சியினால் வலது பக்கம் ஒரு
30 முறையும் இடது பக்கம் ஒரு 30
முறையும் சுழற்றி நன்கு கலக்குங்கள். பின்னர் மறுபடியும் மூடி வைத்துவிடுங்கள்.
10.
ஒரு வாரம் கழித்து இந்த கரைசலில் போதுமான நுண்ணுயிர்கள் பெருகி இருக்கும். இப்போது இந்த திரவ நுண்ணுயிர் உரம் செடிகளுக்கு
ஊற்ற தயார்.
எப்படி பயன்படுத்துவது ?
1.
இந்த நுண்ணுயிர் திரவ உரக்கரைசல் ஒரு லிட்டருக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில்
கலந்து எல்லா வகையான செடிகளுக்கும் ஊற்றலாம்.
2.
செடிகளின் அளவைப்பொறுத்து அரைக்குவளை, ஒரு குவளை
என ஊற்றலாம், ஒன்று அல்லது இரண்டு லிட்டர் கூட ஊற்றலாம்.
3.
இந்த வளர்ச்சி ஊக்கி நுண்ணுயிர் உரக்கரைசலை 15 நாட்களுக்கு ஒருமுறை ஊற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.
4.
இந்த நுண்ணுயிர் திரவ உரக்கரைசலை ஏழு நாட்களுக்கு பிறகு முழுவதுமாக பயன்படுத்த
வேண்டுமா என்ற சந்தேகம் எழும். இதனை ஒரு மாதம் வரை கூட வைத்திருந்து
பயன்படுத்தலாம்.
இந்த
திரவ நுண்ணுயிர் உரக்கரைசலை தயாரித்து பயன்படுத்திப்
பாருங்கள். உங்கள் அனுபவத்தை எனக்கு சொல்லுங்கள்.
பூமி
ஞானசூரியன், தொலைபேசி எண்: 8526195370
.
No comments:
Post a Comment