GARDENING TIPS – வாங்க தோட்டம் போடலாம்
டெசர்ட் ரோஸ் செடிகளை பரமரிப்பது எப்படி
?
HOW TO GIVE CARE TO DESERT ROSE
PLANTS ?
உலகம்
முழுவதும் டெசர்ட் ரோஸ் என சொல்லப்படும் பாலைவன ரோஜா ஒரு பத்து பன்னிரண்டு அடி உயரத்துடன்,
பாட்டில் மாதிரி வளரும் விச்சித்திரமான குறுமரம்.
ஏலியன் தீவு என சொல்லப்படும் ‘சொகோத்ரா ஐலண்ட்’டிற்கு சொந்தமான மரம் மற்றும் சகாரா
பாலைவன மரம் எனும் பெருமைக்குரியது.
நிறைய
இந்திய வீடுகளில் இதனை கற்றாழை வகை செடி என்று நினைக்கிறார்கள். உண்மையில் இது அரளி
செடியின் உறவுக்கார செடி. ‘அப்போசயனேசி’ தாவர
குடும்பத்தை சேர்ந்தது. விச்சித்திரமான அதன் உருவத்தினால் கவரப்பட்டும் இதனை ஒரு பிரமிப்புடன்
வளர்க்கிறார்கள்.
குறைவான
கவனிப்பு, குறைவான தண்ணீர் தேவை, குறைவான ஊட்டச்சத்து, தேவை, மற்றும் நிறைவான சூரிய
ஒளியின் உதவியுடன் ஒரு ஆண்டிற்கு ஒரு அடி உயரம் வளரும் அரியவகை மரம்.
ஐம்பது
முதல் அறுபது ஆண்டுகளில் பத்து முதல் பன்னிரண்டு அடி உயரம் வளர்ந்து ரோஜா பூக்களை நினைவுபடுத்தும்படியான
ஊதா, மஞ்சள், வெள்ளை, மற்றும் ஆழ்ந்த சிவப்பு
நிறத்தில் அழகான பூக்களைத்தரும் மரம்.
வீட்டுத்
தோட்டத்தில் நிலத்திலும் தொட்டியிலும் போன்சாய் செடியாகவும் வைத்து வளர்க்க ஏற்றது
இந்த டெசர்ட் ரோஸ் மரம்.
கவனிக்க
வேண்டியவை
1.
நல்ல சூரிய ஒளியும் கற்றோட்டமும் கிடைக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.
2.
செடியினை எங்கு நட்டாலும் நல்ல வடிகால் வசதி வேண்டும்.
3.
வடிகால் வசதியை மேம்படுத்த நிலத்து மண்ணுடன், மணல், செம்மண், மண்புழு உரம் ஆகியவற்றை சமமாகக் கலந்து தொட்டி மண்ணை
தயார் செய்யலாம்.
4.
தொட்டியின் அடிப்பகுதியில் கால்பாகம் சரளையும் பெரு மணலும் கலந்து நிரப்பினால் அதிகப்படியான
தண்ணீர் வடிய வசதியாக இருக்கும்.
5.
டெசர்ட்ரோஸ் செடிகளுக்கு தண்ணீர் கொடுப்பதில்
“நீர் மறைய நீர் கட்டு” எனும் உத்தியை கடைபிடிக்கலாம்.
6.
அதிகப்படியான தண்ணீர் எப்போதும் தங்கி இருந்தால் அதன் வேற்கள் அழுகி செடிகள் இறந்து
போகும்.
7.
மழைக்காலத்தில் மழை இல்லாத போது மட்டும் தண்ணீர் கொடுத்தால் போதுமானது.
8.
மண்புழு உரம், அமுதக்கரைசல், பஞ்சகவ்யம், வேஸ்ட் டிகம்போசர் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றினை
மாதம் ஒருமுறை அல்லது தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.
9.
டெசர்ட்ரோஸ் பற்றிய கூடுதலான தகவல்களை தெரிந்துகொள்ள “DESERT ROSE” என்ற ஆங்கில பெயரிலும்
:”ADENIUM OBESUM” என்ற தாவரவியல் பெயரிலும் வலைத்தளத்தில் தேடலாம்.
அன்பின்
இனிய நண்பர்களே உங்கள் தோட்டத்தில் “டெசர்ட்ரோஸ்” வைத்திருக்கிறீர்களா ? உங்கள் அனுபவத்தை
எனக்கு சொல்ல முடியுமா ? அதுபற்றிய முக்கிய தகவல் தெரிந்திருந்தால் என்னோடு பகிர்ந்து
கொள்ளுங்களேன்.
பூமி
ஞானசூரியன், தொலைபேசி எண்: +91 8526195370
No comments:
Post a Comment